Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருதல்

இனியொரு... by இனியொரு...
10/19/2020
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

அண்மைக் காலமாக மத்திய சுகாதார அமைச்ச்சும் மருத்துவர்களும் தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி செய்வதையும் அதை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தடுத்து நிறுத்த முயன்று வருவதையும் பார்க்கிறோம். தெல்லிப்பளையை தவிர்ந்த அனைத்து விருத்தியடைந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளும் மத்திய அரசாங்கத்தின் ஆளுகையின் கீழ் வருகின்றன.

அதனால் அந்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்குப் புற்று நோய் சிகிச்சைக்குரிய விலை உயர்ந்த மருந்துகள் மத்திய அரசாங்கத்தின் நிதியில் போதிய அளவு வழங்கப்படக்கூடியதாக உள்ளது. அதேவேளை மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் சிறிதளவு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீடானது தெல்லிப்பளையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உரிய மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு போதுமானதாக இல்லாத நிலையில் தான் தமிழ் மருத்துவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் அவலநிலையை போக்குவதற்கு மத்திய அரசின் கீழ் இந்தப் பிரிவை கொணடு வருவதற்கு ஆதரவு வழங்கி வருகிறார்கள். ஒருபுறம் 13வது அரசியல் சாசன திருத்தம் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை தீர்க்கவில்லை என்றும் அதை முற்றாக நிராகரிக்கிறோம் என்று கூறும் தமிழ் கட்சிகள் மறுபுறம் 13வது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கபபட்ட அதிகாரத்தை குறைப்பதாக தெல்லிப்பளை புற்றுநோய் பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவது இருக்கிறது என்று கூறுவது முரண்நகையாக உள்ள அதேவேளை தமிழ் சமூகத்தில் இன்று காணப்படும் பாரிய பலவீனத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

அதாவது சிங்களத் தலைவர்கள் சிங்கள சமுகத்தில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனையை பெற்றுக் கொண்டு சாமர்த்தியமாக செயல்படும் போது தமிழ் தலைவர்கள் சுகாதாரத்துறை சார் நிபுணர்களை கலந்தாலோசிக்கது புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் கஷ்டங்களை அதிகரிக்கும் வகையில் செயல்படுவது முறையாகுமா ? இந்த நாட்டில் இருதேசங்கள்: சிங்கள தேசம் தமிழ் தேசம் இருக்கிறது என்று கூறிவரும் தமிழ் தலைவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழர் தேசம் ஒன்றை அமைப்பதற்குரிய உண்மையான முயற்சிகளை ஒற்றுமைப்பட்டு இனியாவது முன் எடுக்க வேண்டும். அதாவது தமிழ் அரசியல் தலைவர்களுக்கு மதியுரை வழங்க கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆலோசனை சபை (Thinktank) ஒன்றை நாட்டிலும் புலத்திலும் உள்ள புத்திஜீவிகள், பேராசிரியர்கள் மற்றும் துறை சார் நிபுணர்களைக் கொண்டு அமைக்க வேண்டும்.

2012 ம் ஆண்டில் குடித்தொகை கணிப்பீடுகளின் மூலம் தமிழர்கள் விரைவில் (2028 ம் ஆண்டளவில்) இலங்கையின் முதலாவது சிறுபான்மை நிலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று நான் எதிர்வு கூறிய காலத்தில் இருந்து தமிழர்களுக்கான ஆலோசனைச்சபையின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறேன். மதிப்புக்குரிய முதுபெரும் தலைவர் சம்பந்தரின் காலத்திலேயே அனைத்து தமிழ் கட்சி தலைவர்களும் இணைந்து ஒரு ஆலோசனை சபையை அமைக்க வேண்டும். அமைக்கத் தவறினால் ஈழத்தில் தமிழினத்தை சூழவுள்ள பேராபத்தில் இருந்து தப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே மறுபடியும் தமிழ் தலைவர்களை எதிர்வரும் 5 வருடங்கள் தொடரவுள்ள ஆட்சியின் கீழ் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தமிழ் நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய

அசௌகரியங்களையும் சிரமங்களையும் தவிர்க்கும் வகையில் தெல்லிபபளை புற்றுநோய் பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியை எதிர்க்கவேண்டாம் என்று விநயமாக கேட்டுக் கொள்கிறேன். மேலும் மதிப்புக்குரிய சம்பந்தர் உட்பட அனைத்து தமிழ் கட்சித் தலைவர்களையும் ஒற்றுமையாக தமிழர் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பவதற்காகவும் சுகாதாரத்துறை உட்பட தமிழர்களை பாதிக்கும் அனைத்து துறைகளிலும் மதியுரை வழங்க கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆலோசனை சபை ஒன்றை அமைக்க முன்வருமாறு மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்
19.10.2020

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பொலீவியாவில் அமெரிக்க எதிர்ப்பியக்கம் மாபெரும் வெற்றியை நோக்கி..

பொலீவியாவில் அமெரிக்க எதிர்ப்பியக்கம் மாபெரும் வெற்றியை நோக்கி..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...