சோடிக்கப்பட்ட வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலையாகியிருப்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்று தமிழகக் கொள்ளைக்காரி ஜெயலலிதாவிற்கு சோடனை செய்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா. இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் ஊடாக அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நெருங்கிச் செல்வதால் போக்கிடமின்றி அலையும் டக்ளசிற்கு ஜெயலலிதாவின் விடுதலை மகிழ்ச்சியளித்துள்ளது.
அப்பாவி மக்களைச் சூறையாடிய டக்ளஸ் தேவானந்தாவிற்கு மட்டுமல்ல உலகின் ஒவ்வொரு கொள்ளைக்காரர்களுக்கும் ஜெயலலிதாவின் விடுதலை மகிழ்ச்சியளித்துள்ளது. டக்ளஸ் ஜெயலலிதாவிற்கு விசிலடிபதன் காரணம் மகிந்தவும் ராஜபக்சக்களும் ஒரு நாள் விடுதலையாவர்கள் என்ற நம்பிக்கையிலாகவும் இருக்கலாம்.
இந்தியாவிற்கு வெளியிலிருந்து ஜெயலலிதாவின் பாதங்களில் சரணடையும் ஒரே அரசியல்வாதி டக்ளசாக மட்டும் தான் இருக்கமுடியும். ஆட்சிக்கு வந்த அனைத்துப் பேரினவாத அரசுகளுடனும் ஒட்டியிருந்து டக்களஸ் குழு நடத்திய கொள்ளை முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
கொள்கை கோட்பாடுகள் அற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், சீமானின் கட்சியும் ‘ஈழத் தாய்’ எனப் புகழ் பாடிய ஜெயலலிதாவிடம் மகிந்தவும் டக்ளசும் இனிமேல் லஞ்சம் கொடுக்காமலே ஆலோசனை பெற்றுகொள்ளலாம்.