Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

கர்நாடாகவில் பிளவுண்ட இந்துத்துவாவும்,தமிழகம் வந்த ராமராச்சிய ரதயாத்திரையும்:வி.இ.குகநாதன்

இனியொரு... by இனியொரு...
03/25/2018
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

                          அண்மைய நாட்களில் இந்தியாவில் இந்துமதம் தொடர்பாக இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. முதலாவதாக கர்நாடகத்தில்  ஏறத்தாழ ஆறு மில்லியன் அளவிலான மக்கள் தாம் வலுக்கட்டாயமாக இணைத்து வைக்கப்பட்டிருந்த இந்துமதத்திலிருந்து பிரிந்துசென்று தமது பழைய மதமான “லிங்காயத்து”  எனும் மதத்திற்குச் சென்றுள்ளனர்.  இரண்டாவது நிகழ்வாக ராமராச்சியம் அமைப்போம் எனக்கூறி ரதயாத்திரை ஒன்று தமிழகத்திற்குள் வந்துசேர்ந்துள்ளது.  இதில் முதலில் லிங்காயத்துக்கள் பிளவு பற்றிப்பார்ப்போம்.

லிங்காயத்து:

லிங்காயத்துக்கள் பிரச்சனை தொடர்பாக அறிந்துகொள்ள நாம் இந்துமதத்தின் தோற்றம் பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.  பொதுப்புத்தியில் இந்துமதமானது ஏதோ ஆதிமுதலே தோன்றி நிலைத்துள்ளது என்பது போன்ற கருத்து வலுவாகத்  திணிக்கப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் இந்துமதம் என்ற பெயரே ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வரும்வரை  இருந்ததில்லை.  பொதுவாகவே நம்மிடம்  “விவேகானந்தர் சிக்காக்கோவில் இந்துமதப் பெருமைகளைப் பேசி, இந்துமதப்பெருமைகளை அமெரிக்கா வரைக் கொண்டுபோய்ச்சேர்த்தார்” என்ற ஒரு கருத்து உள்ளது. 1893 இல் சிக்காகோவில் இடம்பெற்ற  உலகச் சமயங்களின் பாராளுமன்றம் (Parliament of the World’s Religions ) என்ற கூட்டத்தில் விவேகானந்தர் பிராமணியமதத்தின் சார்பாளராகவே பங்குபற்றியிருந்தார் (Logo படம் காண்க).  ஆங்கிலேயரே தமது மேலாண்மை வசதிக்காக இங்குள்ள பல்வேறுபட்ட வழிபாட்டு நம்பிக்கையாளர்களை முகமதியாளர் (முசுலீம்கள்), முகமதியாளரல்லாதோர் என இரு வகைப்படுத்தியிருந்தா்கள். பின்னர் இந்த முகமதியாளரல்லாதோர் என்ற பிரிவிற்கே இந்துக்கள் எனப்பெயரிட்டிருந்தனர்.   இதனை இந்துக்களின் உலகத்தலைவரான (ஜகத்குரு) சங்கரச்சாரியாரே தனது தெய்வத்தின்குரல் ((சான்றிற்கு படம் காண்க) புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்  .   அதேபோன்று  வெள்ளைக்காரர்கள் சிந்து நதிக்கு இந்தப்பக்கமிருந்த 450 வகையான மதங்களை உள்ளடக்கி (இசுலாம் நீங்கலாக) அதற்கு  Zindoo   என ஆவணங்களில் குறிப்பிட்டதாகவும், அதுவே மருவி Hindu  எனப்பெயர் பெற்றதாகவும் அக்கினிகோத்திர தாத்சாச்சாரியார் (இந்து மதம் எங்கே போகிறது, பகுதி 96 ) கூறுகிறார்.  இந்துமதம் என்ற பெயரிற்கு முன்னரே இங்கிருந்த பலவகைப்பட்ட வழிபாடுகளிலும் பார்ப்பன ஆதிக்கம் ஊடுருவிய பின்பு அவை பிராமணியமதம் என்றே அழைக்கப்பட்டது. இவ்வாறு வலுக்கட்டாயமாக இந்துமதத்தில் இணைக்கப்பட்ட ஒரு பிரிவினரே மீண்டும் லிங்காயத்துக்கள் எனப் பழையநிலைக்குத் திரும்பியுள்ளனர்.

     இங்கு லிங்காயத்துக்களுடன் வீரசைவர்கள் என்ற பிரிவினைச் சேர்த்து நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது.  இந்த வீரசைவர்கள் என்போர் பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு மற்றைய இந்துக்கள் போன்றிருப்பவர்கள், ஆனால் லிங்காயத்துக்கள் என்போர் பின்வரும் அடிப்படைகளில் இந்துக்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்.

  1. லிங்காயத்துக்கள் வர்ணாச்சிரம சாதிஅமைப்பினை ஏற்றுக்கொள்ளாதவர்கள். அதனாலேயே சாதி-வர்ணக்  கோட்பாடுகளை வலியுறுத்தும் வேதங்கள், மனுதருமம், பகவத்கீதை போன்றவற்றையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
  2. லிங்காயத்துக்கள் பார்ப்பனர்களை மத குருமார்களாகவோ அல்லது சமசுகிரத மொழியினை வழிபாட்டுமொழியாகவோ ஏற்றுக்கொள்ளாதவர்கள்.
  3. லிங்காயத்துக்கள் பால்நிலை வேறுபாடுகள் பார்ப்பதில்லை.  இங்கு ஆண்களிற்குள்ள அதே வழிபாட்டுரிமை பெண்களிற்கும் உண்டு.

பெண்களையும் சூத்திரர்களாகப் பார்க்கும் இந்துமனநிலை இங்கில்லை.

  1. லிங்காயத்துக்கள் சிலை வழிபாட்டினையோ அல்லது கோயில்களையோ அல்லது பார்ப்பனரின் முன்னைய வழிபாடான தீயினையோ வழிபடுவதில்லை. அவர்களைப்பொறுத்தவரையில் “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்பதுபோல் தமது உடலையே கோயிலாகக் கருதுவார்கள்.
  2. பார்ப்பனர்கள் தமது வயிற்றுப்பிழைப்புக்காக நம்பியிருக்கும் யாகம்,கோமம் போன்ற சடங்குகளை லிங்காயத்துக்கள் பின்பற்றுவதில்லை.  இவர்களின் திருமணம், மரணம் போன்ற சடங்குளில் கூட நெருப்பு மூட்டிச் சடங்குகள் செய்வதில்லை (இறந்தவர்களை எரிப்பது நீங்கலாக).

                                        இத்தகைய வேறுபாடுகளாலேயே லிங்காயத்துக்கள் இந்துமத கூட்டிலிருந்து விலக நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்துவந்தனர். அதனையே கர்நாடக மாநில அரசு இன்று நிறைவேற்றிவைத்துள்ளது.   நடுவண் அரசு இது தொடர்பாக என்னவிதமான முடிவுகளை எடுத்தாலும் லிங்காயத்து மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இனி என்றுமே இந்துக்களாகத்  தம்மைக் கருதப்போவதில்லை என்பது மட்டும் உறுதி.

ஏற்கனவே தமிழர்களிலும் இவ்வாறான  முயற்சிகள்  தமிழை முன்நிறுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து மறைமலை அடிகளார், வள்ளலார் போன்றோரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.  இதற்காகவே பார்ப்பனர்களால் வள்ளலார்  சோதியில் கலந்து காணமற்போகச் செய்யப்பட்டிருந்தார்.   அதே போன்று லிங்காயத்துக்கள் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த கல்புரி, கவுரி லிங்கேசு போன்ற அறிஞ ர்களும் கர்நாடாகவில் இந்துத்துவா வாதிகளால் சுடப்பட்டிருந்தனர்.  லிங்காயத்துக்கள் பிளவையடுத்து மீண்டும் தமிழகத்திலும் இந்தக் குரல்கள் கேட்கத்தொடங்கியுள்ளது.

ரதயாத்திரை:

இதே நேரத்தில் ராமர் ராச்சியம் அமைப்பதற்கெனக் கூறிக்கொண்டு 1990 களில் பாபர் மசூதியை இடித்து முழு நாட்டையே கலவரமாக்கிய இந்துத்துவா கும்பல் மீண்டும் ஒரு ரதயாத்திரை ஆரம்பித்து பல மாநிலங்களூடாகத்  தமிழகத்திற்கு  வந்து சேர்ந்துள்ளது.  விசுவ இந்து பரிசத்து (VHP)  என்ற RSS இன் துணை அமைப்பினால் பின்வரும் நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு  இந்த ஊர்வலம் நடாத்தப்பட்டுவருகின்றது.

  1. பாபர் மசூதியிருந்து இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும்.
  2. ராமயணம் பாடசாலைகளில் முக்கிய பாடமாக கற்பிக்கப்படவேண்டும்.
  3. விடுமுறைநாளாக ஞாயிற்றுக்கிழமைப் பதில் ராமரிற்கு உகந்த நாளான வியாழன் அறிவிக்கப்படவேண்டும்.

மேற்கூறிய காரணிகளை அடிப்படையாகக்கொண்டு ராமராச்சியம் அமைப்போம் என்றே இந்த ரதயாத்திரை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

ராமராச்சியம்:

ராமராச்சியம் எவ்வாறானது எனத் தமிழர்களில் பலரிற்குத் தெரிந்திருக்காது, ஏனெனில் ராமரின் முடிசூட்டு விழாவுடன் கம்பராமயணம் முடிந்துவிடும். ராமரின் அரசாட்சி எவ்வாறானது என்பதற்கு வால்மீகி ராமயணத்திற்கே செல்லவேண்டும்.  ராமராச்சியத்தின் முக்கிய பகுதியே உருத்திரகாண்டத்தில் இடம்பெறும் சம்புகன் வதமேயாகும்.  வர்ணாசிரமக்  கோட்பாட்டின்படி சூத்திரர் தவம் செய்யவோ அல்லது தமது அறிவைப் பெருக்கிக்கொள்ளவோ  தகுதியில்லாதவர்கள்.   சம்புகன் எனும் சூத்திரன் ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு கடும் தவம் புரித்தான்.  அப்போது சூத்திரர் எவ்வாறு தவம் செய்யலாம் என ஆத்திரமுற்ற பார்ப்பனர்கள் அரசனான ராமனிடம் முறையிட, ராமன் கொதித்தெழுந்து சம்புகனிடம் சென்று நீ என்ன வர்ணம்? எனக்கேட்க, அவனோ நான் சூத்திரன்தான் என்கிறான்.  உடன் ராமன் தவக்கோலத்தில் தலைகீழாகத்  தொங்கிக்கொண்டிருந்த சம்புகன் தலையினை வெட்டி வீழ்த்தினான். இதுவே சம்புக வதத்தின் (English translation of chapter 73–76 done by Hari Prasad Shastri in his book “The Ramayana of Valmiki) சுருக்கம்.  இத்தகைய வருணாச்சிரம ஆட்சியே ராமராச்சியம்.

இதைவிடவும் கூடுதலாக ராமராச்சியத்தில் ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்தால் சீதையின் தீக்குளிப்பினைக் காணலாம். அரசிக்கே ராமராச்சியத்தில் இந்த நிலை எனில் ஏனைய பெண்களின் நிலை எவ்வாறிருந்திருக்கும் என உய்த்துணர்ந்து கொள்ளுங்கள். இத்தகைய ராமராச்சியத்தை ஏற்படுத்தவே இந்த ரதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

       பாரதீய சனதாக் கட்சியைப் பொறுத்தவரையில் ஏற்கனவே 1990 களில் இவ்வாறான ஒரு ரதயாத்திரையின் மூலம்  இந்துத்துவா உணர்வினைத்தூண்டி கணிசமானளவு வாக்குகளைப் பெற்றிருந்தது.  இன்று அக்கட்சி மோடி தலமையில் மத்தியில் ஆட்சியிலிருக்கும் போதும், அக் கட்சியின் மக்கள் விரோதக்கொள்கைகளால் இழந்துள்ள செல்வாக்கினை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காகவே இத்தகைய ரதயாத்திரை, ராமர்கோயில் போன்ற நடவடிக்கைகள் ஊடாக மதக்கலவரங்களைத் தூண்டி மீண்டும் ஆட்சிக்கு வர நினைக்கிறது.  இவ்வாறான நிலையில் தமிழகம் வந்துள்ள ரதயாத்திரையினைத்  தமிழகத்தின் பல்வேறு அமைப்புக்களும், கட்சிகளும் எதிர்க்கின்றன.  தமிழக அரசோ ரதம் செல்லும் பாதைகளில் 144 தடையுத்தரவு பிறப்பித்து மக்களின் எதிர்ப்பினை மழுங்கடிக்க முயன்றுவருகின்றது.

பொதுவாகக் கலவரங்களைத் தடுப்பதற்குப் பிறப்பிக்கப்படும் 144 தடையுத்தரவானது இங்கு கலவரத்தை ஏற்படுத்தவென வரும் ரதயாத்திரைக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.  இந்த ரதயாத்திரை ஒரு மதம்சார்பான ராமராச்சியம் உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படுவதால் இது இந்தியாவின் மதச்சார்பற்ற  அரசியலமைப்பிற்கு எதிரானது.   மேலும் உச்சநீதிமன்றத்தில்  இந்த பாபர்மசூதி- ராமர் கோயில் விவகாரம் நிலுவையிலுள்ளதால், ராமர் கோயல் கட்டவென ஊர்வலம் மேற்கொள்வது நீதிமன்ற அவமதிப்புமாகும்.   இவ்வாறான முறைகேடுகளிற்கு மத்தியில் மேற்கொள்ளப்படும் இந்த ரதயாத்திரைக்கு மத்திய-மாநில அரசுகள் வழங்கிவரும் ஆதரவானது சட்டவிதிகள் எல்லாம் பாமரமக்களிற்கேயன்றி, ஆள்வோரிற்கல்ல என மீண்டுமொருமுறை சான்றுப்படுத்தியுள்ளது.

    இவ்வாறான அரசுகளின் ஒத்துழைப்புக்களிற்குப்பின்னரும் கூட மக்களின் எதிர்ப்பிற்குப்  பயந்து ரதமானது யாத்திரை போல  மெதுவாகச் செல்லாமல்,  மாறாக ஆள் நடமாட்டங்கள் குறைந்த வீதிகளில் காவல்துறையின் பாதுகாப்புடன் வேகமாக ஓடி மறைவதனைக் காணோளிகளில் காணும்போது,  இது ஒரு ரத-ஓட்டப்போட்டி போன்றே காணப்படுகிறது.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
RSS ரஜினி – BJP கமல்

RSS ரஜினி - BJP கமல்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...