அமெரிக்கா உட்பட சர்பவதேச நாடுகளை இன்றைய இலங்கை அரசு வென்றெடுத்திருப்பதாக ‘தமிழ்த் தேசியவாதிகள்’ விசனம் கொள்ளும் அதேவேளை அரச ஆதரவாளர்கள் புழகாங்கிதமடைகிறார்கள்.
அமெரிக்காவையும் அதன் அணியைச் சேர்ந்த நாடுகளையும் வென்றெடுத்து தமக்குச் சார்பாகத் திருப்புவது என்றால் என்ன? மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வதா? உலகம் முழுவதையும் இரத்த நிலமாக மாற்றும் அமெரிக்கா யுத்தப்பிரபுக்களுக்கு மனிதாபிமானம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள், தனது உள் நாட்டிலேயே கறுப்பின மக்களின் மீதும் ஏழைகளின் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அரசிற்கு நல்லிணக்கத்தில் என்ன அக்கறை?
மைத்திரிபால அரசு அமெரிக்க அரசிற்கு இலங்கையை முழுமையாக விற்பனை செய்வதற்கு இணங்கியுள்ளது என்பதே அமெரிக்க ஆதரவிற்கான காரணம்.
ராஜபக்ச என்ற சர்வாதிகாரியின் ஆட்சி காலத்தில் அமெரிக்கா எண்ணிய அனைத்தையும் நிறைவேற்ற முடிந்திருக்கவில்லை. சீனா ரஷ்யா போன்ற நாடுகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு தனது சொந்த வியாபாரப் பேரரசைக் கட்டியெழுப்புவதிலேயே ராஜபக்ச குடும்பம் முனைப்புக்காட்டியது.
போரில் பெற்ற வெற்றியை பேரினவாததோடு கலந்து தனது ஆட்சியை எந்தத் தடையுமின்றித் தொடரலாம் என கணக்குப் போட்டிருந்த ராஜபக்சவை அமெரிக்கா நீக்கிவிட்டுத் தனது அடிமைகளை ஆட்சியில் அமர்த்தியுள்ளது.
இங்கு அமெரிக்காவே இலங்கை அரசை வென்றெடுத்துள்ளது! நமது கோமாளி ‘ஆய்வாளர்கள்’ இலங்கை அமெரிக்காவை வென்றெடுத்துள்ளது என்றும் அது எப்படி என்றும் அனல் பறக்க விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை அரசை அமெரிக்கா வென்றெடுத்துள்ளது என்பதைவிட அதனைத் தனது அடிமையாக மாற்றியுள்ளது என்பதே உண்மை.
இலங்கை என்ற நாடு தற்செயலாக புலிகளின் ஆதரவால் ராயபக்ஸ என்ற குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு அது சீன ஆதரவு கொள்கையை கடைப்பிடிக்கத்தொடங்கியது.
இலங்கையை மறுபடியும் தம் வசம் கொண்டுவருவதற்கு புலிகளை அளிப்பதற்கு உதவி புாிந்து அங்கே இனவளிப்பு நடக்க ஊக்குவித்து அவை முழுவதையும் படம் பிடித்து அதைவைத்து ஐ.நா அது இதுவென்று மிரட்டி புலம்பெயா் புலிகளையும் உசுப்பேற்றி இறுதியில் ராஜபக்ஸவை நட்புடன் தோற்கவைத்து போா்க்குற்றத்திலிருந்து தப்பவைத்து சா்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக தமிழருக்கு ஒரு சில அதிகாரங்களை வழங்கி (நடக்கப்போவது )அவா்கள் வாயையும் மூடவைத்து.
இதெல்லாம் முன்பே திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம் அவா்கள் எப்போதும் போல் ஆட்டுகிறாா்கள் இந்த மூன்றாம் உலக நாட்டின் தலைகள் ஆடுகின்றன்.
இதில் வென்றெடுக்க ஒரு மாங்காயும் கிடையாது சும்மா போக்கிாி சிங்கள தலைமைகளை புகழாரம் சூடாதீா்கள்.