இலங்கை இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளுக்கு ஊழலையும் கொலைக் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்திய பிரித்தானியா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் அந்த நாடுகள் சிதைவடையும் போது உற்சாகமடைந்துவிடுகின்றன. ஆப்கானிஸ்தானும், நைஜீரியாவும் அற்புதமான ஊழல் நாடுகள் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரன் பெருமிதமடைந்த சம்பவத்தை பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 தனது ஒளிப்படக் கருவிக்குள் பதிவுசெய்துள்ளது.
லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊழலுக்கு எதிரான உச்சி மாநாடு தொடர்பாக பிரித்தானிய மாகாராணியுடன் பேச்சுக்கொடுத்த போது ஆப்கானிஸ்தானும் நைஜீரியாவும் அற்புதமாகச் சிதைவடைந்துள்ள நாடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மிக அற்புதமான ஊழல் நாடுகளான ஆப்கானிஸ்தானிலும் நைஜீரியாவிலுமிருந்து அந்த நாடுகளின் தலைவர்கள் பிரித்தானியாவை நோக்கி வருகைதருகின்றனர். இந்த இரண்டு நாடுகளுமே உலகின் மிகப்பெரிய ஊழல் நாடுகளாக இருக்கக்கூடும் என அவர் தனது உரையாடலில் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையில் போர்க்குற்றவாளிகளை பிரித்தானிய அரசு தண்டிக்கும் என மக்களை இன்றும் ஏமாற்றிவரும் ஏகாதிபத்திய ஒட்டுக்குழுவான பிரித்தானியத் தமிழர் பேரவையும் அதன் ஆதரவுக் குழுக்களும் நேற்று ஊழலுக்கு எதிரான உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்த மைத்திரிபால சிரிசேனவிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தன.
இலங்கை அரசின் பின்பலமாக பிரித்தானிய அரசு செயற்பட அதன் ஒட்டுக்குழுவான பிரித்தானிய தமிழர் பேரவை இலங்கை அரசிற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய கேலிக்கூத்து ‘அற்புதமானது’.