இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு வழங்கப்படும் என இலங்கை அரசும் இலங்கை அரச சார்புக் கட்சியாகத் தொழிற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துவருகின்ற. தீர்வுத் திட்டத்தில் அடிப்படை உரிமைகளில் எவை வழங்கப்படும் என இதுவரையில் எந்தத் தரப்பும் கூறவில்லை எனினும், சமஷ்டி மற்றும் வடக்குக் கிழக்கு இணைப்பு என்பன கிடையாது என சுமந்திரன் எம்.பி வெளிப்படையாகக் கூறியுள்ளார். தெற்கைப் பொறுத்தவரைக்கும் புதிய அரசமைப்புப் பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி சுயாதீனமாகச் செயற்படப்போவதாக அத்துரலிய ரத்தன தேரர் போன்றோரும், மகிந்த சார்ந்த தீவிர இனவாதிகளும் கூறி வருகின்ற போதிலும், சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகளைக்கூட பிரிவினை என நிராகரிப்பதே அவர்களின் நோக்கம்.
அரசியல் சாசனத் திருத்தம் தொடர்பான மோதல்களும் உரையாடல்களும் தொடர்கின்ற அரசியல் சூழலின் மறு பக்கத்தில் எந்த எதிர்ப்பும் இன்றி இலங்கை சுறையாடப்படுவதற்கான அனைட்த்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்றைய இலங்கை தெற்காசியாவின் பல்தேசிய வர்த்தகத்தின் பரிமாற்று மையமாக மாற்றமடைவதற்கான அனைத்துச் செயற்பாடுகளையும் இலங்கை அரசும் அதன் பின்புலத்தில் செயற்படும் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளும் முன்னெடுத்துவருகின்றன.
மேற்கு ஏகாதிபத்திய நாடுகளின் நலன்களுக்காக மட்டும் வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் என்ற வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு அந்த நாடுகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் இலங்கை அரசின் அரசியலமைப்புத் திருத்தத்திற்கும் தொடர்புகள் உள்ளதாக ஆழ்ந்து கவனிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசியல் அமைப்பில் திருத்தப்படும் குறைந்தபட்ச உரிமைகளை ஜீ.எஸ்.பி பிளஸ் ஐப் பெற்றுக்கொள்வதற்கான முன் நிபந்தனைகளாக மேற்கு ஏகாதிபத்தியங்கள் முன்வைக்கின்றன.
கொழும்பின் புற நகர்ப் பகுதிகளின் ஜீ.எஸ்.பிளஸ் உருவாக்கும் தொழில் அடிமைகளின் அவலம் தொடர்பாக தமிழ் சிங்கள இனவாதிகள் குரலெழுப்ப மாட்டார்கள்.
ஐ.நா சபை ஏனைய நாடுகளில் ஏற்றுக்கொண்டுள்ள சுய நிர்ணைய உரிமையின் குறைந்தபட்சக் கூறுகளுமற்ற சில திருத்தங்கள் ஐரோப்பிய நாடுகளின் முன் நிபந்தனை ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்டதான மாயையை இலங்கை அரசு முன்வைக்கும். இதனால் இலங்கையைச் சுரண்டுவதற்கான தற்காலிக அமைதியை மட்டுமே இலங்கை அன்னியத் தரகுகளுன் மேற்கு நாடுகளும் எதிர்பார்க்கின்றன.
That is a plus for Sri Lanka. Country traumatized by 30 or more years of war. Rapid economic growth. The Sinhala populace also wants to change families. Rajapakse to Sirisena. Senaratna. Gunawardene. Dissanayake. I stop with that. Nawin..