Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம் : சானக ரூபசிங்க

இனியொரு... by இனியொரு...
10/27/2020
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
8
Home பிரதான பதிவுகள் | Principle posts

மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையர்களோடு பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், மியன்மார், நேபாளம், இந்தியா மற்றும் மொங்கோலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இளைஞர்கள் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கணக்கெடுப்புக்களில் ஈடுபட்டோம்.

எனது வாழ்நாளில் ஒருபோதும் பாதம் பதித்திராத மன்னார் பிரதேசத்தோடு அதன் சுற்றுப் புறக் கிராமங்கள் சிலவற்றில் கணக்கெடுப்புக்களில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கொழும்பிலிருந்து கண்டிக்குச் சென்று ஒரு கிழமையின் பின்னர் மீண்டும் சந்திக்கும் எதிர்பார்ப்போடு கண்டியில் வைத்து நாங்கள் பிரிந்து சென்றோம். பதின்மூன்றாம் திகதி முற்பகலில் கண்டியிலிருந்து புறப்பட்ட நாங்கள் மிகிந்தலை, மடுப்பள்ளியைத் தரிசித்தபடி மன்னாரை அண்மிக்கும் போது மாலையாகி விட்டிருந்தது. அடுத்த நாள் காலை நெற்களஞ்சியப் பிரதேசங்களை நோக்கிப் புறப்பட்டோம். அன்றிலிருந்துதான் நெற்களஞ்சியப் பிரதேசங்களில் ஐந்துநாட்கள் ஆரம்பமாகிறது.
.

மன்னாரிலிருந்து பூநகரி நோக்கிச் செல்லும் பாதையில் முன்னேறிச் செல்லும்போது யுத்தத்தினால் உண்டான கஷ்டங்கள், துயரங்கள் விரக்தி என்பன கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் தோன்றுவதற்கும் உணர்வதற்கும் தலைப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் யுத்தகாலத்தில் கட்டப்பட்ட உறுதியான மண் மதில்களைத் தாண்டிச் சென்று நெற்களஞ்சியப் பிரதேசங்களுக்குள் பிரவேசித்தேன். இந்தக் கட்டுரையை பயண ஆரம்பத்தில் அனுபவித்த துயர்மிக்க அனுபவமொன்றினைக் கொண்டு ஆரம்பிக்க நினைக்கிறேன். அந் நாட்களில் நடைபெற்றுக் கொண்டிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எழுதிவிட்டு திரும்ப வீடு நோக்கி, மரம் செடி கொடியேதுமற்ற மணல் வீதியின் நெடுகே தகிக்கும் கடுமையான வெயிலில் வெந்து வெந்து, சுமார் பதினெட்டு கிலோமீற்றர்கள் நடந்தே சென்று கொண்டிருந்த நான்கு சிறுமிகளை அன்று நான் சந்தித்தேன். அவர்கள் பரீட்சைக்காக வந்திருந்ததுவும் அவ்வாறேதான்.

நான் அறிந்திராத பிரதேசமொன்றில், தெரியாத மொழி பேசும், முன்னெப்போதும் அறிந்திராத மக்களுடன் கழித்த முதல் நாளிலேயே வேறொரு நாடொன்றில் இருப்பதைப் போன்ற உணர்வை உணர்ந்தேன். எனினும் இரண்டு நாட்கள் கழிந்த பிற்பாடு அப் பிரதேச மக்களுடன் நெருக்கமாகிவிட என்னால் முடிந்தது. அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவுண்டேன். அவர்களது அன்றாட வேலைகளில் ஒத்தாசை புரிந்தேன். சிறு குழந்தைகளுடன் விளையாடினேன். அவர்களுக்கு சிற்சில விடயங்களைக் கற்றுக் கொடுத்தேன். அதற்கிடையில் அவர்களது பிரச்சினைகளை அறிந்துகொள்ள முயற்சித்தேன்.

யுத்தத்தினால் உடைந்து சிதிலமாகிப் போன வீடுகள், கட்டடங்கள், போக்குவரத்துப் பாதைகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அடிப்படை வசதிகளை சிரமப்பட்டாவது பெற்றுக்கொள்ளும் வசதி அவர்களுக்கில்லை. மின்சாரம் எப்படிப் போனாலும், சுத்தமான குடிநீர், பயணங்களுக்காக பேரூந்தொன்று கூட அங்கில்லை. ஐநூறு ரூபாய் பெறுமதியான பொருட்களை வாங்கிக் கொண்டு முந்நூறு ரூபாய் மாத்திரமே கொடுத்துச் செல்லும் பலம் வாய்ந்த குழுவொன்று அப் பிரதேசத்தில் சஞ்சரிப்பதை நானே கண்டிருக்கிறேன். விவசாயத்துக்கேற்ற வயல்நிலங்கள் காணுமிடங்களிலெல்லாம் இருந்தபோதிலும், அவை பாழடைந்து போயிருக்கின்றன. விவசாயம் செய்யப்படும் ஒன்றிரண்டு வயல்களுக்கும் உதவியாக டிரக்டர் வண்டியொன்றேனும் வழங்கியிருப்பது அரச சார்பற்ற நிறுவனங்கள்தான். பாடசாலைகள், வைத்தியசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் சிக்கல் என்னவெனில், அவற்றைச் செய்வது அரசாங்கத்தினாலா அல்லது வேறு அமைப்புக்களாலா என்பதுதான். தேசப்பற்று மிக்கவர்களெனத் தம்மைச் சொல்லிக் கொள்ளும் கிளர்ச்சிக்காரர்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய விடயமொன்றிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் பேயாட்டம் ஆடி, சாகும்வரை எனக் கூறிக் கொண்டு உண்ணாவிரதமிருந்து அரச சார்பற்ற அமைப்புக்களை நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனத் துடிக்கும் ஜோக்கர் வங்ச (இது விமல் வீரவங்சவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்).

அரசைச் சார்ந்தவர்கள் செய்வது அடிக்கல் நாட்டுவதுவும், வேறு அமைப்பொன்று செய்த ஏதேனுமொன்றை திறந்துவைப்பதுவும்தான். இல்லாவிடில், முன்பு சொன்ன அமைப்புக்களுக்கு ஏதும் செய்யவிடாமல் தடுப்பதுவும்தான்.

இங்கு வடக்குக்கும் தெற்குக்கும் பொதுவானதொரு விடயத்தை நான் கண்டேன். அதாவது வளர்ச்சி இருப்பது நீங்கள் போகும் வரும் பிரதான வீதிகளில் மட்டும்தான். அனேகமான பகுதிகளில் மக்களது வாழ்க்கை முன்புபோலவேதான். இல்லாதது குண்டுகளின் ஓசை மட்டுமே. காணும் இடங்களிலெல்லாம் இராணுவப் படை. யுத்தம் முடிவுற்றதென்றால் அப் பிரதேசங்களில் பாரிய அளவில் இராணுவத்தைக் குவித்து வைத்திருப்பது ஏனென்று கேட்க வேண்டியிருக்கிறது. யுத்தம் உண்மையிலேயே நிறைவு பெற்று விட்டதென்றால் இருபத்தோராயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புச் செலவு எதற்காக? இன்னுமின்னும் நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது எதற்காக?

இங்கு விதவைகள் அதிகமாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கு அனேகக் குழந்தைகளும் உள்ளன. இங்கு ஆண்கள் குறைவாகவும் பெண்கள் அதிகமாகவும் இருக்கின்றனர். ஆண்களில் சிலர் இறந்துபோய் விட்டனர். சிலரை இரண்டாண்டு காலமாக இராணுவம் கைது செய்து வைத்திருக்கிறது. சிலர் காணாமல் போயிருக்கிறார்கள். சிலர் இங்குள்ள பெண்களுடன் இணைந்து பெரியதொரு குடும்பமான பின்பு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். இப் பிரதேசத்தில் ஆண்களின் எண்ணிக்கைக் குறைபாடு காரணமாக குடும்பங்களின் அனைத்துப் பொறுப்புக்களும் பெண்களின் மீதே சுமத்தப்பட்டுள்ளன.

இம் மக்களுக்கு தெற்கில் நடப்பதென்ன என்பது குறித்து எதுவும் தெரியாது. இவர்களுக்கு ராஜபக்ஷவோ, விக்கிரமசிங்கவோ, பொன்சேகாவோ, சம்பந்தனோ வீரனோ துரோகியோ அல்ல. இவர்களைப் பொருத்தவரையில் இவர்கள் எல்லோருமே சம்பிரதாயபூர்வமான பொய்காரர்கள். அரசாங்கம் குறித்த நிலைப்பாடும் அதுவேதான். எனினும் இவர்களது பொருளாதார சமூக முன்னேற்றத்துக்கு ஏதேனும் செய்வது அரச சார்பற்ற அமைப்புக்கள்தான் என்பதனால் இவர்களுக்கு அரச சார்பற்ற அமைப்புக்களைக் குறித்து ஓரளவு நம்பிக்கை இருக்கிறது.

தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்லும் மக்களுக்கு வடக்கு மக்கள் கண்காட்சிப் பொருட்களாக மாறியுள்ளனர். உடைந்து சிதைந்துபோன பெருவீதிகள், வீடுகள் மற்றும் கட்டடங்களைப் பார்த்தபடி தெற்கு மக்கள் பொழுதைப் போக்குகிறார்கள். சொற்ப அளவினரைத் தவிர அனேகம் பேர் எண்ணியிருப்பது யுத்தம் முடிவுற்றதன் பின்னர் எல்லாம் முடிவுற்று விட்டது எனத்தான். ஆனால் உண்மை அதுவா? இல்லை. சுனாமி வருவதற்கு முன்னர் முழுச் சூழலுமே அமைதியானது பற்றி இன்னும் எங்களுக்கு நினைவில்லை. நீண்ட அமைதி என்பது பெரும் அழிவு அண்மையில் என்பதுதான். நாட்டில் எல்லோராலுமே சிங்கள மொழியையும் தமிழ் மொழியையும் கதைக்க முடியுமாகும்போது இந்த அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படுமென எண்ணும் சிலரும் இருக்கிறார்கள். அவ்வாறானது அபத்தம் அன்றி வேறு இல்லை. உடனடித்தேவையாக இருப்பது தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நியாயமானதொரு தீர்வை விரைவில் பெற்றுக் கொடுப்பதே.

விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்தத்தில் தோல்வி கண்டிருக்கிறது. அத் தோல்வி அனைத்து தமிழ் மக்களினதும் தோல்வியென்ற எண்ணக் கருத்தொன்று உருவாக்கப்பட்டு அது மக்களிடையே ஆழப் பதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் தோல்வி மனப்பான்மையுடனேயே இருக்கிறார்கள். தமிழ் மக்களின் உள்ளங்களுக்குள் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பொன்றையோ நம்பிக்கையொன்றையோ உருவாக்க இன்றுவரைக்கும் முடியவில்லை. இதனால் பெரும் சிக்கலொன்று இருப்பது குறித்து பொறுப்பானவர்களுக்கு புரியாமலிருப்பதும் ஏனோ?

யுத்தத்தின் பெறுபேறாக சமூகக்கொலை இடம்பெற்றுள்ளது. எனினும் அதற்கான காரணமானது இன்னும் அழியாமல் உறங்குநிலையில் உள்ளது. ஏற்ற சூழ்நிலையொன்று திரும்பத் தோன்றுமிடத்து அவ் விதையானது உறங்கு நிலையை முடித்துக் கொண்டு மீண்டும் முளைக்க மாட்டாதென யாரால் கூறவியலும்? இதைப் பற்றிச் சிந்தித்தபடி பதினெட்டாம் திகதி நெற்களஞ்சியப் பிரதேசங்களிலிருந்து மீண்டும் திரும்பி வந்தேன்.

சிங்களத்திலிருந்து  தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
வலதுசாரி பயங்கரவாதிகளுக்கு எதிரான ஜேர்மனிய மக்களின் போராட்டம்!

வலதுசாரி பயங்கரவாதிகளுக்கு எதிரான ஜேர்மனிய மக்களின் போராட்டம்!

Comments 8

  1. Francis Dabarera says:
    15 years ago

    Thank you for the information.

    மாந்தை, மாதோட்டம், அடம்பன், பள்ளக்குழி, குருக்கண்டல்குளம், வெள்ளாங்குளம், வடகண்டல், ஆலங்குளம், ஆண்டாங்குளம், மாட்டிக்கண்டி, அலகட்டிவேலி, பரப்பாங்கண்டல், பரப்புக்கடந்தான், தென்வெட்டியன், ஒட்டுப்பள்ளம், விலாயன்குளம், பாப்பாமோட்டை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய மன்னார் மாவட்டத்தின் நெற்களஞ்சியப்பிரதேசம்.

    Francis Dabarera

  2. திருடன் says:
    15 years ago

    கட்டுரை நேற்று இனியொருவில் வெளியாகி இருந்தது. இன்று காலை இனியொரு பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லாமல் தமிழ்வின் போன்ற பல புலி சார்பு இணையங்களில் வெளியாகி உள்ளது . இதில் வேடிக்கை என்ன என்றால் தமக்கு இடையே மட்டும் அவர்கள் நன்றி போட்டுக் கொள்வார்கள்.

    • THAMIL MARAN says:
      15 years ago

      தமக்கு மட்டுமே விளம்பர வருவாய் வரவேண்டும் எனும் அவர்களது நல்ல நோக்கும் தாம் மட்டுமே முந்த வேண்டும் எனும் விருப்பமும் அல்லாது வேறோன்றூம் அறீயாது தமிழரே.வேருக்கு நீர் பாய்ச்சுங்க்ள் அதே நேரம் வேர்களயும் பாதுகாப்பீர்.

  3. theva says:
    15 years ago

    ஒரு சிறிய தீவுக்குள்ளே மிககூடிய இடைவெளியை -இனங்களுக்குள்ளே உருவாக்கியதே சுயநலமி அரசியல்வாதிகள்தான்: சானக உண்மையான காட்சிகளை -விபரங்களை முன்வைத்துள்ளார். இதனையும் தங்கள் இணையத்துக்கு பயன்படுத்தும் அதேவேளை இந்த மக்ககளின் முன்னேற்றத்துக்கு ஏதாவது செய்தால்…………………..! யுத்தம் முடிந்துவிட்டது. புலிபயஙöகரத்தை ஒழித்தாயிற்று இனிமேல் எல்லாமே முன்னேற்றபாதையிலே போகிறது என்கிற படம் காட்டுகிறவர்கள் சானக போய்வந்த பகுதிகளுக்கும் இன்னும் உதவியே அற்று தவிக்கும் பகுதிகளுக்கும் மாண்புமிகு அமைச்சர்களை அழைத்துகொண்டுபோய் காட்டுவார்களா? மேலும் தமிழ்மக்களின் தோல்வி மனப்பான்மை- உதவியற்ற சிக்கல் பற்றிய சானகவின்அரசியல்கேள்வி ஆழமாய் சிந்திக்க வேண்யெ காலகட்டம் இது!

    • MustangGT says:
      13 years ago

      எதப்பா சிறிய ஊர், இலங்கைக்குள்ள 50 சிங்கப்பூர் அடங்கும்.

  4. செவ்வியன் says:
    15 years ago

    பாவத்தின் ஊதியம் துன்பம் என்பர்.சிங்களப்பேரினவாதம் திருந்தப்போவதில்லை.தமிழீழத்தில் சிங்களப்பேரினவாதம்
    நடத்திய தமிழ் இனப்படுகொலைக்கு பாரிய விளைவை எதிர்கொள்ளும்.ஆனால் அதைத் தவிர்க்க ஒரே வழி தமிழீழப்பகுதியைவிட்டு சிங்களப்படைகள் வெளியேறி தழீழத்தை அங்கீகரிக்கவேண்டும்

  5. chandran.raja says:
    14 years ago

    இலங்கையில் யுத்தம் வருவதற்கு எந்த காரணமும் இல்லை. வந்தால் அது மேற்குலத்தால் தொடுக்கப்படுகிற காலணி யுத்தமாகத் தான் இருக்கும்.

    மீண்டும் இனக்கலவரம் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
    அதையே தமிழ்மக்களால் தெரிவு செய்த “தமிழ்தேசியகூட்டமைப்பு” அதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். இதுவே தமிழனின் தலைவிதி. இப்போதைக்கு செல்வநாயகத்தின் சிலை உடைப்பு மட்டும் தான். நாளை…தமிழர்களின் கடைகள் தீபற்றி எரியும். எல்லை பிறத்தில் இருக்கும் ஏழைகள் உரிந்த சேலைகள் விழ உள்ளதை பற்றிக் கொண்டு வடபகுதிநோக்கி ஓடிவருவார்கள். யாழ்பாணமேட்டுகுடியின் வாழ்வு உல்லாசம் தான். அவர்கள் கொழும்பிலோ இந்தியாவிலோ இல்லை மேற்குலத்துடனோ மயிரை பிளந்து விவாதம் நடத்திக் கொண்டிருப்பார்கள். உல்லாசம்… சல்லாபம். தமிழனுக்கு கிடைத்த இன்றைக்குள்ள அறிவு இவ்வளவு தான்.

    நாம் விதைத்தவை மட்டும் தான் அறுவடை செய்யமுடியும். எதை எய்கிறோமோ அது தான் திரும்பிவரும். இதுதான் இயங்கியல் நியதி.

  6. C Masilamany says:
    14 years ago

    தமிழ் மக்கள் பிரதேசம் பறிக்கப்படுகிறது. அதற்கு எதிராகக் குரல் கொடுப்பது தமிழ் மக்கள் கடமை.
    தமிழ் மக்கள் வாய் திறந்தால் அடி விழும் என்பது என்ன நியாயம். அவன்கள் பொல்லாதவங்கள்
    அடங்கி போங்கள் என்பதா?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...