‘நீருக்காகத்திரண்ட யாழ்ப்பாணம்’ என்ற தலைப்பில் போராட்டம் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் அனல் மின் நிலையைத்தில் பயன்படுத்தப்பட அதிபார டீசல் கழிவு எண்ணை மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றப்பட்டமையல் வலிகமம் பிரதேசம் முழுவதிலுமுள்ள நீர் நிலம் போன்றன நச்சுத் தன்மையுடையதாக மாற்றப்பட்டமை தெரிந்ததே. நச்சுத் தன்மை குறித்து இலங்கை நீர்பாசன சபை நடத்திய ஆய்வு ஒன்றின் ஊடாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னதாக வட மாகாண சபை தனது நிபுணர் குழுவின் ஊடாக நடத்திய ஆய்வில் நச்சுத் தன்மை காணப்படவில்லை எனப் போலி அறிக்கை ஒன்றைத் தயாரித்தது.
இந்த நிலையில் வட மாகாண முதலமைச்சர், உலக சுகாதார மையம் ஆகியவற்றைத் தலையிடுமாறு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த போராட்டத்தின் இறுதியில் மக்கள் பேரணியாக சென்று வட மாகாண முதலமைச்சர், ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மனுக்கள் கையளிக்கப்பட்டன.
அதன் பின்னர் போராட்டம் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பிய பேரணி சாகும் வரை உண்ணவிரதப் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறு பேர் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாகவும், போராட்டத்தை உலக மக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகவும் ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்தனர். தவிர ஆர்பாட்டத்தில் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்திற்கு எதிராகவும் அதன் இயக்குனர்களுக்கு எதிராகவும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் நிர்ஜ் தேவா மீது பிரித்தானிய அரசு நடவடிகையெடுக்குமாறு கோரப்படதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
சுன்னாகம் பேரவலத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம்
சுன்னாகம் பேரழிவு:ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குத் தடைவிதித்த கூட்டமைப்பின் மாகாண அரசு
சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்
கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை
சுன்னாகத்திலிருந்து குடாநாட்டை அழித்தவர் சிறீலங்கன் ஏயர் லைன்ஸ் இன் இயக்குனரானார்
சுன்னாகத்தில் வாழ்ந்தவர்களின் நரம்பு மண்டலம் பாதிப்படையலாம்: சம்பிக்கவும் தேவாவும் பொறுப்பு
யாழ்ப்பாண மக்களின் உயிர்குடிக்கும் பல்தேசிய நிறுவனம் அச்சத்தில் அறிக்கை
யாழ் குடாநாட்டின் நீரையும் நிலத்தையும் அழிப்பதற்கு கூட்டமைப்பும் துணை போகிறது
குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது
சுன்னாகத்தில் அழிப்பு தொடர்கிறது:துணைக்குழுக்களும் NGO உம் தலையீடு
இனவழிப்பிற்கு எதிராக முழங்கிய பறை
சுன்னாகம் நீரை நஞ்சாக்கிய கிரிமினல் நிறுவனத்தின் மோசடி அம்பலம்