வலிகாமம் பகுதியில் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலுமுள்ள பகுதிகளில் 30 மாதிரிக் கிணறுகளில் இரசாயனப் பதார்த்தங்களுக்கான பரிசோதனை கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்டது. இதன் முடிவில், அனைத்துக் கிணறுகளிலும் எண்ணை மற்றும் கிரீஸ் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வட மாகாண சபை நடத்திய ஆய்வுகளிலும், சுன்னாகம் அனல் மின் நிலையத்தை நடத்திய எம்ரிடி வோக்கஸ் தெரிவித்த கருத்துக்களிலும் கிணறுகளில் எண்ணை இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது நீரைப் பயன்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வட மாகாண சபையின் ‘தேசியக் கழிவுகள்’ இனியாவது மக்களிடம் மன்னிப் கோராவிட்டால் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் மக்கள் மத்தியில் ஊடுருவ இப்பிரச்சனை வடிகாலாக அமையும்.
மேலும் அப்பிரதேசத்தை இந்த நிலைக்கு உட்படுத்திய நிறுவனமும், அதன் பின்னணியில் செயற்பட்ட அரச அதிகாரிகளும் அமைச்சர்களும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே ‘தமிழ்த் தேசியக்’ கட்சிகள் அரசியல் வளர்க்கலாமே?
//அப்பிரதேசத்தை இந்த நிலைக்கு உட்படுத்திய நிறுவனமும், அதன் பின்னணியில் செயற்பட்ட அரச அதிகாரிகளும் அமைச்சர்களும் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே ‘தமிழ்த் தேசியக்’ கட்சிகள் அரசியல் வளர்க்கலாமே?//
தவறுகளை தண்டித்து மக்களுக்கு நன்மை செய்வதை விட – எப்பவும் போல அரசியல் வளர்க்கிறதிலேயே இருங்கோ? நாசமா போக!
could you please post a legible copy.
sorry, the above is the only version that we have in our possession
மண்ணைப்பற்றியோ மனிதனைப்பற்றியோ அக்கறையின்றி வாழும் அரசியல் வாதிகளினாலும் விடுதலைப்போராட்டத்தினாலும் இலங்கைத்தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட கதிதான் இதுவே தவிர வேறில்லை
தமிழ் அரசியல்வாதிகள் சம்பளத்துக்காகவும் – பென்சனுக்காகவும் – மரியாதைக்காகவும் அரசியலுக்கு வருபவர்கள். அவர்கள் வாக்குகளுக்காக வார்த்தைகளை அள்ளி வீசுபவர்கள் – மக்கள் தேவைகளுக்காக அல்ல.
இவர்களிடம் இனவாத அரசியலைத் தவிர – மக்கள் வாழ்வுக்கான எந்த ஒரு முன்னெடுப்போ – சிந்தனையோ இல்லை. இவர்களை மக்கள் அடுத்த தேர்தலிலாவது இல்லாமல் செய்ய வேண்டும். மேடைப் பேச்சைத் தவிர – இவர்களால் மக்களுக்கு எதுவித நன்மையும் இல்லை.
அரசியல்வாதிகள் என்றால் அதில் தமிழா் ஒருவிதமாகவும் மற்றவா்கள் வேறுவிதமாகவும் இருப்பதாக எண்ண முடியாது காரணம் இன்றய உலக அரசியல்வாதிகள் அத்தனைபேரும் பல்தேசியக்கம்பனிகளின் தரகா்களும் முகவா்களுமாவா் இல்லையேல் அவா்கள் அரசியலில் நிலைக்கமுடியாது.