ஆந்திராவில் செமரங்களை கடத்தும் மாபியாக்களைக் தண்டிகக் கோருவதற்கும், அவர்களின் தமிழ் மாபியாத் தொடர்பாளர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பதிலாக அதனைத் தமிழ் மக்களுக்கும் ஆந்திர மக்களுக்கும் இடையேயான பிரச்சனையாக தமிழ்த் தேசிய பிழைப்புவாதிகள் மாற்ற முயல்கின்றனர். இந்த நிலையில் ஆந்திர எதிர்க்கட்சியின் அறிக்கை முக்கிய பங்கை வகிக்கிறது.
மரண ஓலத்தின் நடுவிலும் பிழைப்பு நடத்திப் பழகிய போலித் தேசியவாதிகள் இதனைத் தமிழினத்தின் பிரச்சனையாகக் குறுக்க முற்படுகின்றனர். கேரளா,கர்நாடகம் போன்ற அனைத்து மாநிலங்களின் ஒடுக்கப்பட்ட மக்களையும் தமிழர்களின் எதிரியாக்கி அதன் நடுவே வயிற்றுப்பிழைப்பு நடத்தும் தமிழ் இனவாதிகள், இப்போது ஆந்திர மக்களிடமிருந்தும் தமிழர்களைத் தனிமைப்படுத்துகின்றனர்.
உலக மக்களிடமிருந்து தமிழர்களைத் தனிமைப்படுத்தி அழிக்க முயலும் இவர்களே தமிழின விரோதிகள்.
செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கூறி, 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஆந்திராவின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் வாசு ரெட்டி வர்மா கூறியதாவது:–20 தமிழக தொழிலாளர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 500 பேர் செம்மரம் வெட்ட வந்ததாக போலீசார் கூறுகிறார்கள். இவர்கள் வரும் போதே போலீசார் ஆந்திர எல்லையில், செக்போஸ்டுகளில் தடுத்து நிறுத்தாதது ஏன்? இந்த கொலை, ஆந்திர முதல் மந்திரி சந்திர பாபு நாயுடுவின் நேரடி ஏற்பாட்டில் நடந்து இருக்கிறது.சந்திரபாபு நாயுடு ஒரு நாளைக்கு முன்பே திருப்பதி வந்து விட்டார். மறுநாள் இரவு 8.30 மணி வரை அங்கு இருந்திருக்கிறார். அவரது ஆலோசனையின் பேரில் தொழிலாளர்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அவரது உத்தரவின் பேரிலேயே போலீசார் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.ஆந்திரமாநில உள்துறை மந்திரி, ‘மரம் வெட்டிய தொழிலாளர்கள் ஆயுதங்களால் தாக்கியதாகவும், சுட்டதாகவும் பதிலுக்கு போலீசார் சுட்டதாகவும் கூறி இருக்கிறார். இதற்கு அவர் ஆதாரத்தை காட்ட முடியுமா? என்கவுண்டர் எப்படி நடந்தது என்பதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள் நம்மை பகையாளி போல் பார்க்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்கான முழுபொறுப்பையும் சந்திரபாபு நாயுடு ஏற்க வேண்டும்.இது போலி என்கவுண்டர் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, தற்போதைய ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.ஆந்திர மாநில இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்:–தமிழக கூலி தொழிலாளர்களை முதலிலேயே கைது செய்து இரவில் அங்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் கைகளை கட்டி சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். 20 தொழிலாளர்களும் மார்பில் குண்டு பாய்ந்து இறந்திருக்கிறார்கள்.தொழிலாளர்கள் அனைவரும் மல்லாக்காக படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஆய்வின் போது இந்த உண்மை தெரிய வந்துள்ளது. கடத்தல் காரர்கள், ஏஜெண்டுகள் யாரும் கைது செய்யப்பட வில்லை. அப்பாவி தொழிலாளர்களை திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார்கள். இது கண்டனத்துக்குரியது. நீதி விசாரணை தேவை.மார்க்சிஸ்டு கட்சி மாநில செயலாளர் மது:–தமிழகத்தை சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது விதிமீறல். கடத்தல்காரர்களை விட்டு விட்டனர். ஏஜெண்டுகள் கைதாகவில்லை. கூலி தொழிலாளர்களை பிடித்துச் சென்று பலியாக்கி இருக்கிறார்கள்.இது மனித உரிமை மீறல் இறந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.பி.வி.சி.எல். அமைப்பு செயலாளர் சுரேஷ்:–ஆந்திராவில் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடத்திருக்கிறது. தொழிலாளர்கள் இறந்து கிடந்த இடம் செம்மரம் எதுவும் இல்லாத மைதானம்.தொழிலாளர்களை சுட்டுக் கொன்று அந்த இடத்தில் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் அருகே கிடந்த செம்மரகட்டைகள் அப்போது வெட்டப்பட்டவை அல்ல. ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பழைய கட்டைகள். அழைத்துச் சென்று கொன்று விட்டு போலீசார் நாடகமாடி இருக்கிறார்கள். இது கடும் கண்டனத்துக்குரியது. மனிதாபிமானம் இல்லாத செயல்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்
Tamil who live out of tamil Nadu Must Sent this news international Human Office . I do that work.