தமிழ் நாட்டில் தூத்துக்குடி படுகொலைகளின் பின்னணியில் செயற்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் 33.5 வீதப் பங்குகள் அனில் அக்ரவாலுக்கு சொந்த்தமானவை அல்ல. அப் பங்குகளே லண்டன் பங்கு சந்தையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது. அப் பங்குகளை தானே வாங்கிக்கொண்டு பங்கு சந்தையிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்தார். அப் பங்குகளிற்காக 1 மில்லியன் டொலர்களைக் கொடுக்கப்போவதாகவும் அறிவித்தார்.
இத் தொகையின் அடிப்படையில் ஒரு பங்கின் விலை 8.25 பவுண்ஸ் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இப்போது அத் தொகை போதுமானதல்ல என்றும் அது அதம்மை ஏமாற்றும் கொள்வனவு எனவும் சிறிய பங்குதாரர்கள் அறிவித்துள்ளனர். எஞ்சிய பங்குகளை வாங்கிக்கொண்டு பங்குச் சந்தையிலிருந்து வெளியேறப்போவதாக அறிவித்த வேதாந்தாவின் நிறுவனர் அனில் அக்ரவாலின் திட்டம் இதனால் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
பங்கு சந்த்தையிலிருந்து வெளியேறிய பின்னர், எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி தனது வளக்கொள்ளையைத் தொடர்வதற்கு வேதாந்தா திட்டமிட்டிருந்தது.
குறிப்பாக தூத்துக்குடி ஸ்ரெலைட் ஆலையத் திறப்பதற்கும் சேலம் மல்கோ ஆலையை விரிவு படுத்துவதற்கும் வேதாந்தா திட்டமிட்டுள்ளது.
வேதாந்தாவின் அலுமினிய சுத்திகரிப்பு நிறுவனமான மல்கொ இன்று தமிழ் நாட்டில் அதிகம் மின்சாரம் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனமாகும். அதன் அலுமினியச் சுத்திகரிப்பு இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று தமிழ் நாட்டில் அமைக்கப்படும் எட்டு வவழிச் சாலை தூத்துக்குடி படுகொலைகளின் பின்னான அழிவு நடவடிக்கையாக மாற்றமடைந்துள்ளது. இச் சாலை அமைக்கப்பட்டால் பயனடையும் நிறுவனங்களில் வேதந்தாவின் மல்கோ நிறுவனம் பிரதான இடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.