புதிய அரசியல் யாப்பு தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டுள்ள கருத்துக்கள் இலங்கை அரசு என்பது ஒற்றையாட்சிக்கு உட்பட பௌத்த சிங்கள பேரினவாத அரசாகத் தொடரும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. புதிய யாப்பு மூலம் 1972ம் ஆண்டு உட்புகுத்தப்பட்ட பௌத்தசமயம் தொடர்பான கொள்கைகள் அகற்றப்படும் எனச் சிலர் கூறுவதாகவும், அது பொய்யான கருத்துஎன்றும் மைத்திரிபால சிரிசேன கண்டி கெட்டம்பே பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டுஉரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
பௌத்த சிங்கள சிந்தனைக்குள் சிங்கள மக்களை முடக்கி வைத்திருப்பதே இலங்கை அதிகாரவர்க்கம் தம்மைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரே வழி முறை என்பது மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ஒடுக்கப்படும் சிங்கள மக்கள் விடுதலை பெறுவதற்குரிய ஒரே வழி வடக்குக் கிழக்குத் தமிழர்கள் சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடுவதே. சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தையும் அதன் அரசியலையும் இனவாதமாக மாற்றுவதன் ஊடாகச் சிங்கள அதிகாரவர்க்கம் அதனைத் தொடர்ச்சியாக அழித்து வருகிறது.
தமிழர்களைத் தலைமை தாங்குவதாகக் கூறும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் அடியாள் கும்பல்கள் இனவாதிகளாகத் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதன் ஊடாக இலங்கைப் பேரினவாதத்தைப் பலப்படுத்தி வருகின்றன.
ஆக, இன்று இலங்கை அரசாங்கம் பலவீனப்பட வேண்டுமானால் சிங்கள ஒடுக்கப்படும் மக்களை இணைத்துக்கொள்வதும், உலகின் ஒடுக்கப்படும் மக்களுடன் இணைந்து செயற்படுவதும் பிரதான முன் நிபந்தனைகளில் சிலவாகும்.
Buddha had not been merciful to minorities,did not avert butchering of innocent one lac women and children
The largest burial oof the will be exposed by Buddha after the global warming swallow the cursed island as the parents who gave birth to Buddha was also the distressed weeping forr ever.