லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
நாளை இந்திய குடியரசுத் தினத்தன்று டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்த இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும் இரு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது. அது உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நாளை டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற இருக்கிறது. சென்னையில் டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் டிராக்டர் பேரணி நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுப்பது என முடிவு செய்துள்ளார்கள். “மக்களுக்கு எதிரான இச்சட்டத்தை தமிழக அரசு சத்தமில்லாமல் மவுனமாக ஆதரித்து வருகிறது. இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது” என்கிறார் விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன்.”டெல்லியில் நடப்பது போல தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் டிராக்டர் பேரணி நடத்தப்படும். குறைந்தது 300 முதல் இரண்டாயிரம் பேர் வரை டிராக்டர் பேரணியில் ஈடுபடுவார்கள்” என பி.ஆர். பாண்டியன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். ''எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, அவரிடம் வேளாண் சட்டத்திற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என மனு கொடுக்கும் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தாலும், அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியாவதில்லை. டெல்லியில் நடப்பது போலவே, டிராக்டர் பேரணியாக சென்று அரசிடம் எங்கள் எதிர்ப்பை வலியுறுத்தவிருக்கிறோம். பல இடங்களில் அனுமதி மறுத்திருக்கிறார்கள். சென்னையில் அனுமதி தரவில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு போன்ற சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் போராட்டம் நடக்கும். பிற மாவட்டங்களில் அனைத்து சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூடி போராட்டத்தில் இறங்குகிறார்கள்,''என்றார் அய்யாக்கண்ணு. டிராக்டர் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளதால்...
Read moreநாளை மறு நாள் 27-01-2021 அன்று சசிகலா நடராஜன் பெங்களூரு சிறை வாழ்க்கையில் இருந்து தண்டனைக்காலம் முடிந்து வெளியில் வருவதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தினகரன் உறுதி செய்துள்ளார். உடல் நலம் குன்றி விக்டோரியா மருத்துவமனையில்...
Read moreஇந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கடுங்குளிரில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்து விட்ட நிலையில் டெல்லியில் நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு டிராக்டர்...
Read moreதமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்திய அளவில் ஏற்படும் எல்லா வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றங்களும் தமிழகத்தில் இருந்தே துவங்கின. முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமரின் (விபிசிங் ஆட்சி) தேசியக்...
Read moreஉலகப்புகழ் பெற்ற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநரும் மிகச்சிறந்த மருத்துவ சேவையாளருமான டாக்டர் சாந்தா தனது 93-வயதில் காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. ...
Read moreதேர்தலுக்காக பேரறிவாளன் விடுதலை செய்யப்படலாம் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்குள்ளாகி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வருகிற 27-ஆம் தேதி அவர் விடுதலையாவார் என்று கூறப்பட்ட நிலையில் புதன்...
Read moreஇன்று (16-01-20210 அன்று முதல் 166 மையங்களில் கோரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 160 மையங்களில் பிரிட்டன் தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியும் 6 மையங்களில் கோவாக்ஸின் தடுப்பூசியும் போடப்படும் என அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள்...
Read moreரு அழிவு தேவைப்படுகிறது… தண்ணீர் பீரங்கியை எதிர்கொண்டு நிற்கும் அந்த சூப்பர்மேனின் இடத்தில், ஒரு ஆரோக்கியமான மகிழ்ச்சியான தொழிலாளி, பஞ்சாபின் குறியீடாக அமைய வேண்டும்” என்கிறார் புக்ராஜ் சிங்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.