தமிழகம்

TamilNad news, indain tamil news

பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து மரணம்!

பெரியாரின் தொண்டரும் திராவிட இயக்க சிந்தனையாளரும், இடதுசாரி செயற்பாட்டளாரகவும் தன் வாழ்வை கழித்து வந்த வே.ஆனைமுத்து முதுமை காரணமான மறைந்தார். (பிறப்பு: ஜூன் 21, 1925) பகுத்தறிவு தந்தை பெரியாரின் அடியொற்றி அவரது சுயமரியாதைப் பாதையில் பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தைக் கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களைப் பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்து வந்தவர். பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப 1950-ம் ஆண்டில் ‘குறள் மலர்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். பின்னர் ‘குறள் முரசு’, ‘சிந்தனையாளன்’ ஆகிய பத்திரிகைகளை தொடங்கியவர், இன்றுவரை ‘சிந்தனையாளன்’ இதழை நடத்தி வருகிறார். 1957-ல் அரசியல் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 18 மாதங்கள்வேலுர் சிறையில் அடைக்கப்பட்டார்.பெரியாருக்கு நெருக்கமாக இருந்த வே.ஆனைமுத்து, பெரியார் இருந்தபோதே அவரது பேச்சுகள், எழுத்துகளை தொகுத்துநூலாக்கும் பணியைத் தொடங்கினார். ‘சிந்தனையாளர்களுக்கு சீரியவிருந்து’, ‘தீண்டாமை நால்வருஎம்.ணம் ஒழிப்போம்!’, ‘பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?’, ‘விகிதாச்சார இடஒதுக்கீடு செய்!’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ‘பெரியார் - ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ என்று பெரியாரின் சொற்பொழிவுகளையும், எழுத்துகளையும் தொகுத்து வெளியிட்டார். இது தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொகுப்பை விரிவாக்கம் செய்து சமீபத்தில் 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். பெரியார் மறைவுக்குப் பிறகு 1976-ல் ‘பெரியார் சம உரிமைக் கழகம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். 1988-ல் இந்த அமைப்பை ‘மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி’ என்று மாற்றி இன்றுவரை அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தோடு நிற்காமல் பெரியாரிய கருத்துகளைப் பரப்ப நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்துவந்தார். தமிழகத்தைப் போல வடமாநிலங்களிலும், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், பாபு ஜெகஜீவன் ராம், ஜெயில்சிங், வி.பி.சிங்,கன்சிராம் என்று பல்வேறு தலைவர்களை சந்தித்து வலியுறுத்தினார். டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கருத்தரங்குகளை நடத்தினார். பிஹாரில் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது, மண்டல் கமிஷன் உருவாக்கம், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதஇடஒதுக்கீடு, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது, வட மாநிலங்களில் பெரியார் நூற்றாண்டு விழாவை நடத்தியது என்று வே.ஆனைமுத்துவின் சாதனைகளை பெரியாரிய சிந்தனையாளர்கள் பட்டியலிடுகின்றனர்.

Read more
அற்பத்தனத்தின் அடி பாதாளத்தை தொட்டுவிட்டீர்கள்-எல்.ஆர்.ஜெகதீசன்

தன் மீது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்குக்கூட ஆ ராசா மன்னிப்பு கேட்டுவிட்டார். பொதுநன்மைக்காக. அது அவரது முதிர்ச்சியை, பெருந்தன்மையை, சமூகப்பொறுப்புணர்வை இன்னொருமுறை நிரூபித்திருக்கிறது. “சங்கு சுட்டாலும் வெண்மை தரும்” என்பதற்கான உதாரணமாக. இதற்குமேல் இதற்குள் இப்போதைக்கு விரிவாக...

Read more
இம்முறையாவது வெல்வாரா பொன்னார்?

தந்தி டி.வியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கேள்விகளை தொடுக்கும் ‘மக்கள் தர்பார்’ நிகழ்ச்சிக்கு 30 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் நிகழ்ச்சியின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 18 பேர் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்தனர். பொன்னாருக்கு ஆதரவாக 8 பேரே கையை தூக்கினர். நிகழ்ச்சியின் இறுதியை மட்டும் தான் பார்க்க முடிந்தது. கன்னியாகுமரியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு கடந்த இரண்டு வருடங்களாக திருவனந்தபுரம் செல்லும் நான்கு வழிச் சாலை வேலை நடைபெறவில்லை என்றார் பொன்னார். பாஜக தவிர்த்து வேறு யாரை தேர்ந்தெடுத்தாலும் வேலைகள் நடக்காது என்றும், மூன்று வருடங்கள் இனியும் பாஜக தான் மத்தியில் இருக்கப் போகிறது என்றும் மிரட்டும் தொனியில் பேசினார். அதை நாம் தமிழர் வேட்பாளர் உடனே தட்டிக் கேட்கவும் செய்தார். பொன்னார் இன்னொன்றையும் கூறினார். சாதி, மதமென பிரிந்து கிடப்பது போதுமெனவும், மக்களை வாழ விடுங்கள் என்றும் பெரிய யோக்கிய சிகாமணி போல பேசினார். இது பொன்னார் மற்றவர்களை பார்த்துப் பேசினார் என்று நினைப்பதைக் காட்டிலும் தன்னை நோக்கியே பேசினார் என்று எடுத்துக் கொள்ளலாம். மதவாத அரசியலின் உச்ச பலனை பொன்னார் தொட்டு விட்டார். இதற்கு மேல் மதவாதம் வாக்குகளை பெற்றுத் தராது என்ற அனுபவப் பாடத்தை கற்றுக் கொண்டு விட்டார். அதனால் தான் இரவல் சொற்களில் மதச்சார்பின்மை பேசுகிறார். சங்கிலித் திருடன் ஒருவன், ‘அதோ திருடன்...’ என்று சொல்லிக் கொண்டே ஓடுவதை போன்று பொன்னார் மற்றவர்களை பார்த்து மத அரசியல் வேண்டாம் என்று கூறுவது நகைப்புக்கிடமாக இருக்கிறது. மத அரசியலை உதறும் பாவனை கொண்ட பொன்னாரின் தேர்தல் கால சொல்லாடல்களின் இன்னொரு அம்சம் என்னவென்றால் அதானியின் துறைமுக மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு முழுக்க தன்னை நேர்ந்து விட்ட கடப்பாடு. ஒரு பக்கம் இந்துத்துவப் போக்கிரியாகவும் மறுபுறம் அதானிக்கு தம்பிரானாகவும் இருக்க வேண்டிய அந்திம கால அரசியல் நிர்ப்பந்தங்கள் இணைந்து பொன்னாரின் கதையை இன்னொரு முறை முடித்து வைக்க உக்கிரமாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

Read more
ஆயிரம்  ரூபாய் சம்பாதித்து 9 லட்சம் கடன் அடைத்த சீமான்!

தமிழ் திரைப்பட இயக்குநரான சீமான் 2009-ஆம் ஆண்டிற்குப் பின்னர் அரசியலுக்கு வந்தார். சீமான் சினிமாவில் இருந்தவரை பெரிதாக சம்பாதிக்கவில்லை. காரணம் அவரது படங்கள் எதுவும் பெரிதாக ஓடியதில்லை. தம்பி என்ற படம் ஓரளவு பேசப்பட்டாலும் அந்த படம் வசூல்...

Read more
புதுச்சேரியில் பாஜகவால் அதிமுக அழிக்கப்பட்ட கதை!

இந்தியாவில் மக்களால் தெரிவு செய்யப்படும் சட்டமன்றம் அமைந்த யூனியன் பிரதேசங்களில் முதன்மையானது புதுச்சேரி. முன்னர் பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட இந்த பிரெஞ்சு குடியேற்றப்பகுதி தற்காலத்தில் புதுச்சேரி என்று அழைக்கப்படுகிறது. 30 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சுதந்திரத்திற்குப் பின்னர்...

Read more
தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தலையிலும் 67 ஆயிரம் கடன்!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையின் மூலம் தமிழகம் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன் பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தை திவாலாகும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஒரே ஆண்டில் 4 லட்சம்...

Read more
பொதுத் தொகுதியில் போட்டியிடுவாரா கிருஷ்ணசாமி!

ஆசியாவில் இந்து மதம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சாதிக் கொடுமைகளும் தீண்டாமைகளும் அதன் இயல்பாக இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தீண்டாமைக்கொடுமைகள் உண்டு,. காரணம் இந்து மதத்தின் இயல்பே தீண்டாமைதான். இந்திய அரசியல் சாசனத்தை எழுதிய மாமேதை அண்ணல்...

Read more
தமிழகத்தில் மீண்டும் பெண் சிசுக்கொலை!

தமிழகத்தில் பின் தங்கிய  பகுதிகளில் சிசுக்கொலை எண்பதுகள் வரை நடந்து வந்தது.  பொருளாதார நெருக்கடி,  பெண் குழந்தைகளுக்கு அதிக அளவு நடத்தப்படும் சடங்குகள், பெண் குழந்தை என்றாலே செலவு என்று பார்க்கப்படும் பார்வை என பல காரணங்கள் பெண்...

Read more
Page 32 of 36 1 31 32 33 36