லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா மரண எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் நேற்று ஒரு நாள் உயிரிழப்பில் மட்டும் 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்துள்ளார்கள்.இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக இரண்டாம் அலைத் தொற்றின் பாதிப்பால பல்லாயிரம் பேர்...
Read moreஇந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் களம் இப்போதே சூடு பிடித்துள்ளது.ஆனால், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஜிதின் பிரசாதா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இவர்...
Read moreநடந்து முடிந்த சட்டமன்\ற தேர்தலில் அதிமுக 65 இடங்களில் வென்றது. பலத்த போட்டிக்கு இடையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தலைவர் தெரிவு செய்யப்பட்டார்.எதிர்க்கட்சி தேரிவில் பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் முரண்பாடுகள் எழுந்து ஓய்ந்தன.இந்நிலையில் இப்போது திமுக...
Read moreட்விட்டர்,முகநூல், வாட்சப் போன்ற வலைத்தளங்களை தாங்கள் நம்பும் கொள்கைகளுக்காக பாஜகவைப் போன்று மிகச்சிறப்பாக கையாண்ட கட்சி வேறு எதுவும் இல்லை. 2014 ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய ஆண்டுகளிலும் ஆட்சிக்கு வந்த அடுத்த ஐந்தாண்டுகளிலும் அவர்களின் பலமே சமூக வலைத்தளங்களாகவே இருந்தது. வலுவான கட்சித் தொண்டர்கள் மக்களை வாக்காளர்களாக மாற்றும் திறமை மிக்க முகங்களையே மற்ற கட்சிகள் நம்பியிருக்கும் போது, ஒவ்வொரு பூத்துக்கும் ஐந்து வாட்சப் குழுக்களை உருச்வாக்குவதுதான் அவர்கள் பாணியே...எதிர்க்கட்சி தலைவர்கள், தங்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்கள் பற்றி முழு நேர வதந்திகளைப் பரப்பி மிகச்சிறப்பாக சேவை செய்தார்கள். வாட்சப் போன்ற தளங்களால் எத்தனை எத்தனை கலவரங்கள்.இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் நடந்த கலவரங்கள் கும்பல் கொலைகளில் வாட்சப் உட்பட சமூக வலைத்தளங்களின் பங்கு அபரிமிதமானது. கலவரம் நடந்த இடங்களில் எல்லாம் வட இந்தியாவில் பாஜக வென்றது. இது தவிற மாட்டிறைச்சி...
Read moreதேசிய அளவில் புகழ்பெற்ற தமிழர்கள் என்ற பட்டியலில் ராஜாஜி, காமராஜர் ஆகியோரைச் சேர்ப்பவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ காயிதே மில்லத் முகமது இஸ்மாயிலின் பெயரைச் சேர்க்கத் தவறிவிடுகிறார்கள். ஆனால் அந்தப் பட்டியலில் இடம்பெறுவதற்கான அத்தனைத் தகுதிகளும் கொண்டவர் காயிதே மில்லத். கண்ணியமானவர், எளிமையானவர். தேசபக்தி நிரம்பியவர். நேர்மையானவர் என்று பல அடையாளங்களுக்குச் சொந்தக்காரர். சென்னை மாகாண சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை, மக்களவை, இந்திய அரசியல் நிர்ணய சபை ஆகிய இந்தியாவின் அதிமுக்கிய அவைகள் அனைத்திலும் இடம்பெற்ற தமிழர். முகமது அலி ஜின்னாவின் தலைமையில் முஸ்லிம் லீக் இயங்கியபோது அதன் முக்கியத்தலைவராக இருந்தவர் காயிதே மில்லத். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம் லிக்கையும் பிரித்துவிடுவது என்று முடிவானது. அப்போது இந்தியப் பகுதி முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளராக காயிதே மில்லத்தும் பாகிஸ்தான் பகுதி முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளராக பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு இந்தியப் பகுதி முஸ்லிம் லீக்கின் பெயர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று பெயர் மாற்றப்பட்டது. அதன் தலைவராக காயிதே மில்லத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்தரத்துக்குப் பிறகான முதல் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, காங்கிரஸ் கட்சியின் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடலாம் என்று காயிதே மில்லத்துக்கு அழைப்பிவிடுத்தார் நேரு. அப்போது காங்கிரஸின் சின்னத்தில் நின்றால் வெற்றி சர்வநிச்சயம். ஆனாலுல் முஸ்லிம் லீக் சுயமரியாதையுடன் இயங்கி, தனித்தன்மை காக்கும் என்று சொல்லிவிட்டார் காயிதே மில்லத். முஸ்லிம் லீக்கின் அகில இந்தியத் தலைவர் பொறுப்பில் இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமைகள் விஷயத்தில் நேர்மையுடனும் துணிவுடனும் தேர்தல் அரசியல் நோக்கங்களைப் புறக்கணித்தும் இயங்கியவர் காயிதே மில்லத். இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தபோது இந்திக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். ”ஓர் உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று பேசினார் காயிதே மில்லத். அதேபோல தேவிகுளம் பீர்மேடு விவகாரத்திலும் தமிழகத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தார் காயிதே மில்லத். அந்தப் பகுதிகளில் தமிழர்களே அதிகம். தமிழ் பேசுபவர்களே அதிகம். ஆகவே, அந்தப் பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டியது என்றார். இத்தனைக்கும் காயிதே மில்லத்துக்கு கேரளாவில் செல்வாக்கு மிக அதிகம். தேவிகுளம், பீர்மேடு விவகாரத்தில் கேரளாவுக்கு ஆதரவாகப் பேசினால் அவருடைய செல்வாக்கு பன்மடங்கு உயரும். ஆனாலும் உண்மையின் பக்கம் நின்றார் காயிதே மில்லத். ஒருகட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவுடன் சென்றுவிட்டாலும்கூட காயிதே மில்லத்துக்கு கேரளாவில் இருந்த செல்வாக்கு மாறவில்லை. அதன் பிறகு நடந்து மூன்று மக்களவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றார் காயிதே மில்லத். இதில் ஆச்சரியம் தரக்கூடிய விஷயம், தேர்தல் பிரசாரத்துக்காக அவர் தனது தொகுதிப்பக்கமே செல்லவில்லை. காயிதே மில்லத்துக்கு இருக்கும் மக்கள் செல்வாக்குக்கு அந்த வெற்றிகள் சத்திய சாட்சிகள். காயிதே மில்லத் எப்படித் தமிழராகவும் தமிழ்ப் பற்றாளராகவும் விளங்கினாரோ அதைப்போலவே பரிபூரண இந்தியராகவும் விளங்கினார். 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு செய்தபோது அதை எதிர்த்த அரசியல் தலைவர்களுள் காயிதே மில்லத் முக்கியமானவர். நமது அருமைவாய்ந்த தாயகத்தின் மீது பாகிஸ்தானியர் நடத்தும் ஆக்கிரமிப்புக்கு நான் பலத்த கண்டனம் தெரிவிக்கின்றேன். ஐயந்திரிபற்ற எனது கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன். இந்தியா எங்கணும் உள்ள முஸ்லிம் மக்களும் மற்றுமுள்ள அனைத்து மக்களும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்திய அரசாங்கத்தின் பின்னாலும் பிரதமரின் பின்னாலும் ஒருமுகமாகவும் உறுதியாகவும் நிற்கிறார்கள் என்றார் காயிதே மில்லத்.
Read moreஇந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு தோல்வியடைந்துள்ளது. தடுப்பூசி விநியோகம், ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவைகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இது பாஜக ஆளாத மாநிலங்களில் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன்...
Read moreஇந்திய ஒன்றிய அரசு தடுப்பூசிகளை லாபம் வைத்து மாநில அரசுகளுக்கு விற்பனை செய்து வரும் நிலையில் தடுப்பூசியை முழுமையாக இலவசமாக வழங்க வேண்டும் என கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் மிக...
Read moreஇந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சி செய்யாத 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகம், ஆந்திரம், கேரளம், ஒடிஸ்ஸா, பீகார், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம் என பல மாநிலங்களின் முதல்வருக்கும் கேரள முதல்வர்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.