கனேடிய குடியுரிமை தொடர்பான புதிய சட்டமூலம் 11ம் திகதி ஜூன் மாதம் அமுலுக்கு வந்துள்ளது. குடிவரவுச் சட்டமூலத்தின் குடியுரிமை பெற்றவர்கள் தாம் கனடாவில் தொடர்ந்து வாழ்வதற்கான பொருத்தமான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும். தவிர, வரி கட்டுதல் தொடர்பான அவர்களது கடமைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும். புதிய சட்டத் திருத்ததில் சேர்கப்பட்டுள்ள இப் பகுதிகள் அடிப்படை மனித உரிமைகளுக்கு மாறானவை. கனடாவில் பிறந்து குடியுரிமை பெற்றவர்களுக்கு இச்சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது. குடியுரிமையை விண்ணப்பித்துப் பெற்றுக்கொண்டவர்களுக்கே இது பயன்படுத்தப்படும்.
இந்த வகையில் கனடாவில் குடியுரிமை பெற்று நீண்டகாலம் வாழும் ஒருவர் அங்கு தொடர்ந்து வாழ்வதற்கான காரணம் பொருத்தமானதல்ல என அரச நிர்வகம் கருதுமானால் அவரது குடியுரிமையை நீக்கம் செய்யலாம்.
தவிர குடியுரிமை பெற்றவர் தான் வாழ்ந்த காலத்தில் அரச வரிப்பணத்தை கனேடிய விதிமுறைகளுக்கு அமையச் செலுத்தத் தவறினால் அவரது குடியுரிமை வலுவிழந்து போகும்.
கனடாவை நோக்கிப் அகதிகளாகவும் பல்வேறு காரணங்களாலும் இடம்பெயர்ந்தவர்கள் மீதான உளவியல் யுத்தம் ஒன்றை கனேடிய அரசு ஆரம்பித்துள்ளது. இது தவிர குடியுரிமை விவகாரத்தில் மோசடி அல்லது தவறு செய்தவர்களாகக் கருதப்படுபவர்களுக்கு $100,000 வரையான அபராதம் விதிக்கப்படும் என சட்டத் திருத்தம் கூறுகிறது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் இலங்கை அரசு நாடுதிரும்புபவர்களைத் தாம் ஏற்றுக்கொள்ளத் தயார் என்கிறது.
சோவியத் ரஷ்யாவில் கம்யூனிசம் தோன்றி மக்கள் ஆட்சி உருவான போது அந்த ஆட்சிக்கு எதிரான பண முதலைகளையும் எதிர்ப் புரட்சியாளர்களையும் பாதுகாக்கும் நோக்குடனேயே அகதிகளை அங்கீகரிகும் சட்டமூலம் ஐ.நா இன் ஊடாக உருவாக்கப்பட்டது.
அதன் பின்னர் உலகம் முழுவதும் தோன்றிய போராட்டங்களை அழிப்பதற்காகவும் கையாள்வதற்காகவும் அகதிகளை அங்கீகரிப்பது தொடர்ந்தது. 90 களின் பின்னர் அகதிகள் வெறும் மலிவான கூலிகளாகவும், மூன்றாம் உலக நாடுகளின் வளங்களையும் செல்வத்தையும் கடத்தி வருபவர்களாகவும் பயன்படுத்தப்பட்டனர். இன்று ‘கம்யூனிச’ அபாயம் உலகிலிருந்து முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. பல்தேசிய நிறுவனங்களின் ஆட்சியில் உலகம் முழுவதும் மீண்டும் மறைமுகக் காலனியாகி வருகிறது.
உலகின் வளங்களைச் சூறையாடும் பல்தேசிய அன்னிய முதலீடுகளால் கிளர்ச்சிகள் உருவாகின்றன. அவை அடிப்படை வாத அரசியலாகத் திட்டமிட்டு மாற்றப்படுகின்றது. இதனால் மக்கள் வாழ முடியாத பிரதேசங்களாகப் பல மூன்றாமுலக நாடுகள் மாறி வருகின்றன.
அகதிகளை உருவாக்கும் கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றன அவர்கள் மீதான தாக்குதலை இன்று கட்டவிழ்த்துவிட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் அகதிகளுக்கு எதிரான கருத்துக்கள் தீவிர வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகள் ஊடாக திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. கனடாவின் முன்னுதாரணத்தை ஏனைய நாடுகளும் தொடரலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
செவ்விந்தியர்களை அழித்து அவர்களின் சிவப்பு இரத்தத்தால் வரையப்பட்ட கனடாவின் பூர்வீக குடிகள் வெள்ளை அதிகாரவர்க்கம் அல்ல. ஐரோப்பிய
அமெரிக்க நாடுகளில் அதிகார வர்க்கத்திற்கு எதிராகத் தோன்றும் போராட்டங்களே இன்றைய கம்யூனிச அபாயமாகக் கருதப்படுகின்றது.
உலகக் கம்யூனிச அபாயம் இன்று உள்ளூரில் தோன்ற ஆரம்பித்த பின்னர், அதனை அகதிகள் மீதும் வெளி நாட்டவர்கள் மீதும் திசைதிருப்பும் நோக்கிலும் இச்ச்சட்ட மூலங்களும் தாக்குதல்களும் பயன்படுகின்றன.
கனடாவின் புதிய சட்டத் திருத்ததிற்கு எதிராக உலகம் முழுவதும் வாழும் அகதிகளும் வெளி நாட்டவர்களும் குரல்கொடுக்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது. வெளி நாடுகளிலிருந்து தொலைதூரத் தேசியம் பேசும் தமிழ்த் தலைமைகள் இன்று உள்ளூர் மக்களின் போராட்டங்களிலிருந்து அன்னியப்பட முடியாது.
மேலே குறிப்பிட்ட மாதிரி சட்டத்தை நிறைவேற்ற இயலாது. இது கனேடிய அடிப்படைச் சட்டத்தையும்; சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும் மீறுவதாகும். அப்படியானால் கனடா ஐ.நா சபையில் அங்கத்துவம் கொள்ள இயலாது. மிகக்கடுமைனாய ஒன்றை சொல்லவிரும்புகிறேன்.கனடா செவ்விந்தியர்கள் தாய்நாடு. இவர்களைத் தவிர அனைவரும் வந்தேறிகளே. கனடா எனும் நாட்டில் வாழ் உரிமையற்றவர்கள்
கனடா,அமொிக்கா,அவுஸ்ற்ரேலியா,நியுசிலாந்து இன்னும் பல