இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஜெனீவாவில் நாளை (புதன்கிழமை) பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெறுவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29-வது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவா நகரில் நடந்து வருகிறது. இதன் இணைக் கூட்டமாக இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்புக் கூட்டத்தை, என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு நடத்துகிறது.
ஜூன் 24-ந் தேதி (நாளை) புதன்கிழமை அன்று மாலை ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அரங்கம் எண் 22-ல் இந்தச் சிறப்புக் கூட்டம் நடக்கிறது. இங்கிலாந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவருமான லீ ஸ்காட் இக்கூட்டத்துக்கு தலைமையேற்கிறார்.
சர்வதேச மனித உரிமைகள் சட்ட வல்லுநரும், இங்கிலாந்து வழக்கறிஞர் பேரவையின் மனித உரிமைகள் குழு தலைவருமான ஜானினி கிருஷ்டி பிரிமிலோ, தமிழ்நாட்டில் இருந்து வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவைத் தலைவர் க.பாலு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
இக்கூட்டத்தை பசுமைத் தாயகம், பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. பசுமைத் தாயகம் பொதுச்செயலாளர் ஆர்.அருள் மற்றும் பன்னாட்டு மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
தென்னிந்தியாவின் ஆதிக்க சாதி வெறியர்களின் கூடாரமான பாட்டாளி மக்கள் கட்சி என்ற சாதிச் சங்கத்தின் தன்னார்வ நிறுவனமே பசுமைத் தாயகம். காங்கிரஸ் அரசில் அமைச்சராகவிருந்த அன்புமணி ராமதாஸ் மற்றும் குடும்பத்தினரின் தன்னார்வ நிறுவனமான பசுமைத் தாயகம். 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பசுமைத் தாயகம் உலக வங்கி மற்றும் ஐ.நா, அமெரிக்க அரசு போன்றவற்றின் நிதி உதவியில் இயங்கும் அமைப்பாகும்.
இந்தியாவில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிறோம் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம் சூழல் பாதுகாப்பிற்கு எதிரான மக்கள் போராட்டங்களை முடக்குவதே.
தமிழ் நாட்டின் ஆதிக்க சாதி வெறியர்களுடன் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இணைந்து கொள்வது இது முதல் தடவையல்ல. உலகின் ஏனைய முற்போக்கு ஜனநாயக சக்திகளிடமிருந்கு மக்களை அன்னியப்படுத்தி அமெரிக்காவின் கரங்களில் போர்க்குற்ற விசாரணையை நிபந்தனையின்றி ஒப்படைத்து ஆட்சி மாற்றத்தை மட்டுமே தீர்வாக முன்வைக்க பின்னணியில் செயற்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் இன்று தம்மை வெளிப்படையாக அடையாளம் காட்ட ஆரம்பித்துள்ளன.
தன்னார்வ நிறுவனங்களின் பிடிக்குள் தமிழ் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை உட்படுத்தி நடத்தப்படும் அழிப்பு நடவடிக்கைய்ன் ஒரு பகுதியே இது.
இதற்கு முன்னதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் புடைசூழ உலகத் தமிழர் பேரவை இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியமை குறிப்பிடத்தக்கது,.
இதே ஆதிக்க சாதி வெறியார் தான் 108 சாதிகளுக்கு இட ஒதிக்கீடு பெற்றுதந்தார், இவரால் முடிந்தவரை இலங்கை தமிழர்களுக்காக போராட வேண்டும் என்பதர்க்காக போராதத்தான் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஏனென்றால் மற்ற அமைப்புகளில் அதிக அரசியல் இருப்பதால், மற்றும் பா ம க கொள்கை மற்ற கட்சிகளிடம் ஓதுவாறதது என்பதர்க்காக இந்த முடிவை எடுத்தார்கள்.. இவரை சாதி வெறியார் என்று சொல்வதார்க்கு உன்னிடம் எந்த ஆதாரம் இல்லை என்பதே உண்மை.. அப்படி சொல்லவேண்டுமென்றாள் அனைவரையும் தான் சொல்ல வேண்டும்.. உன் நாவையும் அறிவாயும் அடக்கி சிந்திததாலே எல்லாம் புரியும்..
மற்றும் ஒரு கேள்வி சுற்றுச்சூழலிற்க்கு எதிராக இவர் போராடினார் என்பதர்க்கு உன்னிடம் என்ன ஆதாரம் உள்ளது என்பதையும் நீ கூறவேண்டும் .. பசுமை தாயகத்தின் மூலம் எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்று உனக்கு தெரியுமா? சும்மா மடத்தனமாக உளரக்கூடாது… இதுவரை இலங்கை தமிழர் பிரச்சனய்யை அரசியலாக்காமல் இருப்பாது இவர் மட்டும் தான்..
இலங்கை தமிழ் மக்களுக்காக உண்மையாக ஐநாவில் தொடர்ந்து குரல் கொடுப்பது பசுமை தாயகம் மட்டுமே..
இன்றுவரை ஐநாவில் தமிழ் ஈழ நபர் ஒருவர் பேசவேண்டுமென்றால் அது பசுமை தாயகம் அமைப்பின் மூலமே தங்களது நிலையை அங்கே பதிவு செய்துகொண்டு வருகிறார்கள்..
இதில் எங்கே சாதி வெறி கண்டீர்??
நான் கண்டேன் நல்லது செய்தாலும் அதில் சாதியை தூண்டி கலகமூட்டும் உங்கள் சாதி வெறி..
இதில் எங்கே கண்டீர் சாதி ?
பா.ம.க சாதி வெறியர்களே!
காதல் திருமணம் செய்துகொண்ட இளவரசனை கொலை செய்து விட்டு அவரது தந்தையருக்கும் கொலை மிரட்டல் விடுத்த வன்னியர் சாதிச் சங்கமான பா,ம.க வின் சாதி வெறியை அனைவரும் அறிவர். தருமபுரிக் கிராமத்தையே அழித்த நயவஞ்சகர்கள் எந்த முகத்தோடு ஈழத் தமிழர்களுக்காகப் பேசுகின்றனர், கொலை செய்துவிட்டு இயற்கையை அழித்து ஆதிக்க சாதி வெறியர்களோடு ஊர் ஊராகக் கூட்டம் போட்ட அவமானம் கூட இல்லாமல் பசுமைத் தாயகமா? நீங்கள் அழிக்கப் பிறந்தவர்கள்.
https://inioru.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/
https://inioru.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA/
தமிழகத்தின் ஆதிக்க சாதி வெறியர்களையும், சீமான் போன்ற கோமாளித்தனமான இனவாதிகளையும் ஈழப் போராட்டத்தில் களமிறக்கி விட்டிருப்பதற்குக் காரணம் அதனை அழித்துச் சிதைப்பதற்கே. இன்று மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டுமானால் இந்த நச்சுப் பாம்புகளுக்கு எதிராகக் குரல் கொடுங்கள். அமெரிக்க நிதியில் இயங்கும் பசுமைத் தாயகம் சீ.ஐ.ஏ இன் ஏஜன்ட் என்பதில் என்ன சந்தேகம்? இன்று இலங்கை அரசு அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. பசுமைத் தாயகம் என்ற சாதி வெறியர்களின் கூடாரம் அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. ஆக, இந்த ஒட்டும் முடிச்சுக் களை இனம் காணுங்கள். அழிவுகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு யுத்தமே எமது இன்றைய தேவை.
தமிழ்நாட்டை பொருத்தவரை பா ம க சாதி வெறிகட்சி என்பது அனைவருமே சொல்கிறார்கள் ,
ஆனால் யதார்த்தம் இங்கு சாதிப்பற்று இல்லாமல் யாரும் இல்லை,
அதிகப்படியான எண்ணிக்கையில் வன்னியர்கள் இருப்பதால் இது தெரிகிறது ,
சிறுபான்மையினராக உள்ள சாதியினர்தான் இதுவரையில் தமிழகத்தை ஆள்கின்றார்கள்,
வன்னியர்களுக்கு ஆள வேண்டும் என்ற ஆசை வந்தால் ,
சிறுபான்மையின சாதிகள் வன்னிய சாதிவெறி என்று அவர்களை ஓரங்கட்டிவிடுவார்கள்,
நீங்கள் சொல்வதும் அப்படித்தான் உள்ளது,
கேட்க ஆளில்லாத பிரச்சனையை யார் கேட்டால் என்ன,
இடது சாரிகளுக்கு தமிழ்மக்களிடம் செல்வாக்கு இல்லை,
அதை பெறும் திறனும் இல்லை,
ஏன் வன்னியர்களை பற்றி அவதூறு கிளப்புகிறீர்கள்
பசுமைத் தாயகம் அமெரிக்க அரசின் பணத்தில் இயங்கும் அமைப்பா? நல்ல காமெடி. அப்படியே ஒரு துப்பறியும் நாவல் எழுதுங்களேன்.
உங்களைப்போன்ற பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான சாதிவெறியர்கள் இப்படித்தான் எழுதுவீர்கள்.
தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் – நடுத்தெருவில் நின்று குலைக்கும் கூட்டத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?