ஈழப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ ஆலோசனைகளையும் உதவிகளையும் மேற்கொண்ட பிரித்தானிய அரசு இன்று இராணுவத்தை நவீனமயப்படுத்த தம்மாலான அனைத்தையும் செய்வதாகக் கூறியுள்ளது. வன்னிப் படுகொலைகளின் போதும், அதற்கு முன்னரும், ஜே.வீ.பி இன் ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கும் இலங்கை அரசின் ஆயுதபலத்தை மட்டுமன்றி ஆலோசனைகள் வழங்குவதிலும் நேரடியாக உதவி புரிந்த பிரித்தானிய அரசின் நம்பிக்கைக்குரிய அடியாட்களாக தமிழர் குழுக்களும் செயற்படுகின்றன.
கொன்சர்வேட்டிவிற்கான தமிழர்கள், தொழிற்கட்சிக்கான தமிழர்கள் என பிரித்தானியத் தமிழர் பேரவையின் பிரதிநிகளாக தமிழர்கள் இனவழிப்பின் பின்னணியில் செயற்பட்ட அரசின் பிடியில் மிகவும் நயவஞ்கத்தனமாக சிக்கவைக்கப்பட்டனர்.
அழிவுகளின் பின்னரும் பிரித்தானிய அரசினதும் ஏனைய ஏகாதிபத்திய அரசுகளதும் பின்னணியில் இயங்கும் தமிழர் குழுக்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நேரடியான பிரித்தானிய உளவுப்படையுடன் இணைந்து செயற்படும் அதே வேளை பிரித்தானியத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் அதன் அரசியல் அமைப்புடன் இணைந்து செயற்படுகின்றன.
ஆக, இனப்படுகொலைக்குத் துணை சென்றவர்கள் இவர்கள அனைவரும் என்பதில் சந்தேகங்கள் இல்லை. யாழ்ப்பாணத்திற்குச் சென்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சருடன் பொங்கல் விழா கொண்டாடிய ரனில் விக்ரமசிங்க உலக சமாதானப் படைகளுடன் இலங்கை இராணுவத்தை இணைப்போம் என்றார். இன்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஹூகோ ஸ்வயரும் அதே கருத்தைக் கூறியுள்ளார். மறுபக்கத்தில் பிரித்தானிய அரசின் துணைக் குழுக்கள் தேசியம் பேசுகிறார்கள். இலங்கையில் தேசியத்தின் ஒவ்வொரு கூறுகளும் அழிக்கப்பட்டிக்கொண்டிருக்கின்றன.
“இலங்கையில் தேசியத்தின் ஒவ்வொரு கூறுகளும் அழிக்கப்பட்டிக்கொண்டிருக்கின்றன.”, அதற்கு நீ என்ன செய்தாய் இங்கு கூச்சல் போடுவதை விடுத்து.