முன்னை நாள் இலங்கை ஜனாதிபதியும், போர்க் குற்றவாளியும், இனக்கொலையாளியுமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கான பேரணி ஒன்று மாத்தறையில் நடைபெற்றுள்ளது. இப் பேரணியில் 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆதரவளித்ததாக மகிந்த தரப்புக் கூறுகிறது. கூட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொள்ளவில்லை எனினும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். புலிகளின் முனை நாள் கிழக்கு மாகாணத் தளபதியும் போர்க்குறவாளிகளில் ஒருவருமான கருணா, இடதுசாரி எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, டளஸ் அழகபெருமா போன்றோர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
அங்கு உரையாற்றிய கருணா, மகிந்த ராஜபக்சவே இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் நிலை நாட்டினார் என்றார். மகிந்தவைப் பிரதமராக்கி இந்த நாட்டுமக்களின் எதிர்காலத்தை ஒளி மயமமானதாக மாற்றுவோம் என்றார்.
குறுகிய காலத்திற்குள் மகிந்தவின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட ஐந்தாவது பேரணி இதுவாகும்.
மகிந்த ராஜபக்ச என்ற இன்றைய உலகின் பயங்கரவாதியுடன் உறவுவைத்துக்கொள்ளும் இவர்கள் எந்தக் கூச்சமும் இன்றி தமது அரசியல் வியாபாரத்தைத் தொடர்கின்றனர். இவை அனைத்துக்கும் மேலாக, மகிந்த ராஜபக்ச போர்க்குற்றங்களுக்காகவோ ஊழலுக்காகவோ தண்டிக்கப்பட மாட்டார் என்ற நம்பிகையும் இப் பிழைப்புவாதக் கும்பலிடம் காணப்படுகிறது.