ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை புதிய அரசாங்கத்தின் 100 நாள் சிறிய வேலைத் திட்டத்திற்கு நட்பு நாடு என்ற ரீதியில் ஆதரவு வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அதே வேளை, செயலாளர் நிஷா பிஸ்வால் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
´இலங்கையின் முன்னேற்றம் குறித்து நேரில் அறிவதற்கு நான் ஆவலாக உள்ளேன். இலங்கையில் ஏற்பட்ட ஜனாதிபதித் தேர்தல் ஆட்சி மாற்றம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சிறிய 100 நாள் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அதில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் சில சவால்களும் உள்ளன. இந்த திட்டத்தை செயற்படுத்த இலங்கையின் நட்பு நாடு என்ற அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயார் என்றார்.
ராஜபக்சவின் ஊடாக வன்னி இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்கா இனச் சுத்திகரிப்பைச் சத்தமின்றித் தொடர்வதற்காகவும் இலங்கையைச் சூறையாடுவதற்காகவும் மைத்திரிபாலவை நியமித்துள்ளது. அமெரிக்காவின் அடியாள் படைகள் போன்று செயற்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.
நிஷா அக்கா குள்ள நரி ரணில் விக்கிரமசிங்க உடன் நடாத்திய சந்திப்பும் அதற்கான பிணந்தின்னி ஆர்மிடேஜ்-இன் அண்மையஏவலும் முக்கியமானவை.
http://www.bing.com/news/search?q=Editor%E2%80%99s+note:+The+following+op-ed+was+contributed+by+Richard+Armitage
ஸ்ரீலங்கா இன் கத்தரிக்காய் ஜனநாயகத்தை மேற்கோள் காட்டி சர்வதேச வியாபாரம், இந்து சமுத்திரத்திலும் அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநாட்ட சரியான நேரம் என இழுத்தடித்து போர்க்குற்ற விசாரணைக்கு புதிய அரசு என்ற சாட்டில் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமாம்.
பிணந்தின்னி டோக்கியோ-இல் 2003-இல் மிலிந்த மொறகொட ஊடாக ரணில் உடன் சேர்ந்து ஆடிய நாடகத்துடன் நேரடித் தொடர்புடையது
http://2001-2009.state.gov/p/sca/21052.htm
தளபதி கருணா துரோகியானது முதல் புலிகளின் அழிவு நிர்ணயிக்கப்பட்டது எல்லாம் அன்றைய $4.5 பில்லியன் பிச்சையை ஏற்கமறுத்ததாலேயே. ஏற்கத்தெரியாமல் தத்தளித்தது என ஆதாரத்துடன் எவரும் கூறினால் அதுவும் உண்மையுமாகலாம்.
திரைமறைவு நகர்வுகளில் ஆர்மிடேஜ் தான் ஸ்ரீலங்காவை அமெரிக்காவுடன் சேர்த்து சர்வதேச க்ரிமினல் நீதிமன்றில் (ICC) இல் சேராமல் தடுத்தவர்களில் முக்கியமானவன்.
பன்னிரெண்டு வருடங்கள் கழித்து இந்தியா எப்படி பிராந்திய அடிமையாக நிற்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுவதே நிஷா பிஸ்வால் தூதுவளாக தேர்ந்தெடுக்கப்படும் யுக்தி.