2005 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவைப் ஜனாதிபதிப் பதவியில் அமர்த்தும் நோக்கத்துட்ன் அமெரிக்கா தனது ஆதரவாளர்கள், துணை அமைப்புக்கள் ஊடாகச் செயற்பட்டது.
2004 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை தென்கொரியாவின் வெளிநாட்டு அமைச்சராகப் பதவிவகித்த பன் கீ மூன் ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்காக அமெரிக்க அரசின் அடியாளாகச் செயற்பட்டார்.
2004 ஆம் ஆண்டு சுனாமி அழித்துத் தணிந்திருந்த காலத்தில் தென் கொரியாவின் வெளி நாட்டமைச்சராகவிருந்த பன் கீ மூன் இலங்கைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்கிறார். பன் கீ மூனின் வருகையுடன் மகிந்த ராஜபக்ச ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட என்ற உதவி நிதியத்தை ஆரம்பிக்கிறார்.
பான் கீ மூன் ராஜபக்சவுடன் உலாவந்த அதேவேளை,, அந்த நிதியத்திற்கு இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் நிதி வழங்குகிறார். பல மில்லியன்கள் பெறுமதியான இந்த நிதியை ராஜபக்ச களவாடுகிறார். பின்னதாக இதுவே ராஜபக்சவின் 2005 ஆம் ஆண்டு வெற்றிக்கான தேர்தல் பிரச்சார நிதியாகப் பயன்படுத்தப்பட்டது.
கொரிய அரசினால் வழங்கப்பட்ட நிதி தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ராஜபக்ச மறைத்து அழித்துவிட்டர். இதுதொடர்பாக சண்டேலீடர் ஊடகம் பிரதம மந்திரி ராஜபக்சவைக் கேள்வியெழுப்பிய போது பான் கீ மூன் இடமிருந்து நிதி பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொள்ளும் ராஜபக்ச அது குறித்த விபரங்களை வெளியிட மறுக்கிறார். தனது செயலாளர் லலித் வீரதுங்கவைக் கேட்குமாறு தப்பிக் கொள்கிறார்.
2007 ஆம் ஆண்டு பன்கீ மூன் ஐ.நாவின் செயலாளராகப் பதவியேற்க ராஜபக்ச இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்துகிறார்.
ராஜபக்ச அரசிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொடுக்கப்பட்ட வேலை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தோடு நிறைவிற்கு வர அமெரிக்க்காவின் புதிய அடியாட்படை ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூறுகளான தன்னார்வ நிறுவனங்களையும், மனித உரிமை அமைப்புக்களையும், ஐ.நா போன்ற உலக நிறுவனங்களையும் நம்பக் கோரிய தமிழ்த் தலைமைகள் போருக்குப் பின்னான ஆறு வருடங்களில் மக்கள் எழுச்சிகளை ஒடுக்கும் வேலையைக் கச்சிதமாக அமெரிக்காவிற்குச் செய்து கொடுத்திருக்கின்றன.
இன்று பேரினவாத அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆணையுடன் செயற்படுகிறது அதே வேளை அதன் எதிர்த்தரப்பு அனைத்துமே அமெரிக்க அரசின் பிடியிலேயே உள்ளது.
இன்று அமெரிக்க அரசு போர்க்குற்ற விசாரணை தேவையற்றது என கூறுகிறது.
ஆதாரம்:
http://www.thesundayleader.lk/20050703/spotlight.htm
பிரதமனாயிருந்த மகிந்த ராஜபக்ச சுனாமிப்பேரவலத்தின் பின்னணியில் 2004 இன் இறுதி நாட்களில் தென் கொரிய வெளியுறவுத்துறை அமைச்சனாய் இருந்த பான் கீ மூனுடன் ஒரு நெருக்கமான உறவை உருவாக்கியதாகவும்
அது
சுனாமி அழிவுகளை பார்க்க சுற்றுலா மேற்கொண்ட இருவரும் எப்படி ஜனாதிபதி சந்திரிக்கா-ஐ வெளியுறவுத் துறை அமைச்சன் கதிர்காமனூடாக வளைத்தெடுத்து ஸ்ரீலங்கா பிரஜை ஒருவனூடாக ஐ.நா செயலாளன் பதவிப் போட்டியை குழப்பி அடிப்பது பற்றி சதித் திட்டம் தீட்லானதாகவும் அண்மையில் சிலோன் டுடே-இல் வெளிவந்த குறிப்பு காட்டியது.
தற்போது ஐ.நா மனிதவுரிமை விவகாரங்களில் அதிரடியாக ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஜயந்த தனபால -வே அவ்வாறு விபச்சார அடிப்படையில் ஐ.நா செயலாளன் பதவிக்கு முன்னிறுத்தப் பட்டவன். தக்க தருணத்தில் போட்டியிலிருந்து பின் வாங்கியதால் உருவான குழப்பங்கள் பான் கீ மூன் -இன் வெற்றியை உறுதிப்படுத்தியது.
அத்திட்டம் வெற்றி பெற்றது 2006 அக்டோபர் 13.
ஐ.நா செயலாளனாக பதவியெற்றது 2007 ஜனவரி 01.
http://ceylontoday.lk/42-77000-news-detail-will-sri-lanka-lose-japan-and-south-korea-because-of-chinese-submarines.html
இவ்வளவு நுணுக்கமாக நவம்பர் 2014 -இல் எழுதியது சிலோன் டுடே எனும் பத்திரிகை. அப்பத்திரிகையின் உரிமையாளன் டிரான் அலஸ்.
மகிந்த ராஜபக்ச, மங்கள சமரவீர, டிரான் அலஸ் ஆகிய மூவரும் ஒன்றாகவே பல சதிகளில் பங்குவமகித்தவர்கள். நேற்று ஐ.நா -இல் சந்தித்த போது மங்கள சமரவீர பான் கீ மூன் -உக்கு தாமிருவரும் சுனாமியின் பின்னணியில் சந்தித்ததை ஞாபகமூட்டியதாக இனர் சிட்டி ப்ரெஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இது மறைமுகமான ஒரு பயமுறுத்தலாகவும் கருதப்படக்கூடியது.
பான் கீ மூன் -இன் மருமகன் யாழ்ப்பாணத்தில் பிரபாகரனை பிடிக்கப்போய் மயிரிழையில் உயிர் தப்பிய முன்னாள் இந்திய விசேட அதிரடைப்படை அங்கத்தவன், சித்தார்த் சட்டர்ஜி. பான் கீ மூன் -இன் மகளை ஐ.நா சேவையில் சந்தித்து இரண்டாவது தாரமாக கட்டிய போது முதல் மனைவி இந்தியாவில் பெரிய கும்மாளம் போட்டு பல முக்கிய ரகசியங்களையும் வெளிவிட்டவள். சித்தார்த் சட்டர்ஜி -உம் மாமா வெல்வதற்கு ஏதுவாக ஸ்ரீ லங்கா -ஐ அணுகியுமிருக்கலாம். விஜை நம்பியார் அவனின் அண்ணன் சதீஷ் நம்பியார் என மட்டுமல்லாமல் சித்தார்த் சட்டர்ஜி -இன் ஸ்ரீலங்கா மீதான அளவுகடந்த பற்று ஏதுமிருப்பின் அது ஆராயப்பட வேண்டும். இந்தியா 2006 இல் ஐ.நா செயலாளன் பதவிக்கு முன்னிறுத்திய இன்னொரு பாதகனும் குறிப்பிட்ட நேரத்தில் பின்வாங்கப்பட்டதற்கான அறிகுறிகளும் உண்டு.
‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட’ திட்ட ஊழலிலிருந்து மகிந்த ராஜபக்ச-ஐ தப்ப தான் தான் வழிசெய்ததாகவும் தன் வாழ்க்கையிலேயே பெரிய பிழை அது தான் என்றும் அன்றைய பிரதம நீதியரசன் சரத் என் சில்வா ஒரிரு மாதங்களுக்குள் புலம்பியிருப்பதையும் கவனத்திலெடுக்க வேண்டும்.
சரியான தகவல் 2005 ஐக்கிய ராஜ்யத்தின் உளவாளி அன்டன் பாலசிங்கமும் ராஜபக்சவைக் கொண்டுவருவதற்குப் பாடுபட்டார். அப்பாவி பிரபாகரனை வைத்து தேர்தலை பகிஷ்கரிக்கச் சொல்லி மகிந்தவை வெற்றி பெற வைத்தார்.