இனவாதம், மதவாதம் பேசினாலோ, எழுதினாலோ இரண்டு வருடம் சிறைதண்டனை என்று குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டு வர இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பெருந்தேசிய ஒடுக்குமுறை லட்சம் லட்சமாய் உயிர்களைக் கொன்றுபோடும் ஒரு நாட்டில் இனவாதம் அரசியல் யாப்பின் ஒடு பகுதியாக உள்ளது. தேசிய இன ஒடுக்குமுறை இலங்கை அரசியலின் பிரிக்க முடியாத பகுதியாகியுள்ளது. ஆக, இனவாத்மும் மதவாதமும் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது அரச தரப்பிலேயே.
இலங்கையில் ஆறாம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் பிரிவினை கோருவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி பிரிந்து செல்லும் உரிமையைத் தடை செய்ய அரசு முயல்கிறது. அதே போன்று இனவாதம், மத வாதத்திற்கு எதிரான சட்டங்களைப் பயன்படுத்தி சிறுபான்மைத் தேசிய இனங்களின் அடைப்படைக் கோரிகைகளை இலங்கை அரச பேரினவாதிகள் இனவாதமாகவும் மதவாதமாகவும் உரு மாற்ற முனையலாம். இனவாத்ததை அழிக்க விரும்பினால் சிறுபான்மைத் தேசிய இனங்களில் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிப்பதிலிருந்தே ஆரம்பிக்கலாம்.
// இனவாத்ததை அழிக்க விரும்பினால் சிறுபான்மைத் தேசிய இனங்களில் சுய நிர்ணைய உரிமையை அங்கீகரிப்பதிலிருந்தே ஆரம்பிக்கலாம்.//
அனைவரும் இலங்கையர் என வரும் போது – இனவாதம் இல்லாமல் போக வேண்டும். மலையக தமிழர் வாக்குரிமையை யாழ் தமிழர் அரசியல்வாதிகள் பறிக்காதிருந்தால் – இடதுசாரிகள் பாராளுமன்றத்துக்குள் வந்திருப்பார்கள். இனவாதம் தலை தூக்கியிருக்காது.
இனியொரு எனும் இடதுசாரி தளத்தில் இனவாதம் பரப்பப்படுகிறதே!
## இடதுசாரிகள் பாராளுமன்றத்துக்குள் வந்திருப்பார்கள். இனவாதம் தலை தூக்கியிருக்காது.##
என்னது ? இடதுசாரிகள் வந்தால் இனவாதம் தலை தூக்கியிருக்காதா ? ஒன்று , தங்களுக்கு இலங்கை இடதுசாரிகளின் வரலாறு தெரியாதிருக்க வேண்டும் அல்லது இலங்கை இடதுசாரிகளை வைத்து காமெடி பண்ணுபவராக இருக்க வேண்டும்.
கொல்வின் , என்.எம்.பெரெரா போன்றவர்களின் இனவாதம் பற்றி தெரியாத அப்பாவியா நீங்கள் ?
மலையக தமிழர்களின் வாக்குரிமை பறிப்புக்கு அரசோடு இணைந்திருந்த ஒரு சில கமிழ் அமைச்சர்கள் துணை போனார்கள் .
ஆனால் இடது சாரி கட்சிகள் அனைத்தும் பேரினவாதத்தோடு இணைந்து மலையக மக்களின் வாக்குரிமையை பறித்தன.
மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது பேரினவாதத்துடன் இணைந்து செயற்பட்ட இடதுசாரிக்கட்சிகள் எவை?
தனிச் சிங்கள சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா ஒரு மொழியென்றால் இருநாடுகள் இரு மொழி என்றால் ஒரு நாடு என்று கூறியமையும் பதிவேடுகளில் பதிவாகியுள்ளன.
மேலதிக தகவல்கள் : – http://salasalappu.com/?p=69720
1955 ஆம் ஆண்டு சிங்களமும் தமிழும் உத்தியோக மொழிகளாக வேண்டுமென்ற மசோதாவை சமச மாஜக் கட்சித் தலைவரான என்.எம்.பெரேரா நாடாளுமன்றத்தில் சமர்பித்து தீவிரமாகவும் திறந்த மனத்துடனும் அதற்காக வாதிட்டார். தமிழ் தலைவர்களைவிடவும் மொழிச்சமத்துவம் கோரி மிகப் புகழ்பெற்ற விவாதங்களை மேற்படி 1955ஆம் மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் லங்கா சமச மாசஜிஸ்ட்டுகளும் இலங்கை கம்னியூஸ்ட்களும் நிகழ்த்தியுள்ளனர். பண்டாரநாயக்காவின் இனவாத நிலைப்பாட்டைக் கண்டித்து தனிப்பட்ட ஒர் உரையாடலின் போது பண்டாரநாயக்காவைப் பார்த்து ‘ஒரு சாண் கயிற்றில் நீ தூங்கித் தற்கொலை செய்தால் அதற்காக அந்த கயிறு தனது பெறுமானத்தை இழந்துவிடும்’ என்று என்.எம்.பெரேரா கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
https://inioru.com/24366/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/
But the same leaders worked hand in glove with the same racists later on, 🙁
தமிழர் தமிழ் இனவாத கட்சிகளை தொடங்கிய பின் நிலமை மாறியது.
அஜீவன் சொல்வதில் உண்மை இருக்கிறது. தமிழ் இனவாதக் கட்சிகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அனீதிகளுக்கு எதிராக தனி நாடு கேட்டிருக்கலாம். அது வேறு. சிங்களவனின் தோலில் செருப்புத் தைப்போம். ஆண்ட தமிழன் என்பதால் மீண்டும் ஆள்வோம் எனக் கொக்கரித்தவர்கள். யாருக்குமே முதலில் அப்படியான கருத்துகளை எதிர்கொள்ள வேண்டும் என்றே நினைப்பார்கள். என்.எம்.பெரேரா ஒருபடி மேலே போய் சிங்கள இனவாதக் கட்சிகளை ஆதரித்தார். அதற்கு காரணம் என்.எம் தன் நம்பிக்க்கை இல்லாதவர். துணிவில்லாதவர். அவரே இலங்கையில் மேல்தட்டு வர்க்கம் தானே?
What a convenient excuse, this is proof enough they did not have any conviction in their beliefs. End of story.
I do not agree with leftist parties. They were and are interested only in getting the votes and used to change their policies just to get a few more votes. But that will not justify the communal venom injected by leaders of “Tamil” parties and communities.