தூத்துக்குடி – வேதாந்தா படுகொலைகளின் பின்னர் நூற்றுக்கணக்கில் மக்களும் போராட்ட அமைப்புக்களைச் சார்ந்தவர்களும் விசாரணையின்றிக் கைது செய்யப்படுகின்றனர். தேசத் துரோகக் குற்றச்சாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்த தோழர்கள் தமிழ் நாடு முழுவதும் கைதுசெய்யப்பட்டு விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்துதுவா பாசிசத்தின் தமிழ் நாடு முகவர்களகச் செயற்படும் எடப்பாடி அரசின் போலிஸ் பாசிசம் தமிழ் நாட்டில் ஆயுதப் போராட்டத்திற்கான புறச்சூழலை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் மோடியின் அடியாளான பாபா ராம் தேவ் என்ற யோகா வியாபாரி வேதாந்தாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். மூலிகை வர்த்தகத்தில் பல்தேசிய நிறுவனமாக வளர்ந்துவிட்ட பாபா ராம் தேவ் வேதாந்தாவின் தலைவர் அனில் அக்ரவால் குடும்பத்தை லண்டனில் சந்தித்த பின்னர், வேதாந்தாவை தான் ஆதரிப்பதாகவும் அந்த நிறுவனத்திற்கு எதிரான செயற்பாடுகள் வெளி நாடுகளிலிருந்து திட்டமிடப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அனில் அக்ரவால் மற்றும் அவரது மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ராம் தேவ், தூத்துக்குடி ஆலை மூடப்படக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத நிறுவனங்களிலிருந்து ஆர்.எஸ்.எஸ் சார்பு இந்துத்துவா அமைப்புக்கள் அனைத்தும் ஒரணியில் திரண்டு வேதாந்தாவிற்கு ஆதரவான பிரச்சாரத்தில் ஈடுபட அதன் மறுபக்கத்தில் தமிழகத்தின் இந்துத்துவ முகவர் அரசு கைதுகளைத் வரையறையின்றி மேற்கொள்கிறது.
இன்று தெற்காசியாவை அழிப்பதற்கு அணிதிரண்டிருக்கும் இக் கூட்டணிக்கு எதிராக மக்கள் கூட்டிணைவு அவசியமானதாகும்.