மேலும் தொல்லியல் திணைக்களம் அதன் பெயர்பலகையில் தமிழில் பத்திரகாளி கோவில் என்று குறிப்பிடும் அதேவேளை ஆங்கிலத்தில் (kaali she-devil ) காளிமாதாவை பெண்பிசாசு என்று குறிப்பிட்டு சைவத்துக்கு...
இன்றைய ராஜபக்ச காட்டுமிராண்டி அரசின் உருவாக்குவதற்கு புலம் பெயர் புலிகளின் பங்களிப்பு பிரதானமானது. அதனை வீழாமல் பாதுகாக்க இந்தக் கும்பல் முயற்சிக்கிறது.
கந்த சஷ்டிக் கவசத்தை இழிவு செய்ததாகக் கூறி பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் நிர்வாகத்தினர் மீது கைது நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. அதில் செந்தில்வாசன், சுரேந்திரன் என்ற இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குண்டர் சட்டம் செல்லாது என்று சுரேந்திரன் மனைவி கீர்த்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் மீதான பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னர் செந்தில்வாசன், சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அச்சுறுத்திய போதும், தமிழக அரசு, போலீஸ் என கடுமையாக நடந்து கொண்ட போது...
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மோடி அரசு பல ஆண்டுகளுக்குப் பின்னர் இணையச் சேவையை காஷ்மீருக்கு வழங்கியுள்ள நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் பல...
சாரி சாரியாக கோத்தாபாயவின் காட்டுமிராண்டி அரசின் அனுசரணையுடன் நடைபெறும் நில அபகரிப்பு, மலையக மக்களின் நாளாந்த வாழ்வுரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல், முஸ்லிம் மக்களின் அடிப்படை இருப்பிம்...
தில்லி டிராக்டர் பேரணிக்குப் பின் போலீசார் உருவாக்கியிருக்கும் தடுப்பு அரண்களை பார்த்தேன் . பேரிகேட்களை குறுக்குவாட்டில் ரோட்டில் அடுக்கி கான்கிரீட் கலவை ஊற்றியிருக்கிறார்கள் .பல வரிசை கான்க்ரீட் தடுப்புகள் .கூரான ஆணிகள் பதித்த இரும்புப் பட்டைகளை ரோட்டில் பதித்திருக்கிறார்கள் . சுருள் முள் கம்பிகள் , போலீசாருக்கு லோக்கல் பட்டறை மேட் இரும்புத்தடி ஆயுதங்கள் . இது ஏதோ குற்றங்கள் மலிந்த ,கேங்வார் நடக்கும் டிஸ்டோப்பியன் நகரம் ஒன்றை நினைவுறுத்தியது . போலீசார் தரப்பில் மேலோட்டமாக பார்த்தால் இதற்கான நியாயங்கள் இருப்பது போல தோன்றலாம் . ஆனால் இதன் பின் இருக்கும் மனநிலையை யோசித்து பார்த்தால் பகீரென்கிறது. இது பிராக்டிகலாக பயன் உள்ளதா இல்லையா என்பதல்ல கேள்வி , இது விடுக்கும் செய்தி என்ன என்பது தான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது. அதாவது விவசாயிகள் ஆபத்தானவர்கள் , காட்டுமிராண்டிகள் , எதிரிகள் , தூரத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள் .அவர்கள் வேறு அரசு வேறு என்று அடையாளப்படுத்தும் மனநிலை . இவ்வித நடவடிக்கைகளில் இருக்கும் ஒரு கீழ்மையான அவமதிப்பு அரசுக்கு புரியவில்லை . போராடும் விவசாயிகள் மீதான அடிப்படை மரியாதை இல்லாத கண்ணியமற்ற அணுகுமுறை இது . இது ஏன் நிகழ்கிறது ? நம் பண்பாட்டில் ஊறிப்போயிருக்கும் பாகுபாடு காட்டும் வழக்கம் என்பதன் வேறொரு மாதிரிதான் இது . நாம் பாகுபாடு என்ற உடனே சாதிய பாகுபாடு என்பதையே மனதுள் உருவகிப்போம் . ஆம் அது தான் மையமானது ஆனால் அது உருவாக்கும் இந்த பாகுபாட்டு சார்ந்த மனநிலை சாதியையும் கடந்தது . Caste is a structure , discrimination is a practice. மனிதர்களை சமமான மரியாதை கொண்டவர்களாக நடத்தும் வழக்கம் நம் பண்பாட்டில் உருவாகவே இல்லை, அந்த எண்ணமே நம் சிந்தனை முறைக்கு அன்னியமானது. அங்கிருந்து கொண்டு நவீன ஐனநாயக வழுமியங்கள் நோக்கி வர நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் . முதலில் வேறுபாடாக அடையாளப்படுத்தியது மெல்ல திரிந்து பாகுபாடாகிறது , பாகுபாடு என்பது பின் கீழ் மேலாக graded ஆக அடுக்கப்படுகிறது. "Differentiate ,Distance , Discriminate...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.