இனியொரு...

இனியொரு...

கேரள முதல்வரை பழிவாங்க துடிக்கும் பாஜக!

கேரள முதல்வர் பினராயி விஜயனை தங்கக் கடத்தல் வழக்கில் சிக்க வைத்து தேர்தலுக்கு முன்னர் அவரை பொதுவெளியில் அவமானப்படுத்த திட்டமுட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கேரளத்தில் மட்டுமே இடதுசாரிகளின் ஆட்சி...

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் அறிவிப்பு!

திருச்சி அருகில் உள்ள சிறுகனூர் பகுதியில் திமுகவின் மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மாநில மாநாடு ரத்து செய்யப்பட்டது. ஆனால்,...

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாகச் சொன்ன சீமான் பின்வாங்கியது ஏன்?

ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதாகச் சொன்ன சீமான் பின்வாங்கியது ஏன்?

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. நாம்தமிழர் கட்சி...

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 21 தொகுதிகள்!

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 21 தொகுதிகள்!

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு அதிமுக 21 தொகுதிகள் ஒதுக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.கடந்த சில...

என் உரையை தவறாக மொழியாக்கம் செய்கின்றீர்கள் எச்.ராஜாவை கிண்டல் செய்த அமித்ஷா!

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் யாராக இருந்தாலும் தமிழகம் வந்தால் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாற்றுவார்கள். காரணம் இந்திக்கு எதிரான தமிழர்களின் மனநிலை இதை புரிந்து...

தோல்விகளில் இருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொண்டது காங்கிரஸ்?

இந்தியாவில் பாஜகவின் வலதுசாரி ஆட்சிமுறையை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி வரும் நிலையில் அது தோல்விகளில் இருந்து என்ன பாடத்தைக் கற்றுக் கொண்டது என்ற கேள்வியும்...

தா.பாண்டியன் தோழில் இருந்த துண்டு  இறங்கிய தருணம்!

தா.பாண்டியன் தோழில் இருந்த துண்டு இறங்கிய தருணம்!

தோழர் தா.பா.வின் மறைவு முக்கியமான நேரத்தில் நிகழ்ந்த பேரிழப்பாகவே கருத முடியும். எஞ்சிய வாழ்நாளை இந்துத்துவ ஃபாசிசத்துக்கெதிரான போராட்டத்தில் கழிக்க விரும்புவதாக அவர் சொல்லி இருந்தது முக்கியமானது. இந்தியச் சமூக ஆய்வு மற்றும் திசைவழி தொடர்பாகவும், வலது, இடது பாதைகள், முதலாளித்துவ ஜனநாயக மற்றும் ஆளும்வர்க்கக் கட்சிகள் குறித்த வரையறுப்புகள், நட்பு சக்தி, பகை சக்தி பற்றிய தீர்மானங்கள் என ஒரு கம்யூனிஸ்ட் முரண்பட சாத்தியமுள்ள பல்வேறு விசயங்கள் இருக்கும் போதிலும் ‘எது ஃபாசிசம்?’ என்பதிலும், அது தொடர்பான நிலைப்பாட்டிலும் ஒரு கோட்பாட்டு புரிதல் என்பது ஒரு கம்யூனிஸ்டுக்கு மிக அவசியம். அதனை அவரது அந்திம காலத்தில் கொண்டிருந்தது சிறப்பு. தா.பா.வின் கடந்தகால நிலைப்பாடுகள் அனைத்தும் ஏற்புடையதல்ல. ஒரு காலகட்டத்தில் துக்ளக் இதழில் அவரது பத்தி எழுத்துகள் வெளிவந்து கொண்டிருந்தன. அனேகமாக துக்ளக்கில் எழுதிய ஒரே கம்யூனிஸ்ட் தா.பா.வாக தான் இருப்பார். அந்தளவுக்கு அவரது கம்யூனிசத் தன்மை வலதுசாரியமாக கரைந்திருந்தது. அந்த சரிவிலிருந்து 2000–ஆம் வாக்கில் அவர் மீண்டார். மறுபடியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகி வெகு சீக்கிரத்தில் தமிழ் மாநிலக் குழுவின் செயலாளர் ஆனார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த நேரம். அதன் தவறுகளை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் ஒரு கட்டத்தில் ஏற்பட்டது. அது காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத அதிமுகவை ஆதரிப்பதில் போய் நின்றது. ஜெயலலிதா மதிக்கவில்லை என்ற நிலையிலும் 2011–ஆம் ஆண்டு தேமுதிகவை அதிமுக கூட்டணியில் இணைப்பதில் தா.பா தனது தனிப்பட்ட செல்வாக்கை காட்டினார். அது தமிழகத்துக்கு எவ்வளவு பெரிய பாதகமாக அமைந்தது என்பது இன்றளவும் அந்த பாரத்தை தமிழகம் இறக்கி வைக்க சிரமப்படுவதில் ஒருவர் உணரலாம். 2011 – இல் ஜெயலலிதா மதிக்காத நிலையில் தனிக்கூட்டணி அமைத்திருந்தால் தேமுதிக கூட்டணியில் சில தொகுதிகள் வெற்றி பெற்று ஒரு வரலாற்றுப் பிழையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி காப்பாற்றப்பட்ட பெருமை ஏற்பட்டிருக்கும். விஜயகாந்துக்கு அப்போது கொஞ்சம் மக்கள் செல்வாக்கும் இருந்தது. எதிர்பார்த்ததை போல ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனே தான்தோன்றித்தனமாக செயல்பட ஆரம்பித்தார். ‘ பால் விலையை ஏற்றி இருக்கிறேன்; பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளேன். ஆனாலும் சங்கரன்கோவிலில் வெற்றி பெற்றுக் காட்டுகிறேன்’ என்று பாசிஸ்ட்களுக்கே உரிய தொனியில் அறிவித்தார். எந்த பெரிய போராட்டத்தையும் அவர் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவில்லை. ஜெயலலிதாவை அம்பலப்படுத்த வேண்டிய ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் பாரத்தையும் மகஇக போன்ற அமைப்புகள் தான் தோளில் போட்டுக் கொண்டன. தா.பா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை ஜெயலலிதா அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை இரண்டு கட்சிகளும் முரண்படாது என்ற எண்ணம் ஏற்பட்டது. தா.பாவின் 80–வது பிறந்த நாளின் போது ஜெயலலிதா நேரில் வாழ்த்தினார். ஜெயா மறைந்த சோகத்தில் இருந்த சசிகலாவை சந்தித்த போது தா.பாவின் சிவப்புத் துண்டு தோளில் இருந்து இறங்கி கைகளில் தொங்கிக் கொண்டிருந்தது. 2008–ஆம் ஆண்டில் ஈழப் போரின் பாதிப்புகளை தமிழகம் உணர்ந்து கொள்ள அவர் தலைமையிலான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் பயன்பட்டது என்றால் மிகையில்லை. இந்த பிரச்சினையை கம்யூனிஸ்ட்கள் தொட்டு விட்டார்கள். அது வெற்றி முகாந்திரத்துக்கு எடுத்துக்காட்டு என்று தமிழ் அமைப்புகள் பலவும் வாழ்த்தின. அவருடைய நூல்களில் சே குவேரா பற்றியது மட்டும் வாசித்துள்ளேன். அவருடைய ‘பொதுவுடமையரின் எதிர்காலம்’ என்ற தலைப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தேக்கம் மற்றும் பிரச்சினைகள் பற்றிய அவரது அக்கறையை வெளிப்படுத்துவதாக உணரலாம். தோழர் தா.பா.வுக்கு அஞ்சலி.

Page 74 of 1549 1 73 74 75 1,549