இது என்ன அறிவிலித்தனமான கேள்வி விசுவநாதர் கோயிலினை (Viswanath temple ) இடித்த ஔரங்கசீப் எனும் இசுலாமிய மன்னனைக் கொண்டு போய் மோடியுடன் ஒப்பிடுவதா? என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படும். இதனை இருவரதும் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற இரு நிகழ்வுகளுடன் ஒப்பீட்டுப் பார்த்து விடுவோம். `ஔரங்கசீப் காசிக் கோயிலினை இடித்தார்` என்றே மொட்டையாக இன்றைய தேர்தல் களங்களில் பரப்புரை செய்யப்படுகின்றதே தவிர ஏன் இடித்தார்? யார் கேட்டு இடித்தார் என்பன சொல்லப்படுவதில்லை. இதோ பார்ப்போம்.
ஒளரங்கசீப் ஆட்சிக் கால நிகழ்வு:-
ஒளரங்கசீப் ஆட்சியின் கீழிருந்த சிற்றரசர்கள், படைத் தலைவர்கள் {இவர்கள் எல்லாம் இந்துக்கள்} ஒரு நாள் தமது பேரரசரைத் தம்முடன் வரணாகாசியில் வந்து தங்கியிருக்குமாறு கேட்டார்கள். அவ்வாறு தங்கியிருந்த போது, இந்துச் சிற்றரசர்களும் அவர்களது அரசியர்களும் காசியில் நீராடி, கோயிலுக்குள் சென்று வணங்கி விட்டு வந்தார்கள். அவ்வாறு திரும்பி வரும் போது, ஒரு அரசியினை மட்டும் காணவில்லை. உடனே படையினர் எங்கு தேடியும் அரசி கிடைக்கவில்லை. இறுதியாகக் கோயிலுக்குள் போய்த் தேடினார்கள். அங்கிருந்த கணபதி சிலை சற்றுத் திரும்பியிருந்தது. அதனை ஆராய்ந்த போது, உள்ளே ஒரு சுரங்கப்பாதை சென்றது. உள்ளே சென்று பார்த்தால், கோயில் புரோகிதர்கள் அந்த அரசியினைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கொண்டிருந்தார்கள்
. அரசி, படையினரால் மீட்கப்பட்டு, புரோகிதர்கள் சிறைப் பிடிக்கப்பட்டார்கள். இந்த சுரங்கம் பற்றி அதுவரை அறியாத இந்துக்கள் பொங்கி எழுந்து, இத்தகைய கொடியவர்களின் கூடாரத்தினை இடிக்குமாறு கேட்டார்கள். அப்போதுதான் மூலவர் சிலை அகற்றப்பட்டுக் கோயில் இடிக்கப்பட்டது. இங்கு பாதிக்கப்பட்டது, வேண்டுகோள் வைக்கப்பட்டது எல்லாம் இந்துக்களாலேயே என்பதனைக் கவனத்திற் கொள்க. களங்கப்பட்ட கோயில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இடிக்கப்பட்டது. கட்டளை பிறப்பித்து நீதியினை நிலைநாட்டியது மட்டுமே ஒளரங்கசீப்.
இந்த நிகழ்வுக்கான சான்றுகள்-
- P.N.Pande { Bishambhar Nath Pande} – Former Governor of Odisha, freedom fighter, social worker எழுதிய Islam And Indian Culture எனும் நூலின் பக்கம் 55
- Bhogaraju Pattabhi Sitaramayya எழுதிய Feathers & Stones
https://books.google.co.uk/books/about/Feathers_Stones.html?id=lQKpzrQ0-9oC&redir_esc=y
- பி.எல்.குப்தா ( பாட்னா அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் ) எழுதிய பல்வேறு கட்டுரைகள்.
இவர்கள் எல்லோரும் இந்துக்களே.
மோடி ஆட்சிக் காலத்து நிகழ்வு:-
2018-ம் ஆண்டு சனவரி மாதம் 10ம் திகதி அன்று ஆசிபா(ஹசிபா) எனும் 8 வயதுப் பெண் குழந்தை காணமற் போகிறாள். எல்லா இடமும் தேடிய பழங்குடி இனப் பெற்றோர், கோயிலுக்குள் மட்டும் போகவில்லை, ஏனெனில் கடவுள் இருக்குமிடத்தில் கொடுமைகள் நடக்காது என்ற நம்பிக்கையில். இறுதியாக அக் குழந்தை கோயிலுக்குள் அடைத்து வைக்கப்பட்டு, அங்குள்ள அர்ச்சகராலும் பிறராலும் பல நாட்களாகப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறாள்.
செய்தி தெரிய வந்ததும் காவல்துறை இதனை மூடி மறைக்கின்றது, பா.ஜ.க அமைச்சர்கள் சௌதரி லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் கங்கா ஆகியோர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த ஒரு பேரணியில் கலந்து கொண்டு, குற்றத்தினை நியாயப்படுத்துகிறார்கள். பா.ஜ.க வின் அன்றைய தேசியச் செயலாளரும், இன்று தமிழ் நாட்டில் வாக்குக் கேட்டு வரும் எச்.ராஜா `கோயிலில் கதவே இல்லை, எப்படி அடைத்து வைப்பது?` எனப் பொய் பேசியிருந்தார். உலக ஊடகங்கள் கண்டித்த போதும் மோடி கண் மூடி அமைதியாகவிருந்தார்.
{ பின்னர் ஒரு பெண் வழக்கறிஞரின் துணிவான செயலாலும், நீதிபதி ஒருவர் வழங்கிய அறம் சார் தீர்ப்பினாலும் குற்றவாளிகள் சிறையிலடைக்கப்பட்டது வேறு விடயம். இருந்து பாருங்கள் அவர்கள் விரைவில் வெளி வருவார்கள், பேரறிவாளன் போல என்ன `பற்றரி` வாங்கிக் கொடுத்தார்கள்களா வாழ்நாள் முழுக்கச் சிறையிலிருக்க}
இதற்குப் பின் ஆசிபாவின் பழங்குடி உறவினர்கள் யாவரும் ஊரை விட்டுத் துரத்தப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது.
இப்போது நீங்களே இப் பதிவின் தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை காணுங்கள்.
குறிப்புகள் ::::
- ஔரங்கசீப்பின் மதப் பொறையுடமை (Tolerance)
- ஔரங்கசீப் அரசில் முதன்மையான பொறுப்புகளில் இருந்தவர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்களே. அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில. அவரின் மதக் கொள்கை= , “உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு”.
- விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்.( ஜாதுநாத் சர்கார் குறிப்பு )
* ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் ஆகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது” என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளார்.
2. ஔரங்கசீப் பற்றிய பிழையான புரிதல்களை முதலில் ஏற்படுத்தியவர்கள் பிரித்தானியர்களே, தமது பிரித்தாளும் சூட்சிக் கேற்ப இவ்வாறு செய்தார்கள் (கண்டிக் கடைசி அரசன் சிறீ விக்கிரம ராசசிங்கன் கதை போன்றதே). அவர்கள் பேனாக்கினார்கள். பா.ச.க வினர் `பேனைப் பெருமாளாக்குகின்றார்கள்`.
* நேவார்க் ரூட்ஜர்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றும் ஆண்ட்ரி ட்ரஷ்கே, ஒளரங்கசீப் மீதான இதுபோன்ற கருத்துகளுக்கு ஆங்கிலேய ஆட்சிக்கால வரலாற்றாசிரியர்களே காரணம் என்கிறார். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்ற கொள்கையின்படி, இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு வரலாற்றாசிரியர்கள் ஊக்குவிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
* Aurangzeb: The Man and the Myth
- ஔரங்கசீப் முற்று முழுதாக மனித உரிமைகளைக் கடைப்பிடித்து ஆட்சி செய்தார் என்பதல்ல இப் பதிவின் கருத்து. அது மன்னர்கள் காலம். மோடியின் ஆட்சியினை விட மத நல்லிணக்கம் மிக்க ஆட்சி நடாத்தினார் என்பதும் குறிப்பாக இன்றைய பொய்ப் பரப்புரைகளுக்கு எதிரான ஒரு விளக்கமாகவே இப் பதிவு அமைந்துள்ளது.
- இன்று காசி விசுவநாதர் கோயிலில் யாரும் நேரடியாக திருவுருவினைத் (சிலை) தொட்டு வழிபடலாம். தீட்டு எதுவுமில்லை. மேற்கூறிய நிகழ்வுக்கும், பிற்கால இந்த மாற்றத்துக்கும் ஏதாவது தொடர்புண்டா என ஆய்வு செய்யப்பட வேண்டும். ஒரு ஐயம் தான்.