கடந்த வெள்ளியன்று (09/10/2015) மாலை 4 மணியளவில் 23-rue de cail, Paris- 10ல் அமைந்துள்ள இந்திரா ரெஸ்ரரொண்ட் என்றழைக்கப்படும் தேனீர் சாலையில் டெலோ அமைப்பினருடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் இலங்கையிலிருந்து வருகைதந்த டெலோ தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்(ஜனா), அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொபின் கோடீஸ்வரன்இ மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் போன்றோர் பங்கெடுத்துள்ளனர்.
இந்த ஒன்று கூடல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அங்கு நுளைந்த புலம்பெயர் புலிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர் ஜானாவைக் குறிவைத்துத் தாக்குதல் ஒன்றை நடத்த முயன்றுள்ளனர்.
ஜனா மீதான தாக்குதலில் பிள்ளையானின் ஆதரவாளர்களும் இணைந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெலோ இயக்கத்தைச் சேர்ந்த ஜனாவின் மீது பல்வேறு வன்முறைக் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. கிழக்கில் கருணா தலைமையிலான புலிகளுக்கும் எதிரான தாக்குதல்கள் பலவற்றில் ஜனா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பல்வேறு வன்முறை மற்றும் படுகொலைகளுடன் ஜனா விற்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன.
கருணா தலைமையிலான தாக்குதல்களிலிருந்து தற்காத்துக்கொள்ளவே தற்காப்புத் தாக்குதலை மேற்கொண்டதாக ஜனா குழு கூறி வந்தது.
எது எவ்வாறாயினும் ஜனா வன்முறைகளோடு தொடர்புடையவர் என்பது தெளிவானது.
பிரான்சில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் என்பது, பாராளுமன்றத் தேர்தல் ஊடாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் பிரதிநிதி ஆயுதங்களின்றி நடத்திய ஒன்றுகூடல்.
எதிரியாகவிருந்தாலும் கருத்தை உள்வாங்கி எதிர்கொள்வதே வீரம். கருத்தை வன்முறையால் எதிகொள்வது என்பது எமது சமூகத்தின் சாபக்கேடு. இதுவே உலகம் முழுவதும் தமிழர்களை கொடூரமான மனோ நிலை கொண்டவரக்ளாக அறிமுகப்படுத்தியது.
புலம்பெயர் நாடுகளிலுள்ள தேசிய வியாபாரிகளின் பிழைப்புவாத நோக்கங்களுக்காகப் பயன்படும் இந்த வன்முறையை எதிர்ப்பது ஜனாவை ஆதரிப்பதாகாது, மாறாக மக்களின் அடிப்படை ஜனநாயகத்தை ஆதரிப்பதாகும்.
இலங்கை அரசின் வன்முறைகளுக்கு எதிராகத் தண்டனை வழங்குங்கள் என்று உலக அதிகாரவர்கங்களின் காலடியில் மண்டியிடும் தமிழர்கள் மட்டும் வன்முறயை கருத்துக்களுக்கு எதிராக முன்வைப்பது அருவருக்கத்தக்கது.
புலிகளின் பெயராலும் தேசியத்தின் பெயராலும் நடத்தப்படும் இந்த வன்முறைகளே தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறது.
மனிதாபிமனமற்ற, ஜனநாயகத்தை மதிக்கத்தெரியாத வன்முறை மீது காதல்கொண்ட கும்பல்களின் போராட்டமே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்ற தவறான விம்பத்தை உலகில் போராடும் மக்களுக்கு வழங்கி வருகிறது.
கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வந்த கோபி என்ற வன்முறையாளன் தலைமையிலான குழு ஒன்று மண்டப வாசலில் நின்றுகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஜானாவுக்கெதிரானதிரான பழிச்சொற்களுடன் கோசங்களை எழுப்பினர்.
அவ்வேளை வர்த்தக சங்கத்தலைவரான பாஸ்கரன் வெளியே சென்று அவர்களை அமைதியாக உள்ளே வந்து தங்கள் கேள்விகளை எழுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி உள்ளே வந்த புலிகள் என அடையாளப்படுத்தும் கோபியின் கும்பல் ஜனாவை சூழ்ந்து கொண்டு வன்முறையாக நடந்து கொள்ள முயன்றபோது, கூட்டத்தில் இருந்தவர்களால் மண்டபத்தை விட்டு மீண்டும் வெளியேற்றப்பட்டனர்.
உரிய நேரத்தில் பொலிசார் வருகை தந்தமையினால் ஜனா மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
போலிசாரைத் மீறி ஜனாவைத் தாக்க முற்பட்ட போது வன்முறைக் கும்பலைக் கலைக்க போலிசார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தினர்.
கோபி போன்ற எச்ச சொச்சங்கள் சமூகத்திலிருந்த அகற்றப்பட்டால் மட்டுமே ஜனா போன்றவர்களின் குற்றங்களை மக்கள் முன் தெளிவுபடுத்த முடியும். கோபி போன்ற வியாபாரக் கும்பல்கள் ஜனா போன்றவர்களை வாழ வைக்கிறார்கள்.
மேலும், தமிழரசுக் கட்சியின் ஆதரவு இணையங்கள் பிரான்சில் ஜனா நையப் புடைக்கப்பட்டார் எனச் செய்தி வெளியிடுகின்றன. இவ்வாறான செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளே உள்ள பிளவுகளைக் காட்டுகின்றன.
இதன் பின்புலத்தில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை இருப்பதான சந்தேகம்
எனக்குள் உள்ளது.
இங்கு கோபி எனக்குறிப்பிடுபவர் சிறிலங்கா புலனாய்வு பிரிவுடன் இணைந்து செயற்படும் போலி புலிகள் இயக்கமென அறியப்படும் முன்னாள் புலிகளுடன் தொடர்பில் இருப்பவர் என அறிகிறேன்.
இந்த போலி புலிகள் அமைப்பை வைத்தே பிரகீத் எக்னெலிகொட,புலிகளின் முன்னாள் தளபதி ராம்; நகுலன்; போன்றோர் கடத்தப்பட்டனர்;பிரகீத் கொல்லப்பட்டார்;ராம்; நகுலன் போன்ரோரை வைத்து மாயப்புலிகள் அமைப்பை சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவு இயக்கியதும் அது பின்னர் படிப்படியாக புஸ்வாணமாகிப்போனது;
ஆனால் இன்னொரு போலி புலிக்கட்டமைப்பை புறம்பாக தொடர்ந்து இயக்கிவருகிறது.இந்த கட்டமைப்பே மலேசியாவிலிருந்தும் கட்டாரில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் உள்வாங்கிய புலிகளை ஒட்டிசுட்டான் காட்டில் சுட்டுக்கொன்றுவிட்டு புலிகள் மீண்டும் இயங்க முற்படுவதாக பிரச்சாரம் செய்தது;
அந்த போலி புலிக்கட்டமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருகிறது.
இதில் கலையன்,உதயன்;பிரபா;தவேந்திரன் போன்றோர் மிக முக்கியமான முன்னாள் புலிகள்.
மேலே சொன்ன போலி புலிகளுடன் இந்த கோபிக்கு தொடர்பிருப்பது உறுதியானது.
இதன் பின்னணியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்க வாய்ப்பு அதிகமுள்ளது.
புலம்பெயர் புலிப்பினாமிகளுக்குள்ளும் சிறிலங்கா ஏஜென்றுகள் ஊடுருவிவிட்டனர் என்பதே மெய்யானது;