Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ராஜபக்சவின் இனப்படுகொலையைக் கருத்தியல் தளத்தில் தொடரும் சமூகவிரோதி சீமான்

இனியொரு... by இனியொரு...
05/31/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
21
Home பிரதான பதிவுகள் | Principle posts
seeman
சீமானின் நிகழ்கால வழிகாட்டி ஹிட்லர்

ஈழத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்களை தமது வயிற்றுப் பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் பிரதானமானவர்களுள் சீமானும் ஒருவர். சினிமாவில் சேர்ந்து மில்லியன்களைச் சுருட்டலாம் என்ற கனவுகளோடு செல்கின்றவர்கள் தமது கனவு நனவாகாத போது ஈழத் தமிழர் பிரச்சனையை வியாபாரமாக்கி கொள்வார்கள். இது முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் காலத்தில் பிழைப்புவாதிகள் இடையே உருவான புதிய போக்காக அமைந்தது. ஈழப் போராட்டத்தைப் பயன்படுத்தி செல்வந்தர்களான சிலர் இவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தார்கள். அந்த வகையில் சீமான் என்ற கோமாளியும் சினிமாவில் தோல்வியடைந்த பின்னர் ஈழ வியாபாரத்தை ஆரம்பித்தார். . ஏனையவர்களோடு ஒப்பிடும் போது, சீமான் தனது வியாபாரத்தில் வெற்றியும் கண்டார்.

இந்த வெற்றியின் பின்புலத்தில் இந்திய உளவுத்துறையோ அல்லது வேறு நாசகார சக்த்திகளோ நேரடியாகத் தொடர்புறு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனினும் அவை ஏற்படுத்தக் கூடிய அழிவுகளை சீமான் ஏற்படுத்துகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆக, சீமான் என்ற கோமாளிக்கு உளவுத்துறைகளின் உதவி கிடைக்கலாம் என்பது இன்றளவில் வெறும் அனுமானம் மட்டுமே.

ஜீ.என்.சாய்பாபா
ஜீ.என்.சாய்பாபா

மாவோயிஸ்டுக்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த பேராசிரியர் ஜீ.என்.சாயிபாபா போன்றவர்களை சிறையிலடைத்துச் சித்திரவதை செய்யும் இந்திய அரசு, விசா இல்லாமல் வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவரோடு படம் பிடித்து அதனைப் போஸ்டர் போட்டு வியாபாரம் செய்த சீமானை சுந்ததிரமாக நடமாட அனுமதிக்கிறது. சீமான் மக்கள் ஆதரவற்ற சில பிழைப்புவாதிகளை இணைத்துக்கொண்டு ஈழப் பிடிப்போம் எனப் நரம்பு புடைக்கப் பேசும் வெற்றுக் கோமாளி. இப்படிப்பட்ட கோமாளி இந்திய உளவுத்துறை கைது செய்து அரசியலிலிருந்து நீக்கம் செய்யாமல் உலாவ விட்டிருக்கிறது என்றால் அனுமானம் சந்தேகமாக மாறுவதில் தவறில்லை.

உலகத்தில் எத்தனையோ நாடுகளில் ஈழத் தமிழர்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்தனர். அந்த நாடுகள் மத்தியில் தமிழ் நாட்டிலேயே ஈழத் தமிழர்கள் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்படுகின்றனர். சீமான் ஜெயலலிதாவை ஈழத் தாய் என்று புராணம் பாடிய வேளையில் சிறப்பு முகாம்களில் ஈழத் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். திருச்சியில் லட்சங்கள் செலவு செய்து மாநாடுவைத்த பணத்தின் ஒரு பகுதியையாவது மாட்டுத் தொழுவங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.

தமிழ் நாட்டின் மாட்டுத் தொழுவங்களில் ஈழத் தமிழ் அகதிகள்
தமிழ் நாட்டின் மாட்டுத் தொழுவங்களில் ஈழத் தமிழ் அகதிகள்

சிறைகளில் வாடும் அகதிகளுக்கு ஆதரவாக இதுவரைக்கும் துண்டறிக்கை கூட விடாத சீமான் பிணங்களை வைத்து வியாபாரம் நடத்துவது அருவருப்பானது. சீமானின் வியாபாரத்திற்குப் புலம்பெயர் நாடுகளிலிருந்து துணைபோவது அதைவிட அருவருப்பானது. ஈழத் தமிழர்களை இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் மொட்டையடிக்கப் போகிறீர்கள்?

சீமான் வாக்குப் பொறுக்கி முதலமச்சராக வரவேண்டும் என்று கனவு காண்கிறார். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே ஆட்சியதிகாரத்தை யார் கையகப்படுத்துவது என்பதை அதிகார வர்க்கமே தீர்மானிக்கிறது. அந்த அதிகார வர்க்கத்தின் நிரந்தர அடிமையாக சீமான் தன்னைப் பிரகடனப்படுத்துவதற்கு தன்னாலான அனைத்தையும் செய்து முடிக்கிறார். மக்களை ஒடுகுவதற்குரிய அத்தனை தகமைகளும் தன்னிடம் உள்ளது என நிறுவ முயற்சிக்கிறார். ஆனால் இன்றும் அழிவின் விழிம்பில் நின்றுகொண்டிருக்கும் ஈழத் தமிழர்களைப் பயன்படுத்தி அதனை மேற்கொள்வதே அருவருப்பானது.

சீமான் இரண்டு முக்கிய விடையங்களைச் செய்யத் துணிகிறார். முதலாவதாக ஈழப் போராட்டத்தை அழித்து நிர்மூலமாக்குவது. இரண்டாவதாக தமிழ் நாட்டிலிருக்கும் முற்போக்கு ஜனநாயக சிந்தனையைத் தாக்கியழிப்பது.

இந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சீமான் கோமாளிகளின் திருச்சி மாநாட்டுக் கும்மாளம் அவர்களைத் தெளிவாக வெளிக்காட்டியது.

திருச்சிக் கூட்டத்தில் ஹிடலர் போல வணக்கம் செலுத்தும் நாஸி சீமான் குழு
திருச்சிக் கூட்டத்தில் ஹிடலர் போல வணக்கம் செலுத்தும் நாஸி சீமான் குழு

சீமான் தனது வழிகாட்டிகளில் ஒருவராக உலகின் அதிபயங்கரக் கொலையாளி ஹிட்லரின் படத்தை தனது திருச்சி மாநாட்டில் அறிவித்தார். இன்று ஜேர்மனியில் நிறவாதிகள் கூட ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அவமானப் படும் நிலையில் சீமான் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள சீமான் கோமாளிகள் ஹிட்லரை தனது வழிகாட்டியாக அறிவித்துள்ளனர்.

தவிர. ஹிட்லரின் நாஸிப் படைகள் வணக்கம் செலுத்தும் முறையில் மேடையில் நின்று வணக்கம் தெரிவித்து மாநாட்டை ஆரம்பித்தனர். இதையெல்லாம் காவல் துறை கண்ணாரப் பார்த்துக்கொண்டிருந்தது.

ஹிட்லரின் சின்னத்தோடு வெளிநாட்டவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடும் நாஸிக் குழுக்கள்
ஹிட்லரின் சின்னத்தோடு வெளிநாட்டவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடும் நாஸிக் குழுக்கள்

இன்று ஜேர்மனியில் வெளி நாட்டவர்களுக்கு எதிராக முளைவிடும் பல்வேறு வன்முறை நாஸிக் ,குழுக்கள் ஹிட்லரையும், ஹிட்லரின் சின்னத்தயும், கோட்பாட்டையும் பயன்படுத்துகின்றன. ஜேர்மனியில் அகதிகளாகக் குடியேறிய ஈழத் தமிழர்கள் உட்பட அனைத்து வெளி நாட்டவர்களுக்கு எதிராகவும் வன்முறைகளில் ஈடுபடும் இந்த அமைப்புக்களில் சிலர் கடந்தமாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஜேர்மனியில் மட்டுமன்றி,. பிரான்ஸ், அவுஸ்திரியா, பிரித்தானிஅ போன்ற நாடுகளிலும் ஹிட்லரின் நாஸிக் குழுக்கள் வெளி நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கு எதிரான வன்முறைகளைச் சிறிய அளவுகளில் ஆரம்பித்துள்ளன.

ஜேர்மனியில் சிறிய நாஸிக் கிராமங்கள் உள்ளன. அங்கு வெள்ளை நிறமற்றவர்கள் சென்றால் கொலை செய்யப்படுவார்கள்.

இந்தச் சூழலில், ஈழப் மக்களின் அவலத்தைப் பயன்படுத்தி நாஸிகளை ஆதரித்து அவர்களைப் புலம்பெயர்ந்த நாடுகளிலேயே அழிக்க முயலும் சீமான் போன்ற விசக் கிருமிகள் கோமாளிகளயினும் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.

சீமான் என்ற சமூகவிரோதி, தமிழினத்தின் விரோதி மட்டுமல்ல; ஒட்டுமொத்த மனிதகுலத்தினதும் விரோதி என்பதையும் மாநாட்டில் நிறுவியியதை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருந்தாலும் இந்த அப்பாயத்தைக் குறித்து பலர் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டில் முதல் தடைவையாக கோமாளிகள் கூட்டம் ஒன்று ஹிடலரைப் போற்றி, ஹிட்லரின் வணக்கத்தை ஏற்று மக்கள் மத்தியில் பரப்ப முயல்வது தடை செய்யப்படாவிட்டால், இளைய சமூகத்தின் எண்ணங்களில் இது வெறியாக மாறும் நிலை உருவாகும். இது பல அழிவுகளைத் தோற்றுவிக்கும். சீமானின் பிழைப்பிற்கும், உளவுத் துறைகளிற்கும் இது தேவையான ஒன்று எனினும், மக்களைப் பொறுத்தவரை இது அபயகரமானது. சீமான் கோமாளிகளின் நாஸிக் கருத்துக்களைத் தடை செய்யக் கோரிப் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

நீல நிறக் கண்களும், வெள்ளை நிறத் தோலும் கொண்ட உயர்ந்த தோற்றமுடையவர்கள் ஆரியர்கள் என்று வரையறுத்துக்கொண்ட ஹிட்லர், ஆரியர் அல்லாதவர்கள் அழிக்கப்பட வேண்டிய மிருகங்கள் என்றர். இந்தவகையில் ஜேர்மனியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த யூத இன மக்களைக் கைது செய்து, மனித குலம் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு சித்திரவதை செய்து, சாரிசாரியாகக் கொலைசெய்த ஹிட்லரை உலகத்தின் ஒவ்வொரு குழந்தையும் அறியும். ஹிட்லரின் வதை முகாம்களையும், கொலை கூடங்களையும் ஜேர்மனிய சாமானிய மனிதன் இன்று அவமானச் சின்னமாகவே கருதுகிறான்.

ஹிட்லர் தமது மக்களைச் சுரண்டி, பன்நாட்டு முதலீடுகளைக் குவிப்பதற்காகவே மிருகத்தனமான கொலைகளைத் திட்டமிட்டு நடத்தியதாகக் கூறுகின்றனர். இன்றும் ஹிட்லருக்கு மறைமுக உதவிகளை வழங்கிய ஐ.பி.எம் போன்ற நிறுவனங்களின் தகவல்கள் வெளியாகிகொண்டிருக்கின்றன.

ஹிட்லரை ஆட்கொண்ட பிளவாட்ஸ்கி சிங்கள பௌத்த ஆரியத் தத்துவத்தைத் தோற்றுவித்தார்
ஹிட்லரை ஆட்கொண்ட பிளவாட்ஸ்கி சிங்கள பௌத்த ஆரியத் தத்துவத்தைத் தோற்றுவித்தார்

இலங்கையில் சிங்கள மக்களை ஆரியர்கள் என்றும் ஏனையவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர்களும் முஸ்லிம்களும் என்று கூறியே சிங்கள பௌத்த பேரினவாதம் உருவாகியது. இலங்கைக்குக்ச் சென்ற ஹெலேனா பிளவாட்ஸ்கி என்ற பெண்ணும் கேணல் ஒல்கோட் என்ற அமெரிக்க இராணுவ அதிகாரியும், ஆரிய இனத்தைச் சேர்ந்த சிங்களவர்களே மேலானவர்கள் என்ற நஞ்சை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தனர். அதனையே  சிங்கள அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் வாக்குப் பொறுக்கினர்.

கரையோரச் சிங்களவர்கள் போச்சுகேயர் காலனியாதிக்க காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த தமிழர்கள் என்பது ஆதர பூர்வமாகப் பின்பு நிறுவப்பட்டது. கண்டிய மன்னன் போச்சுகேயருடன் எழுதிக்கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 23 பேரில் 21 பேர் தமிழிலேயே கையெழுத்திட்ட வரலாறெல்லாம் சீமான் போன்ற அயோக்கியர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சீமானின் வழிகாட்டியான ஹிடலர் ஆரியர்கள் மட்டுமே மனிதர்கள் என்ற கருத்தை ஹெலேனா பிளவாட்ஸ்கியிடமிருந்தே கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆக, சிங்கள மக்கள் ஆரியர்கள் என்றும் அவர்கள் மேலானவர்கள் என்ற கருத்தை சீமான் பரப்ப முயல்கிறார்.

ஐரோப்பிய நாடுகளில் 9,793,700 யூதர்களில் 5,709,329 யூதர்களைக் ஹிட்லர் கொன்று குவித்தான். பச்சிழம் குழந்தைகள் முதல் கர்ப்பிணித் தாய்மார்கள் ஈறாக முதியோர்கள் வரை, பட்டினி போட்டும், சித்திரவதைகள் செய்தும். உயிரோடு எரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டனர்.

சீமான் தமிழர்களுக்கு ஒப்பிடும் ஹிடலரால் சித்திரவதை செய்யப்படும் குழந்தைகள்
சீமான் தமிழர்களுக்கு ஒப்பிடும் ஹிடலரால் சித்திரவதை செய்யப்படும் குழந்தைகள்

தமிழினத்தின் பெயரால் பிறந்த குழந்தைகளையும், கர்ப்பிணித் தாய்மார்களையும் கொன்றுகுவிக்கும் மிருகங்களாக ஈழத் தமிழர்களை உலகத்திற்குக் காட்ட முனையும் சீமான் அழிக்கப்பட்ட பிணங்களை வைத்து நடத்தும் பிழைப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஹிட்லர் அன்று தொடக்கிய நிற வெறியும், கொலை வெறியும் இன்று வரை பல்வேறு வழிகளில் தொடர்கின்றன. ஹிட்லருக்குப் பின்னான கொலையாளிகள் பலர் கூட தாம் ஹிடலரைப் பின்பற்றுவதாக வெளிப்படையாகக் கூறியதில்லை. அப்படிக் கூறுவதைக்கூட அவமானமாக கருதினர்.

ஆனால் சீமான் என்ற சமூகவிரோதி ஹிட்லரை வெளிப்படையாக ஆதரித்து வணக்கம் செலுத்துகிறான்.
அதற்குப் பின்னால் எந்தக் கூச்சமும் இல்லாமல் சில புத்தி சீவிகள் என்று தம்மக் கூறிக்குள்பவர்களும் அலைகின்றனர். உலகத்தில் வாழ்கின்ற ஏனைய இன மக்கள் ராஜபக்ச தமிழர்களை அழித்தது நியாயம் என்று கூற வைக்கும் அளவிற்கு சீமானின் நடவடிக்கள் அமைந்துள்ளன.

ஹிட்டலரை ஆதரிக்கும் மனித குல விரோதிகளை உலக மக்கள் வெறுக்க ஆரம்பிப்பார்கள். ஆக, உலக மக்களின் ஆதரவுடன் இலங்கை இனப்படுகொலை அரசு ஈழத் தமிழர்களை அழிக்க வசதி செய்யப்படும். சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளின் இனச் சுத்திகரிப்பு நியாயம் என உலக மக்கள் அனைவரும் கூற ஆரம்பிப்பார்கள். இதற்கான முகவராகவே சீமான் செயற்படுகிறார்.

சீமானின் எதிர்கால வழிகாட்டி ராஜபக்ச
சீமானின் எதிர்கால வழிகாட்டி ராஜபக்ச

ராஜபக்ச நடத்தி முடித்த இன அழிப்பை கருத்தியல் தளத்தில் தொடரும் சீமானின் இனகொலை மிக நிண்ட காலத்திற்கு தமிழினத்தை மீள முடியாத அவலத்திற்குள் தள்ளிவிடும். அதிலும் சீமான் குறிவைப்பது ஈழத் தமிழர்களையே. ஆக, சீமான் குழுமத்திற்கு எதிராக ஈழத் தமிழர்கள் அனைத்துத் தளத்திலும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கைப் பேரினவாத அரசின் கொலையாளியான ராஜபக்சவை விடப் பயங்கரமான கொலையாளி தமிழர்கள் மத்தியிலிருந்தே தோன்றியிருப்பதற்குக் காரணம் எமக்கு மத்தியில் தெளிவான அரசியல் வேலைத்திட்டம் இன்னும் முன்வைக்கப்படாமையே.

தமிழர்களையும் அவர்களது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தையும் மனிதாபிமானமற்ற மிருகங்களின் கொலை வெறியாக உலகத்திற்குக் காட்டி அவர்களைத் தனிமைப்படுத்தி அழிப்பதை சமூகவிரோதி சீமானும் விசில்களும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஹிடலர் தனது இனத்திற்காகவே போராடினான் என்றும் அதனால் அவனே தங்களின் வழிகாட்டி என்றும் சீமானின் அயோக்கியக் கும்பல் ஈழத் தமிழர்களின் கண்ணீரைப் பயன்பன்படுத்திக் கூறுகின்றது. இன்னும் சில காலத்தில் ராஜபக்சவும் தனது இனத்திற்காகப் போராடினான் என்றும் ராஜபக்சவும் தங்கள் வழிகாட்டி என சீமான் கும்பல் முழங்கினாலும் வியப்படைவதற்கில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனையைத் தோற்றுவித்த பெரியார்
தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனையைத் தோற்றுவித்த பெரியார்

இனத்திற்காகப் போராடுவது என்ற பெயரில் இனத்தின் அயோக்கியர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துவது ஹிட்லர், ராஜபக்ச, சீமான் போன்றவர்களின் வழமை. ஈழப் போராட்டத்தையே பயங்கரவாதமாகக் கூறிய பச்சைமுத்துவைப் பாராட்டும் சமூகவிரோதி சீமான், மற்றப்பக்கத்தில் தமிழ் நாட்டின் மண்ணை அழிக்கும் மணல் கொள்ளைக்காரன் வைகுண்டராசனின் அடியாள்.

தமிழ் மக்க்ள் மத்தியில் மூட நம்பிக்கைய அகற்றி, முற்போக்கு சிந்தனையைப் பரப்பிய பெரியார் தமிழன் அல்ல, தமிழ் மக்களின் தலைவரும் அல்ல என அவதூறு கூறும் சீமானின் கருத்துக்கள் இந்திய பார்ப்பனீயக் கருத்துக்கள். தேவர் சாதி வெறியன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை போட்டு அர்ச்சனை செய்த சீமான் இன்று ஹிட்லருக்கு அர்ச்சனை செய்வது அதிர்ச்சி தருவதல்ல. சீமான் ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு என்றே உருவாக்கப்பட்ட விசக் கிருமி என்பதைத் தெரிந்துகொண்டும் மௌனம் சாதிக்கும் ஈழத் தமிழர்கள் மக்கள் மீது பற்றற்றவர்கள். சீமான் இனவழிப்பின் முகவர் எனத் தெரிந்துகொண்டும் சீமானை ஆதரிப்பவர்களும் சமூகவிரோதிகளே.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இறுதிப் போரில் இந்தியா வழங்கிய உதவிகளைப் பகிரங்கமாக வெளியிட முடியாது : பசில்

இறுதிப் போரில் இந்தியா வழங்கிய உதவிகளைப் பகிரங்கமாக வெளியிட முடியாது : பசில்

Comments 21

  1. Tamil Chinthanayalar Peravai says:
    11 years ago

    சீமான் அவர்களது மாநாட்டு வெற்றிக்குப் பிறகு அவர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
    இந்தக் கட்டடுரை இட்லர் படம் வைத்தது சம்பந்த மாகவே இருக்கிறதே ஒழிய ஆழமானக் குற்றச் சாட்டு ஏதும் காணோம்.
    இந்தக் கட்டுரையாளர் எல்லாம் தெரிந்தும் பழிதூற்றுபவர் என்பது இட்லரைப் பற்றிய அவரது நூண்ணிய புரிதலே சான்றாக அமைகிறது.
    உலகை அழிக்கும் ஒரு ரகசிய அமைப்பின் ஆதரவோடு தனி ஈழம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை கட்டுரையாளருக்கு இருக்கிறது. ஆனால், அது நடவாது என்பதை கட்டுரையாளர் உணர முடியாதவர்.
    சீமானின் கொள்கை ரகசிய அமைப்புகளின் கொள்கைக் கெதிராக அமைவதால் பீதி கண்டு எழுதப்பட்டக் கட்டுரை இது.
    வெங்காய ராமசாமியை தமிழரின் தலைவர் என்று சொல்ல கட்டுரையாளருக்கு எந்த உரிமையும் இல்லை.
    ஈழத்தை அழித்ததில் வெங்காய ராமசாமிக்கும், திராவிட இயக்கத்திற்கும் மிகப்பெரிய பங்கு உண்டு.
    ராசபக்ச்சே ஒரு தெலுங்கன் என்று தெரியாத கட்டுரையளர் தனது உள் நோக்த்தோடு உளரிக் கொட்டி இருக்கிறார் என்பதே உண்மை.
    தமிழர்களை இனப்படுகொலை தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்கள் தெலுங்கர்களே என்ற புரிதல் கூட இல்லாதவர்கள் கட்டுரை எழுத வரக்கூடாது.
    கட்டுரையாளர் முதலில் தங்களது வரலாற்றை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
    மடத்தனமாக உளரிக்கொட்டுவது தம்மைத் தாமே அழித்துக்கொள்வதே!
    இட்லரைப்பிற்றி அறியாத செய்திகள் இன்னும் நிறைய உள்ளன. எனவே, இப்போதே இட்லரின் படத்தை சீமானின் தம்பிகள் தவிர்த்து இருக்கலாம்.
    இட்லர் வெறும் 60,000 யூதர்களையே கொன்றான். 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்வில்லை. கட்டுரையாளர் தெரிந்தும் தெரியாதவராக நடிக்கிறார். அதற்கும் ரொத்சீல்ட் எனும் யூதனே உதவினான். இதையும் கட்டுரையாளர் அறிந்தேயுள்ளார்.
    தமிழரின் எதிரிகளின் கையாளாக கட்டுரையாளர் எழுதி இருக்கிறார். இதைவிட ஒரு அப்த்தம் வேறொன்று இருக்க முடியாது.

    • இனியொரு... says:
      11 years ago

      Tamil Chinthanayalar Peravai,
      நாமே மேலானவர்கள் மற்றவர்கள் எல்லாம் அழிக்கப்பட வேண்டும் எனக் கூறுவதே நாஸிகளின் தத்துவம். சீமான் கூறுவதும் இதுதான். தெலுங்கனை வெட்ட்டுவோம். மலையாளிகளைக் கருவறுப்போம். சிங்களவனைக் சதையை தமிழ் நாட்டுக்குக் கொண்டுவருவோம் என சீமான் கூறுவது நாஸிகளின் கருத்து, சீமான் என்ற நாஸி ஹிட்லரின் படத்தை வைத்தது அவர்களின் நாஸிக் கருத்துக்களின் குறியீடு. நாஸிகள் மனிதகுலத்தின் விரோதிகள் எனக் கூறுவதை மறுக்கும் உங்கள் கருத்து அருவருப்பானது.

      • Lala says:
        11 years ago

        Seeman never said that
        in his Trichey conference meeting.

    • இனியொரு... says:
      11 years ago

      Tamil Chinthanayalar Peravai
      தயவு செய்து 60 ஆயிரம் பேரை மட்டுமே ஹிட்லர் கொலை செய்தான் என்று நியாயப்படுத்தாதீர்கள், இதோ ஒரு பருமட்டான புள்ளிவிபரம்

    • Rahulan says:
      11 years ago

      Tamil Chinthanayalar Peravai, பெயரில் மட்டும் சிந்தனையாளர் என்று போட்டு விட்டு சிந்தனை மட்டும் பிற்போக்குதனமாக இருப்பது ஏனோ?. பெரியாரைப்பற்றி அறிந்து கொண்டு கருத்து சொல்வது நல்லது. பெரியார் செய்த தொண்டு தமிழினத்தை எவ்வாறு பாதித்து என்று சொன்னால் நல்லது.

  2. சு.குமார் says:
    11 years ago

    well said .

  3. இனியொரு... says:
    11 years ago

    Tamil Chinthanayalar Peravai,
    உங்களுக்கு ஈழ மக்களின் வாழ்வு, அவலங்கள் மகிழ்ச்சி பற்றிய எதைப்பற்றியும் தெரியாது. நீங்கள் அவரகளைப் பயன்படுத்தி பிழைப்பு நடத்துகிறீர்கள். ராஜபக்சவை தெலுங்கன் எனக் கூறி தெலுங்கர்களை வெட்டு என்கிறீர்கள். ராஜபக்ச பௌத்தர் அல்ல. சீமானைப் போல கத்தோலிக்கர். சீமானைப் போலவே பௌத்த வேடம் போட்டுக்கொண்டு பிழைப்புக்காக அரசியலில் நுளைந்தார். இனவாதிகளிடம் இப்படிப் பல ஒற்றுமைகள் உண்டு. சீமான் தமிழ் நாட்டின் ராஜபக்ச என்பதற்கு பல ஆதாரங்களைக் காட்டலாம். மற்றப்படி ராஜபக்ச தெலுங்கர் என்பது சீமான் பிழைப்பிற்காகக் கட்டவிழ்த்துவிட்ட கதை. இதோ ஆதாரம்:
    https://inioru.com/43136/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/
    முதலில் இலங்கையில் சிங்கள பௌத்த இன இனவாதத்தை அரசியல் மயமாக்கிய சொலமன் டயஸ் பண்டாரநாயக்க ரதள சாதியைச் சேர்ந்த கத்தோலிக்கர். 83 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடத்திய ஜூலியட் ரிச்சார்ட் ஜெயவர்த்தன ஒரு கத்தோலிக்கர் அவரது மூதாதையர்கள் தமிழகத்திலிருந்து சிலாபம் பகுதிக்கு வந்து குடியேறிய தமிழர்கள். தென்னிந்தியாவில் தான் பிணத்தை வைத்துப் பணம் சேர்ப்பவர்கள் இருப்பதாகப் படங்களில் பார்த்திருக்கிறோம். அதனையே சீமான் பெரிய அளவில் செய்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களின் தியாகங்களையும் மரணத்தையும் வைத்து வயிற்றுப்பிழைப்பு நடத்த நாங்கள் இனியும் அனுமதிக்கப் போவதில்லை.

    இப்போ சீமானின் கருத்துப் படி கத்தோலிக்கர்களை அல்லவா வெட்ட வேண்டும்?

  4. a voter says:
    11 years ago

    ராஜபக்ச கத்தோலிக்கர் என்று கூறி கத்தோலிக்கர்களை அவமதிக்க வேண்டாம். ராஜபக்சக்கள் ஜெயவர்தனாக்கள் பண்டாரநாயக்கக்கள் என்று அனைவரதும் மதம் பிரபல்யம் தான். ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் கத்தோலிக்கர்களாக மாறுவர். பிறகு பௌத்தர்களாக மாறுவர். நாளை தேவைப்பட்டால் நாத்திகர்களாகவும் மாறுவர்.
    மற்றப்படி சீமான் பற்றிய கருத்துகளிற்கு மறுப்பில்லை.

  5. mannan says:
    11 years ago

    வில்லன் இல்லாது சினிமாவில் கதையே இல்லை. தமிழரை
    வேறு இனத்தவருடன் பகைமை கொள்ளச்செய்யாமல்
    தமிழர் பெயரால் அரசியலே செய்யமுடியாது.

    ஆரியர் திராவிடர் என்று தொடங்கி,கருணாநிதி குடும்பமும்
    ஜெயலலிதாவும் தமிழ் நாட்டை பங்கு போட்டு எடுத்துவிட்டனர். தி.மு.க எத்தனையாக
    வடி வெடுத்துவிட்டது.

    இதே போல தமிழீழ விடுதலையின் பெயராலும் இலங்கைத்தமிழர் பெயராலும் எத்தனை கட்சிகள் அமைப்புகள்.

    திராவிட,தமிழ் சேர்கஸ் கம்பனியில் சீமான் ஒரு கோமாளி.

  6. Nakkeeran says:
    11 years ago

    மக்களாட்சி முறைமையில் நாட்டு மக்கள் எல்லோருக்கும் சம உரிமை இருக்கிறது. மக்களாட்சி முறைமையில் இன, மத, மொழி பேதம் பாராட்டப்படுவதில்லை. பாராட்டுவது மக்களாட்சி முறைமைக்கு எதிரானது. இதைத்தான் இராஜபக்சா செய்தார். அவர் வழியில் சீமான் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் எல்லோரையம் வந்தேறிகள் என விமர்ச்சிக்கிறார். இது பாசீசம். மற்றப்படி சீமான் பெயரில்லாத சக்திகளின் கைக் கூலி என்பது பொருந்தாது. தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதில் தவறில்லை. அதற்காக சிறுபான்மையரான தெலுங்கர், கன்டனரை, மலையாளிகளை திட்டத் தேவையில்லை. பெரியார் தமிழ்நாட்டுக்கும், தமிழருக்கும், தமிழ்மொழிக்கும் அரிய தொண்டு ஆற்றியிருக்கிறார். அவரை தலைவராகக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அதனை மறுப்பது அறிவீனம். பெரியார்தான் திருக்குறளை மலிவு விலையில் பதிப்பித்து மக்கள் மத்தியில் பரப்பியவர். கண்டி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவர்கள் 12 பேர். ஆங்கிலத்தில் ஒருவர், சிங்களத்தில் 4, தமிழில் 4, தமிழிலும் சிங்களத்திலும் 3. சீமான் நடத்திய திருச்சி மாநாட்டில் ஜெர்மானியர்களே வெறுத்து ஒதுக்கும் இட்லரின் படத்தை வைத்து அவன் வழிகாட்டி என்று சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

  7. greece says:
    11 years ago

    ஈழ தமிழர்களை அழித்ததில் இஸ்ரேலுக்கு பெரும் பங்கு உண்டு. ஈழம் விடுதலை அடைந்தால் எங்கே அதை வைத்து, பாலஸ்தீனம் விடுதலை அடைந்து விடுமோ என்று தமிழர்களை முழுவதுமாக அழித்தது இஸ்ரேல். ஈழ மக்களை மாட்டு மந்தைகளை போல ஒரே இடத்தில் கூட்டி கிபீர் விட்டு அடித்து கொன்றது இஸ்ரேல். கொன்ற பிறகும் எல்லா குடும்பத்திலும் இருக்கும் ஆண் பிள்ளைகளை பிடித்து சென்றது அக்மார்க் இஸ்ரேல் ஸ்டைல். அது யூத பைபளில் சொல்ல பட்டு இருக்கிறது. போரில் ஆண்கள் இல்லாத வீட்டில் பெண்களை கற்பழிப்பு செய்வதை இஸ்ரேல் நியாய படுத்துகிறது.

    எல்லோரும் ஹிட்லரை தவறாக பேசுகிறார்கள். ஆனால் யூதர்கள் எவ்வளவு கேடு கேட்டவர்கள் என்பதை ஈழ அழிப்பு ஒரு சாம்பிள். யூதர்கள் எதுவுமே நேரடியாக செய்ய மாட்டார்கள். வேறொருவர் மூலம் செய்வார்கள். நம் பார்பனர்கள் போல. சிண்டு முடிந்து விட்டு மோதி கொள்வதை செய்வார்கள். ஹிட்லர் ஸ்வஸ்திக குறியீடு பார்பனர்களிடம் இருந்து எடுத்தது. யூதர்கள் பைபிளில் அவர்கள் மேலானவர்கள் அவர்களை தவிர யூதர் அல்லாதவரை பன்னி போல நடத்த வேண்டும் என்று போட்டு இருக்கிறது. அடிமைகள் ரொம்ப பிடிக்கும். யாரயும் வளர விட மாட்டார்கள். அந்த புனித நூல் வெறி ஹிட்லர் இன்னொரு புனித நூல் வெறியர்களான பார்பனர் இடம் பெற்று யூதர்களை போட்டு தள்ளி விட்டது ஹிட்லர் ஆட்சி. ஹிட்லர் ஆட்சியாளர்கள் அனைவரிடமும் கீதை தன் கையில் கொலை செய்யும்போது வைத்து இருந்தனர்.

    பெரியார் கன்னட நாயக்கர். அதனால் தான் ஆரியம் அவரை விட்டு வைத்தது. தமிழர் அல்லாத எவரையும் பார்பனியும் தமிழகத்தில் அனுமதிக்கும். ஈழத்தில் பண்டரநாயக்க, மதுரையில் நாயக்கர் இவர்களை கூட்டி வந்தது பார்பனன்ர் கூட்டம். கூடயே இருந்து குழி பறிபவர்கள் தெலுங்கர்.

    ஒன்று புரியவில்லை. ஏன் சீமானை வெறுக்குரீர்? தமிழர் தானே! குற்றம் குறை இருப்பின் எடுத்துரைத்தல் நன்று. சும்மா தவறாக பேசுபவர்கள், வெறும் குற்றம் கண்டு பிடிபவர்கள் தமிழர்கள் நலன் விரும்பிகள் ஆக முடியாது. ஏன் நீங்களும் பிரபாகரனை தையரியமாக உங்களால் முடிந்த அளவுக்கு பிரபல படுத்துங்களேன்!

  8. greece says:
    11 years ago

    மேலும் தமிழர்கள் சாதி , மதம் தாண்டி ஒற்றுமை பட வேண்டும். இன்னும் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதில் எல்லோரும் இழக்கிறோம். தேவர், பறையர் , நாடார், வன்னியர், அருந்ததியர், என்று யாராக இருந்தாலும் தான் உயர்தவர், தாழ்ந்தவர் என்று பிரித்து அவமதிப்பது மல்லாக்க படுத்து எச்சில் துப்புவது போலாகும். நாம் சண்டை போட்டு கொள்வதால் எப்போதும் தமிழர்கள் அல்லாதவர்கள் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருகின்றார்கள்.

    அது போக எல்லோரையும் மதிக்கும் பண்பு நம்மிடையே வர வேண்டும். மாறி, மாறி, வளரவிடாமல், காரி துப்பி கொண்டு இருப்பதால், தமிழர்களான நாம் தான் இழக்கிறோம். வேற்று மாநிலத்தவர்கள் மேல் சாதியினர், எப்போதும் தமிழகத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் உடன் கூட்டு வைத்து எல்லா தமிழர்களையும் அழிப்பார்கள். அதுதான் ஈழத்தில் கருணா மூலம் பிரபாகரனை அழித்த இந்திய மேல் சாதியினர் டெக்னிக். தமிழகத்திலும் அது நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். எல்லோரும் அழிந்து போவோம். இன்று ஒற்றுமை படாவிட்டால், எல்லாம் முடிந்து விடும்.

    சீமானை மன்னியுங்கள். அழிக்க பார்க்காதீர்கள். பொத்தாம் பொதுவாக வளர விட மாட்டேன் என்று கூவி கொண்டு இருக்காமல், தன்னால் முயன்ற தமிழ் வளர்ச்சியை தமிழுக்கு செய்தால் போதுமானது. இன்னொரு சக தமிழரை அழித்து மற்ற மொழி மக்கள் நம்மை பார்த்து சிரிக்க செய்யாதீர்கள்.

    • Lala says:
      11 years ago

      Dear Greece,
      You are over estimated about these people.
      These people never ever destroy or damage See man’s image.

  9. greece says:
    11 years ago

    ஏன் தெலுங்கு மக்கள் ஆந்திரா, தெலுங்கான என்று பிரிந்து கிடக்கிறது? அங்கே சாதி கொடுமை தமிழகத்தை காட்டிலும் கொடுமை. அங்கே இருந்து வந்த தாழ்த்தப்பட்ட தெலுங்கர்கள், தமிழகத்தில் இருக்கும் சாதி பிரிவினை பயன்படுத்தி ஆட்சியை இங்கே பிடிக்க எத்தனிகிறார்கள் . விஜயகாந்த், வைகோ தாழ்த்தப்பட்ட பலிஜா நாயகர் கூட்டம். ஆந்திராவில் பருப்பு வேகாது. இங்கே தமிழகத்தில் முடியும். 20 தமிழர்களை செமரத்தில் போட்டது அவர்களில் மேல் சாதியினர் கம்மவர் நாயுடு கூட்டம். ஏன் இவர்களுக்குத்தான் பிரித்து மேய தெரியுமா? வெகு எளிதாக அவர்களை பிரித்து விட முடியும். பண்பு கருதி, தமிழர்கள் அப்படி செய்ய மாட்டர்கள். ஆனால் சக தமிழர்களை ஒழிப்பதில் எல்லா தமிழர்களுக்கும் ஒற்றுமை உண்டு.

    ஒரு தேவரையோ, ஒரு பறையரையோ, ஒரு வன்னியரையோ, ஒரு நாடரையோ கை வைத்து பாருங்கள். அப்புறம் தெரியும் சேதி. தமிழர் என்று கூறி எல்லா பெண்களையும் கற்பழிப்பு செய்யுங்கள், போட்டு கொலை செய்யுங்கள், எல்லா தமிழர்களும் சிவனே என்று கம் என்று இருப்பார்கள். கேடு கேட்ட இந்த மத சதி வெறி பிடித்த தமிழர் கூட்டம். ஒரு அந்தோணி, அந்தோணியாக கேரளத்தில் முதல் அமைச்சராக வெற்றி கொள்ள முடியும். ஆனால் சைமன், சீமான் என்று மாற்றி வந்தாலும் விட மாட்டோம். சாதியில் என்றாவது ஒன்று பட்டாலும், மதத்தால் நம்மை மிக எளிதாக பிரித்து விட முடியும். அதைதான் பார்பான், மற்றும் வேற்று மொழி காரர்கள் செய்கிறார்கள். நாமும் ஏமாந்து இருப்போம். நாம் ஒரு ஏந்தி பழகிய பிச்சை கார கூட்டம்.

    கருணா போட்டு கொடுத்த பொது, நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள். அவன் சாதி சொல்லி தாக்க வேண்டியது தானே. எவ்வளவு கற்பழிப்புகள்? மகிந்த supply செய்த சிங்கள் விபச்சாரிகளை நக்கி கொண்டு தானே இருந்தான் இந்த கருணா அப்போது! இப்போதும் பாருங்கள் ரஜினிகாந்த ப. ரஞ்சித் உடன் கூட்டு சேர்வதை. இப்படிதான் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை கோயிலில், நம்மை அழித்த மராட்டி சரபோஜி மன்னர் பரம்பரைக்கு முதல் மரியாதை.

    இனி ஒரு.. நடத்தாமல் , போய் ரஜினிகாந்த் சுவரொட்டிக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். நீங்கள் எல்லாம் ஏன், ஒரு ரஜினிகந்தையோ, ஒரு பெரியாரையோ, ஒரு வைகோவையோ, விஜயகந்தையோ, கமலயோ, சோவையோ, சந்திரபாபு நாய்டு வையோ , வெறி கொண்டு தாக்குவதில்லை? சீமான் தமிழன் தானே கேவலமாக பேசி தப்பித்து கொள்ள முடியும். அங்கே பேசினால் யார் தீவிரவாதி என்று பேர் வாங்குவது? வைகோ, விஜயகாந்த் , விஜய், விஷால் போன்றவர்கள் புலிகளை ஆதரித்து பேச முடியும். ஆனால், சீமான் பேசினால் தடா சட்டம் வரும். நீங்களும் போட்டு கொடுப்பீர்கள். விளங்கும் தமிழ்!

  10. yogan says:
    11 years ago

    ஹிட்லர் என்பவனை தலைவனாக் கொள்ளும் ஒரு முட்டாள் கூட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

    • greece says:
      11 years ago

      அது உங்கள் வீட்டில் இருந்து ஆரம்பம் ஆகட்டும். உங்களை கட்டிவைத்து, உங்கள் கண் முன்னால் உங்கள் அம்மாவை, பாட்டியை, உங்கள் ஆறு வயது மகளை, கொடூரமாக கற்பழித்து, பிறகு, டெல்லி கற்பழிப்பு செய்தவன் போல rod ஐ உள்ளே திணிக்காமல், நீங்கள் உங்கள் அம்மாவிடம் பிறந்து வந்த வழியில் grenade வைத்து சிதரடிக்கட்டும். அப்போது யார் உங்கள் தலைவன் என்று நான் அறிய ஆவல். வழியும் வேதனையும் தனக்கு வந்தால் தெரியும்.

  11. Sempanahan says:
    11 years ago

    ஹிட்லரோடு அடையாளப்படுத்தி ஈழத் தமிழர்களின் அடையாளத்தை அழிக்க முயல்வது சீமான் மட்டுமல்ல. வை.கோ கூட நாலுதரம் வன்னிக்கு விசா இல்லாம போய் வந்தும் ரோ இனால் கைது செய்யபடாமல் அரசிலும் இணைத்துக்கொள்ளப்பட்டார். சீமான் ஒரு தெருப்பொறுக்கி ரவுடி. அவரை நேரடியாக எல்லோருக்கும் தெரியும். வைகுண்டராசன், பச்சைமுத்து போன்ற துரோகிகளின் அடியாள் சீமான் என்பது அவர்களின் தோண்டர்களுக்கே தெரியும். வைகோ அப்படியல்ல.

    • greece says:
      11 years ago

      hello sempanahan,
      ஆமா இப்படியே தமிழர்களுக்கு உள்ளேயே மோதி கொண்டு இருங்கள். ஈழம் மலரும். சிங்களனை ஒருவகையில் பிடிக்கும். என்னதான் கொலையோ, கற்பழிப்போ செய்தாலும், தமிழர்கள் என்று வரும்போது ஒன்று படுகிறார்கள். அதே போல டெல்லியில் நடந்த ஒரே ஒரு கற்பழிப்புக்கு அணைத்து இந்தியாவும் ஒன்று சேருகிறது. கொலைகாரன் தூக்கிலிடபடுகிறான். ஆனால் கூப்பாடு தூரத்தில் தமிழர்கள் அத்தனை பேர் கற்பழிப்பு நடக்கிறது. உம்மை போன்ற தமிழ் மக்கள் தோனி, விஜய், அஜித் என்று நக்கி கொண்டு இருக்கும். சீமான் பேசுகிறான், பேசவில்லை. அவர் தமிழர்.

      தன் பிள்ளைகள், பெண்கள் பாதிப்புக்காக ஈழத்தில் ஆயுதம் ஏந்திய , வேறு எங்குமே இந்த உலகத்தில் எந்த தீவிர வாத செயலிலுமே ஈடுபடாத புலிகள் எப்படி ஐரோப்பாவில் , உலகத்தில் எங்குமே தீவிரவாதி என்று கூற பட்டார்கள்? நீங்கள் ஏன் கேள்வி கேட்க வில்லை? அது எதிரி, எதிரி, நண்பன் டெக்னிக். அதுதான் இங்கே நடக்கிறது. யூதர்கள் செய்த கிபிர் அடி, ஜேர்மனி ஐ ஆதரிக்க வைக்கிறது. நீங்கள் கொஞ்ச நேரம் தமிழர்களை மேலும் பிரிக்கும் வார்த்தைகளை பேச வேண்டாம். யார் இனி எக்கேடு கேட்டால் என்ன? இனி தமிழ் பேசுவதாலே எமது பெண்களை கற்பழிப்பை ஏற்க முடியாது. அது நீங்களே ஆனாலும். அது உலகில் எந்த ஐன்ஸ்டீன் ஆனாலும் சரி. இஸ்ரேல் எம்மை கற்பழித்தால் இனி நாங்கள் ஜெர்மனியுடன் கூட்டு. ஏன் சாக்கு போக்கு உங்கள் இந்திய, சிங்களுனுக்குதான் செய்ய தெரியுமா? நீங்கள் எல்லாம் பொய் பேச எங்களை மட்டும் நியாயம் பேச எதிர் பார்க்க வேண்டாம். இந்த மாதிரி ஏமாத்துவதைதானே ராஜதந்திரம் என்று பார்ப்பான் சொல்லி கொண்டு இருக்கான்? நாங்களும் செய்வோம் இனி.

  12. Sempanahan says:
    11 years ago

    greece, தமிழன் என்றும் திராட்விடன் என்று ஓட்டுப் பொறுக்கிய பல் பேரை பாத்தாச்சு கண்ணா! நாங்களும் 1960 ஆம் ஆண்டில இருந்து நீங்கள் விடுகிற தமிழ் சினிமா ஜோக் எல்லாம் பாத்துக்கொண்டு தான் இருக்கிறன். இப்ப இட்லர் ஜோக், வைகுண்டாராசன் ஜோக், ப்ச்சைமுத்து ஜோக்…. தாங்கல்லாப்பா…. தீவிரவாதி என்று அதிகாரவர்க்கம் தான் சொல்லும்….-இட்லர் என்றால் யார் என்று குழந்தையே சொல்லும்… சிங்களவன் சிஙக்ளவன் என்று ஒரு இனத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களைக் கூட வெறுத்து ஒதுக்குவது தான் இட்லர் பாணி… நாஸிசம்….. சிங்களவர்கள் மத்தியில் தமிழ் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் மத்தியிலும் இருந்தார்கள்.. கண்ணா.. இவர்களை அன்னியப்படுத்தி தமிழ் மக்களை அழித்து வைகுண்டராசனிடமும் பச்சைமுத்துவிடமும் பணம் பெற்று ஓட்டுப் பொறுக்கி செட்டில் ஆவது சீமானின் திட்டம்…. அதுவும் ஈழத் தமிழர்களைப் பாவித்து…. இந்தியாவில் செத்த பிணத்தை ரோட்டில் வைத்து உண்டியல் குலுக்கியது போலவா ஈழத் தமிழர்களையும் பயன்படுத்தப் பார்க்கிறீர்கள்? நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.. மீண்டெழுந்தவர்கள்… போராடுவோம்.. சீமான் போன்ற கேவலமான வியாபாரிகளையும் கடந்து போராட்டம் தோன்றும்..

  13. Sempanahan says:
    11 years ago

    greece, உங்களுக்கு தமிழ் உணர்வு இருந்தால் தமிழ் நாட்டைப் பிரித்துத் தரச்சொல்லி இயக்கம் நடத்துங்கள்…. எமக்குப் போராடத் தெரியும்…. ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை இருந்தால் தமிழ் நாட்டில் மிருகங்கள் போல நடத்தப்படும் ஈழ அகதிகளை விடுதலை செய்வதற்காகப் போராட்டம் நடத்துங்கள். அவர்களுக்கு இந்தியக் குடிமகனின் அத்தனை உரிமையையும் வாங்கிக் கொடுங்கள் அதைவிட்டு சும்மா கூச்சல் போட்டு ஈழத் தமிழரகளை -இட்லரிடமும் பச்சை முத்துவிடமும் அடகுவைக்காதீர்கள்.

  14. tamilarasan says:
    11 years ago

    லைக்கா நிறுவனம் ராஜபக்சவின் ஊழல் படையாக நடந்துகொண்ட போது, லைக்காவை ஆதரித்து ‘-அவனும் தமிழன் தானே’ என ஆவேசமாகப் பேசி தொண்டையைக் கிழித்துக்க்கொண்டவர் சீமான். தமிழ் உணர்வெல்லாம் இந்த கும்பல்களுக்குக் கிடையாது. அவர்கள் ஈழத் தமிழர்களை வைத்துப் பிழைப்ப்ய் நடத்துகிறார்கள். அவ்வளவு தான் அதைத் தெரிந்தும் சீமானுக்கு ஆலவட்டம் வீசும் அயோக்கியர்கள் எமது இனத்தின் அவமானச் சின்னங்கள்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...