போராடும் மக்களை சமூகவிரோதிகள் என மோடி மற்றும் தமிழக அரசின் குரலை சினிமா நடிகர் ரஜனிகாந்த் குறிப்பிட்டார். போராட்ட்டம் தேவையற்றது என்று வேறு குறிப்பிட்டார். தூத்துக்குடியில் போராடும் மக்களை மட்டுமன்றி, லண்டன் உட்பட உலகம் முழுவதும் போராடும் மக்களைக் கொச்சைப்படுத்தும் ரஜனிகாந்த் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்று கூறினார். தூத்துக்குடி – வேதாந்தா படுகொலைகளின் பின்னர் அங்கு சென்ற ரஜனிகாந் இன் 2.0 மற்றும் கலா போன்ற படங்கள் புலம்பெயர் நாடுகளில் திரையிடப்பட்டால் அது அங்கு வாழும் மனித நேயம் மிக்க தமிழர்களை அவமானப்படுத்துவதாகும். புலம்பெயர் தமிழர்கள் ரஜனிகாந் இன் அனைத்துப் படங்களையும் புறக்கணிப்பது இன்றைய உடனடித் தேவை. ரஜனிகாந் இன் ஆன்மீக அரசியல் போலிஸ் படுகொலைகள ஆதரிக்கும் ஆன்மீகம் என்பதும் மோடியின் ஆன்மீகம் என்பதும் அவரது ஒப்புதல் வாக்குமூலமே தெரிவிக்கிறது. ரஜனி போன்ற சமூகவிரோதிகளை தூத்துக்குடி எல்லைகுள் மக்கள் அனுமதித்திருக்கக்கூடாது.