கடல்கொள்ளைய எதிகொள்வது என்ற தலையங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமான அவன்கார்ட் மரிடைம் என்ற தனியார் இராணுவக் குழு ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கு இணங்கவே ஆரம்பிக்கப்பட்டதாக அதன் நிறுவனரும் இனக்கொலையாளியுமான கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இராணுவ நிறுவனத்திற்கு எதிரான வழக்கு இலங்கைப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க ‘நல்லாட்சி அரசின்’ நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கோத்தாபய அதிகாரத்திலிருந்த் வேளையில் கடல்கொள்ளையை எதிர்கொள்ளவே இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதாக பிரித்தானிய அரசு தெரிவித்திருந்தது. 2011 ஆம் ஆண்டு பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்ட போதும் பிரித்தானிய அரசின் புலம்பெயர் தமிழ் உளவாளிகள் இது குறித்து மௌனம் சாதித்தனர்.
மைத்திரிபால தேர்தலில் வெற்றிபெற்றதும் நிறுவனத்தின் ஆயுதக்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்திற்கு அருகாமையில் தடுத்து நிறுத்தப்பட்டது. சுவிஸ் அரசினால் அனுமதி வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தை ஆரம்பித்த கோத்தாபய இப்போது ஐ.நாவின் வேண்டுகோளுகு இணங்கவே தனது தனியார் இராணுவ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா ராஜபக்சவைத் தண்டிக்கப் போகிறது என்றும் கோத்தாவைத் தூக்கில் போடப்போகிறது என்றும் மக்களை ஏமாற்றிய தமிழ் அரசியல் வாதிகளின் போலி முகத்திரையை மக்கள் இப்போது உணர்ந்துகொண்டுள்ளனர். அமெரிக்காவும் ஐ.நாவுமே போரையும் போருக்குப் பிந்திய அரசியலையும் ராஜபக்சக்களின் ஊடாக வழிநடத்தியது.
ஐ.நாவும் அமெரிக்காவும் கொலை அனுபவமுள்ள கோத்தாபயவை மிக நீண்டகாலத்திற்குப் பாதுகாக்கும் என்பது தெளிவானது. இலங்கையில் உள்ளூர் அரசியலின் முரண்பாடுகளின் தாக்கத்திலிருந்து கூட கோத்தாபய போன்றவர்களை ஏகாதிபத்தியங்கள் பாதுகாக்கும்.
கோத்தாபயவின் சர்வதேசக் கொலைப்படைக்கு இலங்கை அரசு பச்சைக்கொடி