ஆவா குழு என்ற யாழ்ப்பாணத்தில் இயங்குவதாகக் கருதப்படும் குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இலங்கை அரச பாதுகாப்புப் படை அலெக்ஸ் அரவிந் என்பவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது. இது தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக வெளிவரும் செய்திகள் பலத்த சந்தேகங்களை இலங்கை அரசியல் மட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற பதாகையின் கீழ் வட மாகாணத்தில் செயற்படும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் அலுவலகத்தில் பணியாற்றும் அலெக்சின் கைது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில் இக் கைது அரசியல் நோக்கமுள்ளது என்ற வகையில் கூறியுள்ளார். இக் கைதின் ஊடாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பிரச்சனைக்குரிய தரப்பாக மக்கள் முன் நிறுத்துவதே கைதின் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார். அலெக்ஸ் ஒரு சட்டத்துறை மாணவன் எனக் குறிப்பிடும் அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன், அலெக்ஸ் ஆவா குழுவுடன் தொடர்பற்றவர் என முழுமையாக மறுத்துள்ளார்.
இதற்கு முன்பதாக இலங்கை அரசின் சுகாதார அமைச்சரும். அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன ஆவாக் குழுவை உருவாக்கியது கோத்தாபய ராஜபக்சவே எனக் குறிப்பிட்டிருந்தார். கோத்தாபய ராஜபக்ச இதனை மறுத்த போதிலும் தனது தகவலில் உறுதியுடனிருப்பதாக ராஜித மீண்டும் கூறியிருந்தார்.
கஜேந்திரகுமாரைப் பொறுத்தவரை எழுக தமிழ் நிகழ்வின் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் எழுச்சி ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனை முறியடிக்கும் முயற்சியாகவே கைது இடம்பெற்றுள்ளதாக ஊடகச் சந்திப்பு ஒன்றின் போது குறிப்பிட்டுள்ளார்.
ராஜித சேனாரத்னவை மறைமுகமாகத் தாக்கிய இலங்கை பாதுகாப்பு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன ஆவா குழுவிற்கும் இராணுவத்திற்கும், ஏன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும் கூட எதுவிதத் தொடர்ப்பும் இல்லை எனத் தெருவித்திருந்தார். அதேவேளை அக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சிலர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆக, இலங்கை அரசுக்குள் நிகழும் பனிப் போரிற்கு அலெக்ஸ் பலியாக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஆக, ஆவா குழு இலங்கை அரச உள் முரண்பாட்டின் வெளிப்பாடு என்ற சந்தேகங்கள் எழுவது வழமையானது.
இன்று ஆவா குழுவின் தோற்றம் தொடர்பாக ராஜித செனவிரத்ன வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக முழுமையான விளக்கத்தைக் கோருவதன் ஊடாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதன் உறுப்பினரை விடுவிப்பதற்கான வழிகளைத் திறந்துவிடலாம். கைது போலியானது என்பதை ஆவா குழு என்பது இராணுவத்தின் குழந்தை என்று நிறுவுவதன் ஊடாகச் சாதித்துக்கொள்ள முடியும்.
ராஜித இலங்கை அரசின் அதி உயர் செல்வாக்கு வட்டத்திலுள்ள அமைச்சர், ஆவா குழுவை எந்த இராணுவ அதிகாரி தோற்றுவித்தார் என்பது போன்ற அடிப்படை விபரங்கள் அடங்கிய தகல்வல்களை அவர் வெளியிடுவது தவிர்க்க முடியாத ஒன்று.
ஆவா குழுவை முன்வைத்து நடத்தபடும் அரசியல் நாடகத்தை முடிவிற்குக் கொண்டுவர தகவல்களை வெளிப்படையாக மக்கள் மத்தியில் கூறுமாறு இதுவரை எந்தத் தமிழ்க் கட்சியும் கோரவில்லை. குறிப்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கைதான நிலையில் அக் கட்சி இக் கோரிக்கையை முன்வைத்து தகவல்களை மக்கள் மத்தியிக் வெளிக்கொண்டுவருவது அவசியமானதும் அவசரமானதுமாகும்.
ஆவா என்பது 2014 களில் அறியப்பட்ட ஒரு வன்முறைக்குழு. இன்று ஆவா என்பது ஒரு சமூக வன்முறைக்குழுவுக்கான ஒரு generic term தவிர முன்னைய வன்முறைக்குழுவோடு
சம்பந்தப்பட்டது என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை. எனவே முன்னைய ஆவா இராணுவத்தால் உருவாக்கப்பட்டது என்ற கருதுகோள் தற்போது சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர்களின் விடய விவாதத்தில் அர்த்தமில்லாதது.
அலெக்ஸ் அரவிந் st. Patrick மாணவர். ரோமன் கத்தோலிக்கர். 9ம் வகுப்பு பின்னர் பாடசாலை போனதில்லை.
O/L பரீட்சை எழுதவில்லை. எப்படி இவர் சட்டம் படிக்கும் மாணவராக இருக்கமுடியும்?
பதின்மர் காலத்தில் திசை தொலைத்தவர்.
வன்முறைக்குழு வாசம். எழுக தமிழோடு தன் குழுவோடு சைக்கிள் பாட்டியிலிணைந்தார்.
தவறிய இவ்விளைஞனை நல்வழிப்படுத்துவதற்கு பதில் பொன்னம்பலமும் பிரேமச்சந்திரனும் பாவித்தார்கள். முன்ன பிரபாகரனை அமிர் பாவித்தமாதிரி. இதற்குரிய விலையை வெள்ளாள மேய்ப்பர்களாதான் செலுத்தவேணும். அலெக்ஸ் புனர்வாழ்வளிக்கப்படவேண்டியவர்.
இங்கு பின்னுட்டம் இட்டவர் மேற் குறித்த கைதை எந்தவித உள்நோக்கமும் இல்லாத காவல்துறையின் மிகச்சரியான நடவடிக்கை என்கிறாரா?
சாதி மத பிரதேச ரீதியான குழப்பங்களை உருவாக்க பலர் அலைகிறார்கள். இவற்றை இனியொருவும் எப்படி அனுமதிக்கிறது என்பது புரியவில்லை!!