ஒரு புதிய அமெரிக்க நூற்றாண்டிற்கான திட்டம் The Project for a New American Century (PNAC) என்ற வரைவின் அடிப்படையிலேயே இன்று அமெரிக்கா தலைமையில் உலகம் அழிக்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரும் முதலாளித்துவ சிந்தனையாளர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உதவி ஜனாதிபதியாகவிருந்த டான் குவயெல் இன் தலைமை நிர்வாகியான வில்லியம் கிரிஸ்ரோல் இன் தலைமையின் கீழ் இத்திட்டம் 1997 ஆம் ஆண்டில் தொடக்கிவைக்கப்பட்டது. உலகத்தை அமெரிக்காவின் நலன்களுக்கும் கோட்பாடுகளுக்கும் ஏற்ப மாற்றியமைப்பதே இவர்களின் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகவிருந்தது.
உலகின் செல்வாக்குமிக்க அதி உயர் பணக்காரர்கள் வாழ்வதற்கு உகந்த பிரதேசமாக அமெரிக்காவை மாற்றுவதும், ஏனைய நாடுகளைப் போர்ப்பிரதேசங்களாகவும் அழிவிற்குரிய பிரதேசங்களாக மாற்றுவதும் இத்திட்டத்திம் மற்றோரு நோக்கம்.
முன்னை நாள் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ரொனால்ட் ரம்ஸ்பெல்ட், உலக வங்கியின் தலைவர்கவிருந்த போல் வொல்போவிட்ஸ், உதவிப் பாதுகாப்புச் செயலாளர் ரிச்சார்ட் பேர்ல் போன்றோர் உட்பட பலர் இந்தத் திட்டத்தை உருவாக்கும் குழுவில் அங்கம் வகித்தனர். ‘அமெரிக்கப் பாதுகாப்பை மீளமைத்தல் – புதிய நூற்றாண்டிற்கான தந்திரோபாயம், படைகள், வளங்கள் என்ற அறிக்கையை இக் குழு வெளியிட்டது(இணைப்பு).
இந்த அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமானால் உலகம் முழுவதும் அமெரிக்க இராணுவம் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
லிபியா, ஈராக் போன்ற நாடுகள் தாக்கப்படுவதற்கு முன்பாகவே லிபியா, ஈரான், ஈராக், சிரியா, வட கொரியா ஆகியவை தாக்கப்பட வேண்டிய அமெரிக்காவின் எதிரிகளாகக் கணிப்பிடப்பட்டுள்ளன.
இன்று குர்திஸ் போராளிகள் அழிக்கப்படுவதையும், தனது நட்பு நாடுகள் ஊடாக ஐ,எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பை உருவாக்கி அதனை அழிக்கப் போவதாக அமெரிக்கா நாடகமாடுவதும் முன்னமே திட்டமிடப்பட்டவை என்பது தெளிவாகின்றது.
2000ஆம் ஆண்டிலிருந்து இந்த அறிக்கையில் மேலும் சில பரிந்துரைகள் சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. ஹில்லாரி கிளிங்டன் தலமையிலான குழு ஆசிய மையம் என்ற திட்டத்தின் ஊடாக ஆசிய நாடுகளை இராணுவ மயப்படுத்த வேண்டும் என்ற முடிவிற்கு வந்தது. ஆசியாவை அமெரிக்கா இராணுவ மயப்படுத்துவதற்கு இலங்கை மையமாகப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Click to access RebuildingAmericasDefenses.pdf
http://www.historycommons.org/context.jsp?item=a060397pnacprinciples&scale=1#a060397pnacprinciples
PNAC -இன் முக்கிய கையொப்பதாரியும் இப்பொழுது அமெரிக்க-துருக்கி பேரவைபயினூடு, குர்தீஸ் மக்களால் ஒருமளவுக்கு வெளிக்கொண்டுவரும் சிரிய-இராக்கிய பேரவலத்திலும் தொரடர்புபட்டு செயற்படும் பிணந்தின்னி ரிச்சட் ஆமிடேஜ் கவனங்கொள்ளப்படவில்லை.
2001 செப்டம்பர் மாதம் நியூயூர்க்கில் இரட்டை கோபுரத் தாக்குதல் நடத்தேற்றப் பட்ட போது பாக்கிஸ்தானின் முக்கிய உளவுத்துறை இராணுவ அதிகாரியுடன் கலந்து பேசிக்கொண்டிருந்த போதே இதே தடியன் ஆர்மிடேஜ் உதவி ராஜாங்க செயலாளர் கோலத்தில் “கற்காலத்துக்கு பாகிஸ்தானை வெடிகுண்டால் நாசஞ் செய்வோம்” எனப் பயமுறுத்தியவன். ஆர்மிடேஜ் ஆப்கானில் ஒசாமா பின் லேடனை ஒரு இராணுவக் காயாக உருவாக்கிய காலத்துச் ‘சேவைகளுக்காக’ பாக்கிஸ்தானின் அதிஉயர் பட்டமும் பெற்றவன். இவனின் நாசகாரச் செயல்களின் உருவாக்கம் வியற்நாம், லாவோஸ், கம்போதியா போன்ற தேசங்களில் மானிட குலத்துக்கெதிரான அழிவுகள் அமெரிகாவினால் தலை தூக்கியாட்டப்பட்டபோது, பிற்புலத்தில் மறைமுகமாக வைத்திய சாலைகள் உற்பட பொதுபுடமைகளை அழிக்கும், ப்ரொஜெக்ட் பீனிக்க்ஸ் என பலரும் கருதுவதுண்டு. அக்காலகட்டத்திலிருந்தே சீ.அய்.ஏ -இன் ஹெரோயின் போதைப்பொருள் பெருந்-தயாரிப்பு மற்றும் பெரு-விநியோகம் என்ற பெரும்-பாதகச் செயல்களுடன் தொடர்புடையவன்…இதே தொனியிற் தான் எல்-சல்வடோருக்கூடாக நிக்கரகுவாவை ஒட்டி நடந்தேற்றப்பட்டதும் ஓரளவில் சட்டதிட்டங்களில் அகப்பட்டு வெளிவந்ததுமான ரேகன் ஜனாதிபதிப் பதவிக் கால பாதக இரானுக்கான ரகசிய ஆயுதவிற்பனை விவகாரம். இவ் விவகாத்துடன் தொடர்புபட்ட கோக்கெயின் போதைப்பொருள் பெருவியாபாரத்திலும் ரிச்சட் ஆமிடேஜ் பெருமளவில் ஈடுபட்டவன் எனவும் பலர் கருதுவதும் உண்டு.
சரி, ஏன் PNAC ஆவனத்துடன் தொடர்புடைய சிலரில் ஆர்மிடேஜ் மேல் மட்டுமந் தான் அக்கறை என்று சிலர் குழம்பலாம். நமக்கண்மித்த ஒரு முக்கிய விடயத்துக்கு வருவோம்,
1983 இனக்கலவரத்தின் இறுதி நாட்களில் அக்கால அமெரிக்க பாதுகாப்புச் செயலாலம் கஸ்பர் வைன்பேர்கர், இராணுவத் தளபதி கொலின் பவல் சகிதம், கொழும்பில் கால் பதித்த ரிச்சட் 2002-இல் முகமாலை முன்னரன் போன்ற விடயங்களை ஒரு புறத்தால் சரத் பொன்சேக்காவினால் நேரடியாகக் காண்பிக்கப் படும் வரை பம்பரமாகச் சுழன்று நின்றது தமிழீழம் கோரும் ஆயுதப் போராட்டம், புலத்தில் இயங்கும் தமிழ்க் கோமாளிக் கும்பல்களால் கிளிநொச்சியிலிருந்ந்தே வந்திருக்க வேண்டிய மொக்குக் கட்டளைகளின் படி தமிழர் தம் தேசம் என ஊசலாட்டிக் கொண்டிருந்த கனவை ஆழமாக உட்புகுந்து அமெரிக்க உதவி ராஜங்க செயலாளன் என்ர போர்வையில் நாசமாக்கினான் ஆர்மிடேஜ்.
ஆர்மிடேஜுடம் இப்பொழுதும் தமது புளித்த முன்நாள் தொடர்புகளை பேணிப் பாதுகாக்க முற்படும் ‘மேல்மாடியில் ஒன்றுமில்லாத ‘ தான் தோன்றி தமிழ்த் தலைமைகள் இப்பொழுதும் ஆர்மிடேஜுக்கு கால்பிடித்து விடுகிறார்கள் என்றால் ஈழத் தமிழரின் இன்றைய அவலத்தின் ஒரு முக்கிய காரணி – மடமை என்பது வெளிப்படும்.
ஸ்ரீ லங்காவின் நண்பர்கள் [Friends of Sri Lanka] எனும் ராஜபக்சவின் நேர வீணடிப்புக்கு அமெரிக்காவில் ஒருங்கிணப்பாளன் என கடந்த சில வருடங்களாக தனது பிரத்தியோக சர்வதேச வியாபாரத்தினூடாக தமிழினப்படுகொலையில் இன்னும் ஒரு முக்கிய பங்குதாரிகவே ரிச்சட் ஆமிடேஜ் திரிகிறான்.
ICG-எனும் பாதகர்களின் அமைப்பினூடும் ரிச்சாட் ஆர்மிடேஜ் ‘தமிழர் மனித உரிமை’ எனும் வாளிக் கணக்கான முதலை கண்ணீர்த் தொடர்புடையவனாகவும் உள்ளான்.
ரிச்சட் ஆர்மிடேஜ் PNAC ஆவணத்தின் கையொப்பதாரிகளில் அதிமுக்கியவனானவன் எனக் கருதுபவர்களும் உண்டு. இப்பேர்ப்பட்ட ஒருவனிடம் தமிழினத்தை விளக்கக் குறைபாடு காரணமாக விற்ற, விற்றுப் பிழைக்க முற்படுவோர் உண்மைகளை உரைக்க முன்வர வேண்டும்.
http://www.williambowles.info/ini/ini-0136.html
http://www.armitageinternational.com/news/
http://www.whitehouse.gov/the-press-office/2013/06/04/remarks-vice-president-american-turkish-council