நேற்று – 20.04.2014- லண்டனில் o2 என்ற பிரமாண்டமான மேடையில் நடைபெற்ற தென்னிந்திய கோப்ரட் சினிமா மற்றும் தொலைக்காட்சிக் கூத்தாடிகளின் களியாட்ட நிகழ்ச்சி தோல்வியடைந்துள்ளது. விஜய் தொலைக்காட்சி, லெபாரா தொலைபேசி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தியதாகக் கூறப்பட்ட தமிழ்க் கொலைத் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார் நைட் நிகழ்ச்சி தோல்வியடைந்தது. இந்த நிகழ்ச்சி தேசிய வியாபாரம் நடத்தும் தமிழ்வின் லங்காசிறீ ஆகிய தமிழ் வியாபார நிறுவனங்கள் ஆதரவு வழங்கின. ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களின் கலாச்சாரத்தின் பேயரால் அதீத விளம்பரங்கள் வழங்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்ட போதும் நிகழ்ச்சியை பெரும்பாலான பிரித்தானிய புலம்பெயர் மக்கள் புறக்கணித்துள்ளனர்.
தேசியத்தின் பெயரால் நடத்தப்படும் அப்பட்டமான வியாபாரத்தை புலம்பெயர் தமிழர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதற்கான அறிகுறியாகவே இப் புறக்கணிப்புக் கருதப்படுகின்றது. லைக்கா, லெபாரா ஆகிய தமிழ்ப் பல்தேசிய நிறுவனங்களால் ஊட்டி வளர்க்கப்படும் பணவெறி கொண்ட புலம்பெயர் பிழைப்புவாத அரசியலின் தோல்வியே இந்த நிகழ்ச்சியின் தோல்வி.
லைக்கா நிறுவனத்தின் இலங்கை அரசுடனான தொடர்பு இனியொரு இணையத்தினால் பலதடவைகள் தெளிவுபடுத்தப்பட்டன. இதனைப் பயன்படுத்திக்கொண்ட தமிழ்த் தேசிய வியாபாரிகள் லைக்காவின் போட்டி நிறுவனமான லெபாராவுடன் இணைந்து தமது பணவெறியைத் தீர்துக்கொண்டனர். இந்த பல்தேசியப் பண வெறிக்குள் சங்கதி,ஈழமுரசு,தமிழ்வின் ஆகியனவும் அடங்கிப் போயின.
தொலைக்காட்சி, வானொலி, கலைநிகழ்ச்சிகள் போன்ற அனைத்துத் தளத்தையும் களியாட்டமாக மாற்றுவதற்குத் பிழைப்புவாதிகளும், இவ்விரு வியாபார நிறுவனங்களும் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.
சில காலங்களின் முன்னர் சுப்பர் சிங்கர் என்ற தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தக்கூடாது என்று கொந்தளித்தவர்கள் பலர். ‘தமிழ்த் தேசிய’ வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்வின் லங்காசிறீ இணையங்களும் இதற்காகக் குமுறி வெடித்துக் கண்ணீர்வடித்தன. இவர்கள் வடித்த நீலிக்கண்ணீரின் ஈரம் காயும் முன்பே விஜய் தமிழ்க் கொலைத் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் நட்சத்திரங்களோடு லங்காசிறீயும், தமிழ் வின்னும் தமது வியாபாரத்தை ஆரம்பித்தன.
இலங்கை அரச படைகளும், இந்திய உளவுத்துறையும் இணைந்து ஏற்படுத்த முடியாத அப்பட்டமான அழிவுகளை இக்கலாச்சார சீர்குலைப்பு ஏற்படுத்தும் வலிமை கொண்டது. அரைத் தமிழ்த் தொலைக்காட்சியான விஜய் தன்னைத் தமிழ்க் கலாச்சாரம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஒவ்வொரு புலம்பெயர் குடும்பத்தினதும் வரவேற்பறையில் வந்து நிற்கிறது.
விஜய் தொலைக்காட்சி தனது கட்டண சேவையைப் புலம்பெயர் நாடுகளில் ஆரம்பித்துள்ளது. நாளாந்த செய்திகளைக்கூட வெளியிடாத அருவருக்கத்தக்க அரைகுறை ஆங்கிலத்தோடு தமிழையும் கலந்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளோடு விஜய் தொலைக்காட்சி புலம்பெயர் நாடுகளில் விசம் போலப் படர ஆரம்பித்துள்ளது. இதன் முன்னுரையாகவே, தமிழ்வின், லெபாரா, விஜய் இணைந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
வடக்கிலும் கிழக்கிலும் ஒடுக்கப்படும் தமிழர்கள் தமது வாழ்வின் அவலங்களை கலைவடிவங்களாக்கி வருகின்றனர். புலம்பெயர் நாடுகளின் தேசியப் பிழைப்பு வாதிகளோ தென்னிந்திய விதேசிக் கூத்தாடிகளின் களியாட்டங்களை இறக்குமதி செய்கின்றனர்.
லண்டனில் ஸ்டார் விஜய் நைட் : தேச விரோதிகளின் பண்பாட்டு அழிப்பு : சுதர்சன்
இந்த நிகழ்ச்சி தோல்வி என்பது எதன் அடிப்படையில் .
இதில் 5000 அதிகமானவர்கள் கட்டணம் செலுத்தி பார்வையிட்டார்கள். சலுகையடிப்படையிலும் மேலும் 1000பேராவது பார்வையிட்டார்கள். இன்று விஜய் தொலைக்காட்சியினை லண்டனில் 90 வீதமானோர் (tv, you tube)பார்க்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி தோல்வி என்பது உங்களது விருப்பமும், உங்களது ஊடக அரசியலுமே தவிர உண்மையல்ல.
உங்களது விஜய் தொலைக்காட்சி நாளாந்த நிகழ்ச்சிபற்றிய விமர்சனம் ஓரளவு உண்மை. ஆனால் அதனைத்தான் பிற தமிழ் தொலைக்காட்சிகளும் செய்கின்றன.
இவ்வளோ விபரங்களையும் புட்டுப்ட்ட்டு வெக்ரீங்களே நீங்க யாருசார் விஜய் ரிவி இன் ஆளா என்ன? எனது அக்கா புரொகிராமுக்கு போனாங்க. 2000 பேர் மக்சிமம்.
அப்படியானால் 2000 தங்கிலிஷ் கலாசார அடிமைகள் லண்டனில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்..
தான் வாழ்கின்ற சமூகத்திலிருந்து விடுபட்டுப்போய்விடுவோமோ
என்ற பயத்தினால் சமூகம் செய்கின்ற அத்தனை முட்டாள்தனங்க
ளையும் தானும் செய்ய முடிவெடுக்கும் பாிதாபமான நிலையிலே
யே ஒவ்வொரு தமிழ் மகனும் வாழ்கிறான். ஆனால் இந்த நியதியை
உடைப்பதற்கும் அதிலிருந்து வெளியேறுவதற்கும் சிறிது சுயகெளர
வமும் மன உறுதியும் இருந்தாலே போதும்.
o2 arena records இல் எண்ணிக்கையினை சரி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களது கருத்தினை எதிர்தால் உடனே விஐய் ரீவி ஆளா, நான் விஐய் ரீவியில் வரும் நீயாநானா, மகாபாரதம், தமிழ் பேச்சு ஒரு மூச்சு போன்ற நிகழ்ச்சிகளின் ரசிகன். உங்களது அக்காவும் விஐய் ரீவி யின் ஆளா? உண்மையான எண்ணிக்கையினை சொன்னால் கோபிக்கும் நீங்கள் யாரின் ஆள்?
5000 பேர் வரையில் பார்யைிட்டுள்ளார்கள் என்பது உண்மையானது . இதுவே தனியே விஐய் கமல் போன்றோர் எனில் அதிகம் பேர் பார்வையிட்டிருக்கலாம்.
## விஐய் கமல் போன்றோர் எனில் அதிகம் பேர் பார்வையிட்டிருக்கலாம்.##அ
அவர்கள் வந்திருந்தாலும் அதே தான் நிலைமை.
இப்போதெல்லாம் கலைநிகழ்ச்சிகளில் மக்கள் கலைஜர்களைத்தான் ரசிக்கிறார்களே தவிரநடிகர்களை அல்ல .
கலை நிகழ்ச்சியில் நடிகர்களால் பெரியளவில் பங்களிக்க முடியாதென்பது அவர்களுக்கு தெரியும்.
கலைத்துறையில் ஒருபகுதியாகவே நடிகர்கழும் உள்ளார்கள்.
அரசியல் வாதிகள் நடிக்கத்தொடங்கிய பின்னர் நடிகர்களையும்
மக்கள் மதிக்காமல் உள்ளார்கள்.
பாடகர்கள் , இசையமைப்பளர்கள் , அறிவிப்பாளர்களை விட திறமை குறைந்தவர்களாகவும், இந்த மாதிரிநேரடி நிகழ்ச்சிகளின்போது பெரியளவில் ரசிகர்களால் ஈர்க்கப்ப்ட முடியாதவர்களாகவுமே இன்று நடிகர்கள் தமிழர்களால் நோக்கப்படுகிறார்கள்..
ஒரு படத்தில் வாயையும் அசைத்து கை கால்களை
ஆட்டி நடனமாடும் போது பின்ணணி
பாட்டும் அதன் இசையும் பெரும் பங்கேற்கின்றது
உண்மைதான். ஆனால் பேரெடுப்பது
நடிகர்கள்தான்.
பாடகர்,இசையமைப்பாளர்களின் முகமோ
பெயரோ இரசிகர்களிற்கு தெரியாது.
2000 ஆயிரம் பேருமாயிருக்காது 5000 ஆயிரம் பேருமாக இருக்காது
குறைந்த்து 10,000 பேரென்று கணக்கு காட்டப்படும். தென்னிந்தியாவிற்கு
பெருந்தொகைபபணத்தை பணச்சலவை செய்து அனுப்பவே இவ்வாறான்
நிகழ்ச்சிகள். தோல்வியோ வெற்ரியோ வியாபாரம் வியாபாரம் தான்.
தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகளின் முன் 10 ஏழைகளிற்கு வீடு அமைத்து க் கொடுப்பார்கள். 1000 வீடென்று கண்க்கு காட்டுவார்கள்.
மிகுதில் சென்னையில் உல்லாச விடுதி கட்டி வாடகைக்கு கொடுப்பார்கள்.
30 வருட வியாபார அனுபவ்முள்ளவர்கள் இவர்கள்.
‘தமிழ்த் தேசிய தமிழ் வின் இணையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்த்து கொண்டுள்ளார்கள் என்று செய்தி போட்டுவிட்டு. கீழே வெட்டி ஒட்டிய படம் ஒன்றை போட்டுள்ளார்கள். முன்பக்கத்தில் சில தமிழ்த் தலைகளும் பின்னால் சிறிதாக தெரியும் வேறு நிகழ்ச்சிக்கு வந்த்தவர்கள் தலைகளும் காணப்படுகின்றன. வெட்டி ஒட்டினாலும் ஒரு லாஜிக் இல்லாமல் பண்ணியிருக்காங்க…
In Toronto, Canada countdown started for another Vijay TV “Jodi number one” “Samaachchaaram Star’s” “Star Dance Music Night”
அண்ணா! நீங்களே விஜய் டி.விக்கு நல்ல விளம்பரத்தை ஒடி ஒடி தேடி கொடுத்து விடுவீர்கள் போல இருக்கே ?
உங்களைப்போல் அவர்களை திட்டிக்கொண்டே விளம்பரம் தேடிகொடுப்பவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு என்ன கவலை ??
## ஒரு படத்தில் வாயையும் அசைத்து கை கால்களை
ஆட்டி நடனமாடும் போது பின்ணணி
பாட்டும் அதன் இசையும் பெரும் பங்கேற்கின்றது
உண்மைதான். ##
திரைப்படத்தில் என்று சொல்லும்போது நீங்கள் சொல்வது சரி . ஆனால்நான் சொல்வது திரைப்படத்தை அல்ல நேரடி கலை நிகழ்ச்சிகளை . அத்தகையா நிகழ்ச்சிகளில் பாடகர்கள் , இசையமைப்பாளர்கள் , அறிவிப்பாளர்களின் பங்களிப்பை விடநடிகர்களின் பங்களிப்பு குறைந்து காணப்படுவதையும் , மக்களை பெரியளவில் நடிகர்களால் ஈர்க்க முடியாது போனமையையும் பலநிகழ்ச்சிகளில் மக்கள் நன் குணர்ந்திருக்கிறார்கள் .
அதனால்தான் கமல் , விஜய் போன்றநடிகர்கள் வந்திருந்தாலும் வந்திருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருந்திருக்காது என்று குறிப்பிட்டேன்..