தமிழ் பெற்றோர் தமது பெண்குழந்தைகளுக்கு முதல்தடவையாக மாதவிடாய் ஏற்படும் போது அதனை மாபெரும் களியாட்ட விழாவாகக் கொண்டாடுவது வழமை. புலம் பெயர் நாடுகளில் இவ்விழாக்களை உலங்கு வானூர்திகளில் கொண்டாடும் அளவிற்கு ஊதாரித்தனம் வளர்ச்சியடைந்துள்ளது. இதனைச் சுற்றி புலம்பெயர் நாடுகளில் ஒரு வகையான கலாச்சாரம் வளர்க்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழ்ப் பெற்றோர்கள் தமது நிலப்பிரப்புத்துவப் பிற்போக்குக் கலாச்சார விழுமியங்களைப் பேணுவதற்காக நவீனத்துவ வசதிகளையும் பண வெறியையும் தாம் வாழும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலிருந்து கடன்வாங்கிக் கொண்டு இந்த விழக்களை நடத்துவதற்கு எதிரான உணர்வு இளைஞர்கள் மத்தியில் சிறிய அளவிலாவது ஏற்படுகிறது என்பதற்கு கீழ்வரும் காணொளி உதாரணம்.
மகளுக்கு எப்போ மாதவிடாய் வரும் என காத்திருக்கும் தந்தை அதனை கலாச்சாரம் என பேர்வைத்துக்கொள்கிறார். முதலாளித்துவ நாடுகளில் வாழுகிற குடும்பிகட்டிய ஆண்ட பரம்பரை இவர்கள். ஜெர்மனியில் தகப்பன் வற்புறுத்தி கல்யாணம் செய்து வைத்த பெண் டிவோர்ஸ் எடுத்த பிறகு அவரது குழந்த்தைகளையும் அவரையும் ******
வயந்தா நீர் ஆணா பெண்ணா? தந்தைமார் எப்போதும் அதனை தட்டிக்கழிக்கத்தான் பார்ப்பார்கள். தாய்மார்தான் இதனை முன்னின்று நடத்துவது.
Hey,Your mind is coruppted, first educate yourself about cultures. ceremonies intend to bring joy to the families and freinds. even bring extrange families togerther. you argue it’s expensive to celebrate . have you ever thought to stop your birthday party orstop going to club.? have ever asked anyone to stop spending on weddings.are you teaching this puperty ceremony to your non tamil speaking folks? please ask them what hek is the gay mariage and lesbian marriage. don’t you think this gay and lesbian things are disgusting?
இவ ஒரு தமிழ் பெண் அல்ல !!! தன்னை பெரிய புடுங்கி என்று காட்ட செய்யும் வேலை இது .. எமது கலாச்சாரத்தில் பல குறைபாடு உண்டு அதில் இதுகும் ஒன்று .. ஆனால் இதை ஆங்கில மொழியில் விற்பனை செய்வது ****
மகளுக்கு எப்போது மாதவிடாய் வரும் என இலவு காத்த கிளிபோல காத்திருக்கும் குடும்பிகட்டிய அப்பன்களில் நீங்களும் ஒருவர் போல…
It’s no big deal. The girl wants a forum to speak up and she does so. Who are we to interfere in the personal preferences of others? People spend big money on weddings, birthdays and even at funerals, remember those expensive coffins? Expensive function halls have cropped up in SL too, serving food on plates with cutlery. I am glad we have progressed in some things like washing our hands with soap after cleaning our butts. If you ask some of those here they will tell that too is wrong.
இதை இவர் தமிழில் எம்மவர் மத்தியில் சொல்லிஇருந்தால் இவளுக்கு ” பாரட்டுக்கள் தங்கை ” சொல்லி இருப்பேன்.. ஆனால் இவர்கள் அந்நிய மொழியில் எம் கலாச்சாரம் விற்க வந்தவர்கள்.. தவறை சொல்லும் போதும் கொஞ்சம் இன உணர்வு தேவை
Why can’t you translate it and tell them. If the girl dosn’t know Tamil she shouldn’t speak up ?
இலங்கை போன்ற உள் நாடுகளில் இப்படியான பிற்போக்கு கலாச்சாரம் இல்லாமால் போய் வருகிறது. புலம் பெயர் நாட்டு தமிழர்கள் 25 வருட கழிவுகளின் நினைவோடை தான் வாழ்கிறார்கள். அதனால் தான் இப்படி இருக்கிறார்கள். இதே போல தான் குஜராத்திகளும், முஸ்லீம்களும்… இலங்கையில் போராட்டம் நடப்பதால் இந்த பிற்போக்கு தனத்திலிருந்து விடுபட முடியும். ஆனால் அந்புத பிற்போக்குத் தனம் தான் மக்களைச் சுரண்டி வியாபாரம் செய்வதற்கு புலம்பெயர் கயவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
தமிழில் சொல்லியிருந்தால் பலரை சென்றடைந்து இருக்கும். தற்போதுள்ள இளம் தலைமுறை இவற்றில் இருந்து விடுபட்டு விடும். தங்கள் பிள்ளைகளுக்கு இப்படி செயய மாட்டார்கள்.
This culture not only with migrated Tamils.In North & south Tamil nadu people spent lot of money on this occassion.Now a days people has lot of money with out knowing how to save & spent in reasonable way.And also the migrated Tamils not having any social recreations so for any reason /occassion they want to celebrate something.Even death ceremonies celebrated in a grand manner in tamil nadu.
So we have to invent something new to celebrate and show our muscles?.
I think we don’t need any,just we have to stop this stupidities once and for all.
Are this people fought a war of independence for thirty years?
no one to believe,
What a shame we are.
puberty ceremony celebrated in France, no offence, found in youtube https://www.youtube.com/watch?v=YMsegQIpn2s
Thank you so much friend,
you must keep on exposing this kind of cultural backwardness of our community, keep it up!!
please think dads, who waits for the daughters of get the 1st time period to celebrate the event and collect money!
I love the following one of yours:
http://youtu.be/UCgoKSyXr1A
கலாசாரம் பண்பாடு அடையாளங்கள் என்பது அறிவியல் அடையாளங்கள் அல்ல. சில அறிவியலாகக் காட்டப்படலாம். அவை தொன்மைகளை இனங்காண இன்றும் காவப்படுபவை. காலத்தால் அவற்றை களைந்து எறிதல் என்பது இலகுவானது. ஆனால் காலத்தால் அழிந்ததை தேடல் என்பது மிகக் கடினமானது. கலாசாரம் பண்பாடு என்பது மனித ஆளுமையில் திறனில் செல்வாக்குச் செய்யாது அவனின் மன மகிழ்வோடு சம்பந்தப்படும் போது அதைக் காலத்துக்கும் காவுவதால் எந்தத் தீமையும் இல்லை.
பிரித்தானியா கூட பழமை பேணும் ஒரு நாடாக விளங்கிறது. ராணி.. அவரின் இருப்பு மாளிகை இவை எவையும் இன்றைய நடைமுறை உலகுக்கு அவசியமில்லை. இருந்தாலும் தக்க வைத்துள்ளனர். அப்படிப் பல நாடுகளிலும் பல உள்ளன.
மேற்குலகில் கூட மக்கள் பேய்களின் பண்டிகைகள் கொண்டாடுகின்றனர். கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றனர், ஈஸ்ரர் கொண்டாடுகின்றனர். மரணச் சடங்கு செய்கின்றனர். ஏன் சும்மா கொண்டு போய் புதைச்சால் புதைபடாத. எரித்தால் எரியாதா. ஏன் புதைக்க வேண்டும்..????!
யாரும் கேட்க முடியுமா.. ஜேசு உயிர்ந்தெழுந்ததுக்கு சான்று என்ன.. விஞ்ஞான விளக்கம் என்ன…ஜேசு உயிர்த்தெள என்ன குளோனிங் படிச்சவரா.. தன்னைப் போல இன்னொருவரை உருவாக்க..எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்… இப்படியென்று. இவற்றுக்கு விடை இல்லை என்று தெரிந்தும் கேட்பது ஒரு வகை மூடத்தனமே. இப்படிக் கேட்டு விட்டதற்காக மக்கள் தங்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுதல் ஈஸ்ரர் கொண்டாடுதல் என்ற கலாசாரம் கலந்து வெளிப்படத்தக்க மத நிகழ்வை முடிவுறுத்தப் போவதில்லை. காரணம்.. அதில் மக்களைப் பொறுத்தவரை செலெப்ரடிஒன் fஒர் fஉன் என்று அமைந்திருக்கிறது.
மக்கள் அந்தக் கொண்டாட்டங்களை அறிவியலாக்க முனையவில்லை. அதை கலாசார எல்லைக்குள் வைத்துக் கொள்கின்றனர்.
இங்கு சிலர் கலாசார மட்டத்துக்கும் சமூக அறிவியல் மட்டத்துக்கும் இடையில் வேறுபாடு புரியாமல்.. ஆட்டுக்குள் மாட்டைக் கலக்கும் வேலையைச் செய்கின்றனர். எல்லாச் சமூகங்களிலும் சில மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை மக்களின் ஆளுமை திறன் ஒற்றுமை ஒழுக்கம் நாகரிகம் இவற்றைப் பாதிக்காதவரை அவர்களின் மன மகிழ்வுக்கு என்று அனுமதிக்கப்படுகின்றன.
அதேபோல் தான்.. செலெப்ரடிஒன் fஒர் fஉன் என்ற எல்லைக்குள் மக்கள் பூப்புனித நீராட்டு விழாவை நடத்தலாம்.. திருமணத்தை நடத்தலாம்.. அவற்றில் தங்களுக்கு என்று சில தனித்துவங்களைக் காட்டி.. தங்கள் சுல்டுரல் fஉன் அவை என்று அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.
பூப்புனித நீராட்டு விழாவில் படம் பிடிப்பதால்.. பெண் ஒன்றும் உருக்குலைந்து மடியப் போவதில்லை. பூப்புனித நீராட்டு விழாவில் ஆண்கள் பார்த்து விடுவதால்.. அவள் மானம் இழந்து விடப் போவதில்லை. சங்கடமான சூழலுக்குள் அவள் பலருடன் கூடி ஒரு மன மகிழ்வைப் பெற செய்யப்படுகிறாள். அதுதான் அங்கு நோக்கமே தவிர.. அதற்கு ஆயிரம் மூடநம்பிக்கைகளால்… சோடணை வழங்கி.. அதை நிராகரிக்க முனைவது என்பது ஒன்றும் சாதனையன்று.
நிச்சயம் கலாசார அடையாள மன மகிழ்வு என்ற வகைக்குள்.. இதைத் தொடரலாம். அதில் தவறுகள் இருக்க வாய்ப்பில்லை. அதில் மன மகிழ்வல்ல… மன குழப்பம் என்று நினைப்பவர்கள்.. இதைச் செய்ய சந்தர்ப்பம் அற்றவர்கள் பேசாமல் விடலாம். அதற்கும் எங்கும் தடையில்லை. அதற்காக எவரையும் பெண் இல்லை என்று கருதப் போவதும் இல்லை. இப்படியான ஒரு பெரிய முக்கியமற்ற ஒன்றுக்கு… பெரிய தோற்றம் காட்டுவது.. யாழில் தொடர்கதை. கடந்த 10 வருடங்களில் இது பல தடவை இங்கு விவாதிக்கப்பட்டும்.. பலன் “0”.
யாழ் இணையத்திலிருந்து கள்வெடுத்தது மன்னிக்கவும் பிரதி எடுத்தது.
30 வருடங்களாக இரத்தம் சிந்திய ஒரு இனம் இன்னும் விடிவின்றி தவிக்கும்போது அதற்காக கனடாவின் பெரும்போக்குவரத்து வீதியையே மறித்து போராட்டம் செய்த தமிழ் உணா்வாளா்கள் லிமோசின் சொகுசு வாகனத்தில் தமது மகள்களை அழைத்து செல்லும் காட்சியையும் விடுதலைக்காய் உயிா்நீத்த வீரா்களின் விதைவைகள் ஒரு நேரம் உண்ண வளியின்றி தவிக்கின்ற காட்சியையும் பாா்க்கின்றபோது எதற்காக நமக்கு விடுதலை என்று எண்ணத்தோன்றவில்லையா?
அடுத்தவன் எதை பிடிக்கிறான் எதை விடுகிறான் என்பதை விட்டுவிட்டு நமக்கு இப்போது எது தேவை எது தேவையில்லை என்பதை உணா்ந்து வாழ முற்படுவதே முக்கியம் அது காலத்தின் தேவையுமாகும் அதை விட்டு சும்மா தத்துவம் பேசி முட்டாளாக்க முற்படாதீா்கள்.
பூப்புனித நிராட்டு விழாவால் பிள்ளைகள் மகிழ்ச்சி அடைகிறாா்களா??
பெரும்பான்மையான சிறுமிகளுக்கு தம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்றே புாிவதில்லை அத்தோடு அடுத்தவாின் விழாவில் பங்குபற்றிய சிறுமிகள் அங்கே சிறுமி ஒருவா் கெளரவிக்கப்படுவதை பாா்த்து தம்மையும் அப்படி எல்லோரும் கெளரவிக்கவேண்டும் என்று அடம் பிடிப்பதாலும் மற்றும் சிலா் கொடுத்த பணத்தை வாங்குவதற்கு வளியின்றி இதைப்பயன்படுத்துகின்றாா்கள்.
Collecting what you’ve paid others , it can apply to birthday parties etc. too. The girl won’t know what’s going on, again do you think a child knows what’s going on on it’s 1st birhday ? All your objections are debunked here, what do you say now ?