இலங்கையில் பேரினவாத அரசால் அழிக்கப்படும் கலை பண்பாட்டு விழுமியங்களின் எச்சங்களை தென்னிந்திய சினிமாக் கலாச்சாரத்தால் மனோநிலை பாதிப்படைந்த கூட்டம் ஒன்று அழிக்க முன்ற்படுகிறது. சுய நிர்ணய உரிமைக்காக ஆயிரமாயிரமாய் தியாகிகளைத் தாரைவார்த்துக்கொடுத்த வடக்கிலும் கிழக்கிலும் இதுவரை புரட்சிகரக் கலாசாரம் துளிர்விடக்கூட இல்லை. தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளையும், அரசியல் கதாநாயகர்களையும் நம்பியிருந்த அரசியல் தலைமைகள் சினிமாக் கூத்தாடிகள் விஜை அஜித் போன்றவர்களை இரட்சகர்களாக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் விஜை கதாநாயகனாக நடித்த வன்முறைக் குப்பையை விமர்சித்ததற்காக உதயன் பத்திரிக அலுவலகம் முன்பதாக ஒரு குழு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இலங்கை அரச விமான ஊர்த்தியில் உலாவந்த இந்த சினிமாக் குப்பைகளின் புலம் பெயர் முகவர் ஐங்கரன் உரிமையாளர் கூட எதிர்பார்த்திராத ‘தேசியத்’ திருப்புமுனை இது. முப்பது வருடப் போராட்டத்தின் ஒரு பகுதி பல்தேசிய நிறுவனங்களதும் வியாபார வெறியர்களது கைகளில் அகப்பட்டுக்கொள்ள மறுபகுதி அப்பாவிகளுக்கு சினிமாக் கூத்தாடிகளைக் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
agree with your comments,
Srimanoharan. Agree with what. We are closer to Kerala than the Tamil guys there. A Konkunadu out of the six districts is good for all and the rest of the Tamil Nadu. Telungana.
இதை முளையிலேயே கிள்ளிவிடவேண்டும் இல்லையேல் யாவுமே வீணாகிவிடும்.ஒரு அருவருப்பான உண்மை என்னவென்றால் புலம்பெயா் வீரா்கள் பலரும் இதை மனோபாவத்திலேயே வாழ்கின்றனா்.
Sri Lankan Tamil Diaspora is indeed and important global society. They must know their local and global responsibilities.
Living with Freedom and living in handout are two different things.
The Occupied Homeland, have all the distracting elements, which
are working for the Ruling Colombo mafia.
Let us plant the seeds of sanity everywhere, in growing the common
sense to work for the freedom of Tamil homeland with Human rights.
It is a lifelong walk. let us start now.
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் சிறு பையன்களைப் போல் இருக்கின்றனர். ஒரு ஆரம்பமாக இத்தகைய சிறு போராட்டங்களைத் தொடங்கித் தமது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ள முயல்வதை சரியானவழியில் நெறிப்படுத்துவதே இன்றுள்ள தேவையாகும். பல ரசிகர் மன்றங்கள் சமுதாய சேவைகளையும் செய்கின்றன. சினிமாக் கூத்தாடிகளென்று ஒட்டுமொத்தமாக இகழ்வது ஓர் மூன்றாந்தர அணுகுமுறையைக் காட்டுகின்றது. இத்தகைய சொற் பிரயோகங்கள் தவிர்க்கப்படவேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவும் தமிழிசையும் உலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்து வருகின்றன. தமிழனை, தமிழை அடையாளப்படுத்துவதற்கும் இவை துணைபோகின்றன. எல்லாவற்றிலும் நல்லதும் தீயதுமுண்டு. அடியோடு தமிழ் சினிமாவை நிராகரிப்பதும் மக்களெல்லோரும் போர்க்குணத்தோடு அரசியலில் ஈடுபடவேண்டுமென வாதிப்பதும் பெரிய புரட்சிகர உணர்வாகத் தெரியவில்லை. எதிலும் மிதமான போக்கே இனிச் சரிவரும். ஏனெனில் நாம் நிறையப் பாடங்களைக் கற்றிருக்கிறோம்.
இன்றய குப்பைகொட்டும் சினிமாவை வைத்துத்தான் தமிழை உலகெங்கும் பிரசித்தம் செய்யவேண்டுமென்றால் தமிழ் என்ன பாவம் செய்ததோ நாமறியோம். இன்றய தழிழ் சினிமாவை பார்ப்பதும் அதன் மூலம் அறிவை வழா்த்துக்கொள்வதும் அவரவா் தனிப்பட்ட விடயம் ஆனால் வியாபாரத்திற்காக தயாரிக்கப்படும் இந்த சினிமாவை வாழ்க்கைக்கு பாடம் புகட்டும் விடயமாகவும் மொழி,கலாச்சாரத்தை கட்டிக்காக்கும் ஊடகமாகவும் நம்பவைக்க முயல்வது அறியாமையேயன்றி வேறெதுவுமில்லை.
சினிமா ஓர் வியாபாரமென்பதும் பல தமிழ் சினிமாக்கள் குப்பை கொட்டுவனவென்பதும் புதிதாக அறிவுறுத்தப் படவேண்டிய விடயங்களல்ல அது ஏற்கனவே தெரிந்தவொன்றுதான். இயல் இசை நாடகமென்னும் முத்தமிழ்களுள் நாடகம் இன்று விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினால் சினிமா வடிவத்தைப் பெற்றிருக்கிறது. அதை அடியோடு நிராகரித்து விட்டு நாம் எங்கே போகப்பேகிறோம் தமிழ் வளர்க்க? பழையபடி கூத்துக்கா? அதுவும் இப்போது சினிமாவினால்த்தானே மெருகூட்டப்படுகின்றது.
தமிழகத்திலும் உலகெங்கிலும் பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்களின் ஜீவனோபாயமாக தமிழ் சினிமா இருக்கின்றது. சினிமாவை நிராகரித்தால் இவர்களெல்லாம் எங்கே போய் முட்டிக்கொள்வது? சினிமா வாழ்க்கைக்குப் பாடம் புகட்டுகிறதோ இல்லையோ பலரின் வயிற்றுக்கு உணவு புகட்டுகிறது.
தற்போதைக்கு நாடகத் தமிழில் சினிமாவுக்குப் பதிலீடான வினைத்திறன் மிக்க தெரிவுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனாற்தான் அதனை முற்றாக நிராகரித்துவிட முடியாது என்கிறேன். அதற்காகவும் சிலர் வாழ்வதை, வாதாடுவதை, போராடுவதை இமாலயத்தவறாகக் கொள்ள முடியாதென்கிறேன்.
Karu அவா்களே நான் சினிமாவை முற்றுமுழுதாக நிராகரிக்கும்படி கூறவில்லை, தமிழ் உலகிற்கு பொழுதுபோக்குவதாக மட்டும் நில்லாது முற்போக்கான சிந்தனையை உருவாக்கக்கூடிய ஒன்றாகவும் தமிழ் சினிமா இருக்கவேண்டும் ஆனால் இன்றய சினிமாத்துறை எதை உற்பத்தி செய்கிறது அதை நான் கூறி நீங்கள் அறியவேண்டியதில்லை.மற்றது பத்து இலட்சம் மக்களின் ஜீவனோபாயமாக சினிமா இருக்கின்றபடியால் அவா்கள் எதை உற்பத்தி செய்தாலும் எட்டுகோடி உலக தமிழ் மக்களும் எத்தனை சீரழிவுகள் வந்தாலும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்பது எப்படி இருக்கின்றதென்றால், புற்றுநோய் ஏற்பட்டாலும் பரவாயில்லை புகைத்தலை நிறுத்தாதீா்கள் ஏனெனில் அந்த தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பல இலட்சம் பேரது ஜீவனோபாயம் பாதித்துவிடும் என்பதுபோல் உள்ளது.
நண்பரே!
புகையிலை உடல் நலத்திற்குக் கேடாகலாமென்னும் புள்ளிவிபரவியல் முடிபுக்காக அரசு புகையிலை உற்பத்தியையும்> வர்த்தகத்தையும் தடைசெய்திருக்கிறதா? இல்லையே! அது ஏனென்று நான் விளக்க வேண்டியதில்லை. புரட்சிக் கலாச்சாரம் அல்லது கலாச்சாரப் புரட்சியை (அது என்னவென்று நானறியேன். பெரும்பாலும் நமது ஊர்களிலுள்ள குஞ்சப்பு> அல்லது மாமன் முறையான பெட்டிக்கடை முதலாளிமாரையும்> ஒற்றைப் பரப்பு விவசாயிகளையும் கழுத்துகளில் கயிறு போட்டு இழுத்துவந்து பூர்ஷ்வாக்களை ஒழிப்போமென்ற கோஷத்தோடு நடுச் சந்திகளில் சுட்டுக்கொறுவிட்டு> பிச்சைக்கார ஊர்க்கோவில் கல்லுச் சிலைகளையும் மரத்தடிப் பிள்ளையாரையும் உருட்டித்தள்ளிவிட்டு உண்டியல்களைத் து}க்கிக்கொண்டு போவதாக இருக்கலாமென எண்ணுகிறேன.;) விரும்புகின்ற நீங்கள் புகையிலை விவாசாயிகளையும் சுருட்டு வியாபாரிகளைம் கன்னாபின்னாவென்று திட்டித் தீர்க்கவும் சுட்டுக்கொல்லவும் சமூகம் இடங்கொடுக்க வேண்டுமென எதிர்பாக்கிறீர்களா? அதேபோல> தென்னிந்திய சினிமாக்காரனைக் கன்னா பின்னாவென்று திட்டித் தீர்த்து என்ன சமூகப் புரட்சியை நிலைநிறுத்தப் போகிறீர்கள். விடுதலைக்காகப் போராடி மண்ணில் வீழ்ந்துகிடக்கும் எமது சமுதாயத்தின்மேல் யாரும்வந்து குதிரையோடலாமென எண்ணமுடியாது. திசைதிருப்பப்பட முடியாதவாறு எமது தேசியவுணர்வு வளர்த்தெடுக்கப்படுவதற்கு முளையிலேயே கிள்ளியெறியப் படவேண்டியவை இந்த உள் நோக்குக்கொண்ட புரட்சிக்கலாச்சார மனோபாவம்தானேயன்றி எமது கலையும் கலாச்சாரமுமல்லவென்பதைத் தயவுசெய்து உணர்ந்துகொள்ளுங்கள். If you are genuine in publishing all type of relevant views publish this comment as well.
Karu your are right. Tobacco is bad. So is alcohol. Both have been with the human beings for a very long time.
Ceylon Tobacco Company PLC engages in the manufacture, marketing, and export of cigarettes. It offers its products primarily under the Dunhill, Pall Mall, John Player Gold Leaf, Three Roses, Capstan, and Four Aces brand names. The company was incorporated in 1932 and is headquartered in Colombo, Sri Lanka. Ceylon Tobacco Company PLC is a subsidiary of British American Tobacco Holdings (Sri Lanka) BV.
Established in April 2010, under the able leadership of Dr. A. Keetheswaran, Regional Director of Health Service, the DTCC Jaffna has performed exceptionally well among the DTCCs. It has undertaken many initiatives aimed at tobacco and alcohol control within the district that include stringent law enforcement and community empowerment programmes. In addition, with the support of the district agriculture officials, it has promoted a programme encouraging farmers from cultivating alternative crops in lieu of tobacco.
The Tamil translation of the NATA publication “Impact of tobacco vs. alternative crop cultivation on the socio-economic status of farmers” was launched recently at the Public Library Auditorium Jaffna. This event was attended by Provincial Secretary of Health Mr. R. Raveenthiran, Provincial Director of Health Dr. Ms. S.R. Jude, Actg. Provincial Director of Agriculture Mr. S. Sivakumar, WHO Jaffna Coordinator Dr. N. Sivarajah, NATA-Bloomberg Project Coordinator Dr. Prasanna Cooray and the district agriculture, agrarian services and health officials. Dr. Prasanna Cooray presented the findings of the NATA’s research. The research has shown that tobacco cultivation is neither a viable nor a sustainable form of agriculture. It causes numerous social and economic hardships for the farmers in addition to many environmental consequences. Northern province Director of Agriculture Mr. Sivakumar made an elaborative presentation of viability of alternative crops as substitutes for tobacco in the province. He pointed out grapes and onions as the most profitable forms of alternative crops in the province.
At a simple ceremony that followed the RDHS office Jaffna felicitated the traders who refrained from or gave up selling cigarettes and other tobacco products at their shops following DTCC’s persuasion. (http://www.nata.gov.lk/index.php?option=com_content&view=article&id=131:jaffna-lauds-traders-who-dont-sell-cigarettes-offers-grapes-and-onions-as-viable-alternatives-to-tobacco-&catid=1:latest-news)
On the issue of cigarettes in SL we have to give credit to the successive govts. In SL you cannot smoke in public places, the prices are prohibitively high, and you cannot find places where they sell them easily anymore. These good deterants for smokers that seem to work now.