அண்மையில் ஜெயந்தன் தர்மலிங்கம் என்ற முன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் பிரான்சில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவரது அரசியல் தஞ்சக் கோரிக்கை நிலுவையில் உள்ள காரணத்தினால் அதன் முடிவு வெளியிடப்படும் வரைக்கும் அவரைச் சட்டரீதியாகக் கைதுசெய்ய இயலாது என அவரின் சட்டத்தரணி திரு.ஜக்மான் கால அவகாசத்தைப் பெற்றுள்ளார். ஜெயந்தன் மட்டுமல்ல ஐரோப்பாவை நோக்கிவந்த ஆயிரக்கணக்கான போராளிகள் பல்வேறு காரணங்களுக்காகத் தெருக்களில் விடப்பட்டுள்ளனர். பலர் தண்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர்.
ஐரோப்பாவிலும் ஏனைய மேற்கு நாடுகளிலும் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்ட பலர் அடிப்படை வாழ்வாதரத்தையே உறுதிப்படுத்த முடியாத நிலையிலுள்ளனர். தமிழர்களின் வியாபார நிறுவனங்களில் அடிப்படை ஊதியத்திற்கும் குறைவான பணத்திற்கு வேலைசெய்யும் பலரின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது.
கால்கள் பொருத்தப்பட்டு பல இன்னல்கள் ஊடாக ஐரோப்பிய நாடு ஒன்றிள் தஞ்சமடைந்த பெண்போராளி ஒருவர் அடிப்படைச் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட வாய்ப்பற்ற நிலையிலிருப்பதாகக் கூறுகிறார்.
இன்னொரு முன்னை நாள் போராளியுடன் பேசிய வேளையில் ஒரு நாளைக்கு ஒருதடவையே உணவருந்துவதாகக் கூறுகிறார். ஐரோப்பிய நாடு ஒன்றில் புலிசார் அமைப்புக்கள் ஈழம் பிடித்துத்தருவதாகக் கூறும் தேசத்தில் இவர் பலரைத் தொடர்புகொள்ள முயற்சித்து தோல்வியடைந்துள்ளார். புலி அடையாளத்தையும் பிரபாகரனையும் வைத்துப் பிழைப்பு நடத்தும் புலம்பெயர் பினாமிகள் இதுகுறித்துத் துயர்கொள்வதில்லை.இணையத்தளங்களைத் திறந்தால் கொல்லப்பட்டவர்களுக்கு இரத்த அஞ்சலி செலுத்தும் உணர்ச்சி வியாபாரம் வியாபித்துக்காணப்படுகிறது.
ஜெயந்தனைப் போன்று சர்வதேச உளவு நிறுவனங்களின் பிடிக்குள்ளும் போர்க்குற்ற அச்சத்திலும் வாழ வேண்டிய நிலைக்குப் பலர் தள்ளப்பட்டுள்ளனர். எப்போதும் மரணிப்பதற்குத் தயாராக கழுத்தில் சயனைட்டுடன் வாழ்ந்த போராளிகள் மீது போர்க்குற்றம் சுமத்த முடியாது என்பதையும் சர்வதேச போலிஸ்படைகளால் தேடப்பட முடியாது என்பதையும் பொதுப் புத்தியாகக் கட்டமைக்க வேண்டும்.
பொதுவான தளம் ஒன்றில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் முன்னை நாள் போராளிகள் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உரிமை அமைப்புக்கள் மட்டுமன்றி ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இந்த விடயம் குறித்து அணுகப்பட வேண்டும். ஐரோப்பிய ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றிற்கு முன்வராத பிழைப்பு வாதிகள் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும். போராடுவதற்கு இணைந்தவர்களோ இணைத்துக்கொள்ளப்பட்டவர்களோ போர்க்குற்றங்கள் இழைப்பதற்காகச் செல்லவில்லை. அரசியல் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக ஆயுதம் ஏந்தியவர்கள். இவர்கள் ஆயுதம் எந்தியதற்கு இலங்கைப் பேரினவாதப் பாசிஸ்டுக்களே காரணம் என்பது சொல்லப்பட வேண்டும்.
முதலில் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள் ஐ.நா சபையின் ஆலோசனையின் பேரில் சிங்கள அரசின் ஆசை வார்த்தையின் பேரில் எல்லாரும் சரணடைய வைக்கப்பட்டனர்.அவ்ர்களாக சரண் அடையவில்லை.அதனால் ஐ.நா பார்த்துக்கொள்ளும் என்ற திட்டத்தில் புலிகள் சரணடையும் போராளிகளுக்கு என எந்த முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.(போராளிகளிடம் இருந்து சயனைற் குப்பிகளை திருப்பி வாங்கியதைத் தவிர)ஐரோப்பாவில் புலிகள் இருந்தால அந்தப்பணத்தைக் கையாள ஒரு குழு இருக்கும் என்பது என் நினைப்பு. அவர்களுக்கு 2009 மே ல் கிடைத்த ஆலோசனப்படிதான் அவர்களால் இயங்க முடியும் என நான் நினைக்கிறேன்..அவர்களாக தாந்தோன்றித்தனமாக செய்ய அவர்கள் ஒன்றும் இந்திய அரசியல்வாதிகள் அல்ல.கட்டுப்பாடான புலிகள் அமைப்பு. பின் ஒரு காலத்தில் கணக்கு வழக்கு என ஒரு பிரச்சனை வர இருக்கிறது.இது உறுதி.மீண்டும் சொல்கிறேன் இது உறுதி.அப்போது பணத்தை கணக்கு காட்ட வேண்டியவருக்கு விசாரணைக்கு முகம் கொடுக்காமல் இருக்க செய்ய உங்களால் முடியும் என்றால் நோர்வே யில் இருக்கும் நெடியவன் குழுவிடம் உதவி செய்யச் சொல்லி கேட்டுப்பாருங்கள்.
பணம் நோர்வே இல் உள்ள நெடியவனிடம் வாங்கலாம் கோத்தவிடமும் வாங்கலாம் கே .பி, போன்ற அள்ளக்கைகளிடமும் வாங்கலாம். தலைவர் வருவார் அது வரை பணத்தை திறக்கமுடியாது எனக் கூறுவது போல் உள்ளது செல்வசுந்தரம் சிவாவின் பின்னூட்டம் அதனால் நெடியவனிடம் கேளுங்கள் எனக் கூறுகிறார்.
நான் நினைக்கிறேன் கோத்தாவிற்கு இன்னும் நெடியவனை மாத்திரம் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை என்பது சிவாவின் பின்னூட்டத்தின் மூலம் தெரிகிறது.
நெடியவனிடம் எந்த முற்போக்கு சிந்தனையும் இல்லை என்பது வேறு விடயம்
பிரித்தானிய தமிழர் பேரவையிடம் சில ஆர்வலர்கள் தமிழ் இனப் படுகொலை குறித்த முறைப்பட்ட ஆவணங்கள் இருக்கிறதா (காணி அபகரிப்பு, மனிதப் படுகொலைகள் பற்றியவை) தங்களிடம் இல்லை என்கிறார்களாம் அவற்றை ஆவணப் படுத்த நடவடிக்கை எடுக்கிறீர்களா எனக் கேட்டால் போதிய பணம் இல்லை என்கிறார்களாம். சரி மாவீரர் தினத்திற்கு பெருமளவு பணம் செலவளிக்கிறீர்களே அந்தப் பணத்தை தமிழ் மக்கள் மீது நடத்தப் பட்ட நடத்தப் பட்டு கொண்டிருக்கிற இனப் படுகொலையை ஆவணப் படுத்த பயன் படுத்த முடியுமே எனக் கேட்ட போது உயிருக்கு விலை பேசமுடியாது எனக் கூறியிருக்கின்றனர்.
ஆக மாவீரர் தினம் மிகப் பிரமாண்டமாக பணச் செலவு செய்து கொண்டாடுவதில் உள்ள முக்கியம் மட்டுமே தமிழ் மக்களின் விடிவை பெற்றுத்தரும் என BTF நம்புகிறதா? என்ன புரட்சிகர அறிவியல் அரசியல் இவர்களிடம் இருக்கிறது பாருங்கள்.
மாதன முத்தாக்களின் வாரிசுகள் உண்மையில் சிங்களவர்கள் அல்ல, சாட்சாத் தமிழர்கள் தான் (எல்லாத் தமிழர்களும் அல்ல) இவர்களால் ஒரு தும்பையும் நகர்த்த முடியாது. வெறும் இணையத்தில் மக்களை மடையர்களாக்கி பணம் சம்பாதிப்புடன் மட்டுமே நடக்கும்.
கோத்தாவுக்கு கூசா தூக்க நாம் நெடியவனை வைவோம் , BTF ஐ வைவோம் எல்லோரையும் வைவோம் ஈழத்து மண்ணின் அவலங்களை காட்டி பணம் பறிப்போம் அல்லது வயிறு வளர்ப்போம்.
பாதிக்கப்படும் போரளிகளைப் பற்றிக் கதைப்பதக்குப் பதிலாக யார் காசு சுருட்டினது என்று கதைக்கிறீர்கள். பன்னாடைக் கதை. நெடியவனிட்ட மட்டுமில்லை நிறைய பேரிடம் காசு இருக்கிறது. வினாயகம் குழு வெவ்வேற ஆட்களிடம் பதுக்கி இருக்கிறது. அது வேண்டாம். இப்ப போராளிகலுக்கு என்ன எசெய்யலாம் என்று யாரவது கதைக்கலாம்.
When the former LTTE carders were convicted for war crime or money collecting, BTF kept quiet including Shanthan’s case. Its now going happen in larger scales, noone will do anything,
போர்குற்றத்தையும், இனப்படுகொலையையும் ஆவணப்படுத்துவோம் அம்பலப்படுத்துவோம்அதன்மூலம்அடக்கிஒடுக்கப்பட்டதமிழ்மக்களின்உரிமையைவென்றெடுப்போம். போர்குற்றத்தில் யார்ஈடுபட்டாலும் அவர்களை அம்பலப்படுத்துவோம். https://www.facebook.com/photo.php?v=794452340580557
புலிப் பாசிசம் பேசுவோர் ஒன்றில் மகிந்தருடன் இணையுங்கள் அல்லது மக்கள் போராட்டத்தை ஆரம்பியுங்கள்.
இது தான் பாசிசத்தின் ஆரம்பம். முப்பது வருடமாக போராட்டத்தை அழித்து உரித்த கோழிபோல் தேசியத்தை தொங்கவிட்ட பிறகு இப்ப மகிந்த இடம் போ அல்லது மக்கள் போராட்டத்துக்கு வா என்றால் என்ன ஜார்ஜ் பூச் மாதிரி இருக்கு! முப்பது வருடம் போராடுகிறோம் என்ற பேரில் புலிகள் செய்த அழிவிலிருந்து திரும்பவும் மக்களுக்கு நம்பிக்கை தரவும் பல ஆண்டுகள் தேவை. மக்கள் போராட்டம் செய்வதற்கு என்ன தேவையோ அதை பலபேர் இப்போ செய்கிறார்கள். ஆனால் புலன் பெயர் தர்க்காவில் செய்யவில்லை அல்லது செய்ய மாட்டார்கள்.
மக்களுக்காக போராடிய புலிகளோ நாட்டைவிட்டு வெளியேறி பிச்சை எடுக்கிறார்கள் – புலிகளின் சம்பழத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து – புலம் பேயர் தேசத்தில் தனி ஈழம் கேட்ட பிணாமிகளோ – காலம் மாறி இப்போ மஹிந்தவின் கோடிக்கு முகாமிட்டுள்ளனர். இதற்கு சிறந்த உதாரணம் Tamilcnn கும்பல் – புலிகளுக்காக ஆடம்கடத்தல் செய்து கொமிசன் பணம் சம்பாதித்த இவர்கள் தப்பிவந்த புலிப்போராளிகளிடமே காசு கறந்துவிட்டு கப்பலில் கனடாவுக்கு அனுப்பினார்களாம் – இப்ப என்னடா என்றால் அதில யார் யார் போனவை என்று – சிறிலங்கா அரசிடம் பெயர் பட்டியலும் கோடுத்துள்ளார்களாம்.. இது கொடுத்ததால் **** கும்பலுக்கு இலங்கையில் சிறப்பு சலுகைகள் தரப்படுகிறதாம்…
சாந்தன்
Who told you all these? Why can’t you provide this information with some proof? Hearsay is only good for sensationalizing a topic.