பில்டர் பேர்க் குழுமம் (Bilderberg Group) தனது வருடாந்த ஒன்று கூடலை இந்தத் தடவை இங்கிலாந்தில் வாட்பேர்ட் (Watford) என்ற இடத்தில் நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1954 ஆம் ஆண்டு நெதர்லாந்து இளவரசர் பேர்னாட் இன் ஆதரவோடு அன்று உலகில் பெருகிவந்த கம்யூனிச மற்றும் தொழிலாளர் வர்க்க எழுச்சியைக் ஒடுக்குவதற்கான அரசியல் தந்திரோபாயங்களை வகுத்துக் கொள்வதற்காக நெதர்லாந்திலுள்ள பில்டர்பேர் விடுதியில் இந்தக் குழுமத்தின் கூட்டம் நடைபெற்றது. உலகில் அதிக பணம்படைத்த, அதிகாரம் படைத்த, செல்வாக்கு மிக்க நபர்களின் ஒன்றிணைவான குழுவான பில்டர் பேர்க் குழுமம். இவர்களே இந்த உலகம் எப்படி இயங்கவேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் பில்டர் பேர்க் குழுமத்தைச் சார்ந்தவர்களே.
கடந்த வருட பில்டர் பேர்க் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பட்டியலில், பில் கேட்ஸ், பில் கிளின்டன், ஜோர்ஜ் புஷ், ஜோர்ஜ் ஒஸ்பொர்ன், கெசிங்சர் ஆகியோர் உட்பட உலகத்தின் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்திய பலரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. உலகின் ‘மிகப் பிரதானமான’ நபர்களை ஒரே இடத்தில் இணைத்து ஊடகங்கள் அனைத்திற்கும் தடைவிதித்து மூடிய சொகுசு விடுதிகளில் நடைபெறும் இக்கொள்ளையர்களின் கூட்டத்தில் என்ன பேசப்படுகிறது என்பது கூட வெளியாவதில்லை.
உலகில் இனிமேல் எங்கு போர் நடைபெறப்போகிறது, யார் அழிக்கப்படப்போகிறார்கள் என்ற ‘கிரக நிலை’ இந்தத் தடவை வாற்பேட்டிலேயே தீர்மானிக்கப்படப்போகிறது. கடந்த தொடர்களில் கலந்துகொண்டவர்கள் சிலரின் பெயர்ப்பட்டியலை பிரித்தானிய வார இதழான இன்டிபெண்டன் தெரிவித்திருந்த போதும், கலந்துகொள்பவர்களின் பெயர்கள் இரகசியமாகவே பேணப்படுகின்றது.
மேலும்: