விரல்களை மடக்கி அழுத்திப்பிடிக்கும் இந்தச் சின்னத்தை எங்காவது பார்த்த நினைவுகள் உண்டா? அவ்வப்போது பார்த்த மாத்திரத்தில் மறந்து விடுகிறோம். வெனிசூலா அதிபர் ஹூகோ சாவேஸ் அதனை அமரிக்க நிதியில் இயங்கும் எதிர்ப்புரட்சிகர அமைப்பின் சின்னம் என்கிறார். அரபு நாடுகள் முழுவதும் துனீசியாவில் ஆரம்பித்து ‘புரட்சி’ நடைபெற்றது. அவையெல்லாம் அமரிக்கா தனது கைப்பொம்மைகளை ஆட்சியில் அதிகாரத்தில் அமர்த்துவதற்கு பெரும் பணச்செலவில் நடத்திய எழுச்சிகள்.
கணனி ஆலோசகர்கள், நிதி ஆலோசகர்கள், ஏன் பாதுகாப்பு ஆலோசகர்களைக் கூடப் பார்த்திருக்கிறோம். ஆனால் புரட்சி ஆலோசகர்கள் உலகம் முழுவதும் சுற்றிவரும் மில்லியனேர்களாகத் திகழ்கிறார்கள். ஸ்கைப்பில் கூட புரட்சிப் பயிற்சி வகுப்புக்களை நடத்துகிறார்கள். மக்களைத் தட்டியெழுப்பி ‘அமரிக்க ஆதரவுப் புரட்சி செய்வது’ எவ்வாறு என்பதை அவர்கள் பயிற்சி வகுப்புக்களாக நடத்துகிறார்கள். அமரிக்க அரசு மில்லியன்களை இவர்களுக்கு உதவியாக வழங்குகிறது.
இந்தப் புரட்சி வியாபாரிகள படு பிஸியாக இருப்பதாக அவர்களே சொல்கிறார்கள். ஒரு ஆலோசகர் ஒரு டசின் நாடுகளைக் கையில் வைத்திருப்பதாகச் சொல்கிறார். கீழ்வரும் காணொளியில் புரட்சி வியாபாரிகள் யார்யாரை தமது ஏஜண்டுகளாக உள் நாடுகளில் நியமித்துக்கொள்கிறார்கள் என்பது தெளிவில்லை. பிரபலமற்ற துணைகரமான புரட்சி பேசும் பலர் தேவைக்கேற்ப அணுகப்படுகிறார்கள். புரட்சியை உருவாக்க, அமரிக்க எதிர்ப்புப் புரட்சியானால் அதனை அழிக்க என்ற பல்வேறு குழுக்கள் புரட்சிகர முகத்தோடு உலா வருகின்றன.
சமூகத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய, புரட்சி வியாபாரம் எனத் தலைப்பிடப்பட்ட காணொளி இது.
Clenched Fist is the salute of the Fourth International convened by Leon Trotsky. The LSSP was part and parcel of that. These are now for the history books. Hugo Chavez is another Spanish speaking man looking for attention. Kind of Johnny Come Lately.