லிபிய அதிபர் கேர்ணல் முவமர் கடாபி கொல்லப்படுவிட்டார். இது வரைக்கும் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன்பெறாத நாடாகத் திகழ்ந்த லிபிய அதிபர் மேற்கின் சூழ்ச்சியால் அவர் பிறந்த நகரத்தின் தெருக்களில் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் கொன்று போடப்பட்டுள்ளார். ஆபிரிக்காவின் சிங்கமாகவும், கொடூரமான இத்தாலிய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து யுத்தம் செய்த ஒமார் முக்தாரின் மறு அவதாரமாகவும் தன்னைத் தானே வர்ணித்துக்கொண்ட கடாபியின் முடிவு ஏகாதிபத்தியங்களை இன்னொரு முறை உலக மக்களுக்கு நிர்வாணமாகக் காட்டியுள்ளது.
யார் கடாபி?
1969 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளில் கைப்பொம்மை போன்று செயற்பட்ட லிபிய அரசை சதிப் புரட்சியின் ஊடாக வீழ்த்தி ஆட்சிக்கு வந்தவர் கடாபி. அவ்வேளையில் வட ஆபிரிக்காவில் மிகப் பெரும் அமரிக்க இராணுவத் தளம் அமைந்திருந்த நாடு லிபியா.
லிபியாவை 1971 வரைக்கும் இராணுவத் தளமாக உபயோகிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கு சார்பு அரசிற்கும் அமரிக்காவிற்கும் கைச்சாத்தானது.
ஏவுகணைகளை பரீட்சிப்பதற்கும், எரி குண்டுகளைப் பிரயோகிப்பதற்கும் அழிவு ஆயுதங்களை வட ஆபிரிக்க நாடுகளில் வினியோகிப்பதற்கும் இப் பயிற்சித் தளம் அமரிக்க அரசால் பயன்படுத்தப்பட்டது.
1970 இல் கடாபி அரசால் அமரிக்கா அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.
1960 இல் லிபியாவில் பெற்றோலிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் மேற்கு நாடுகள் லிபியாவைக் கழுகுகள் போல வட்டமிட ஆரம்பித்துவிட்டன. மேற்கில் குடிகொண்டிருக்கும் பன்நாடு நிறுவனங்கள் லிபியா அரசோடும் கடாபியோடும் வியாபார ஒப்பந்தங்கள் செய்வதற்காக அத்தனை கதவுகளையும் தட்டியும் உதைத்தும் பார்த்தன. எதுவும் திறக்கப்படவில்லை. அமரிக்க ஐரோப்பியக் கொள்ளளைக் காரர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்திய அரசியல் நகர்வும் கடாபி ஆட்சிக்கு வந்ததும் நடைபெற்றது. லிபியாவின் அனைத்து வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. தனக்குநெருங்கியவர்கள் உட்பட அனைவருக்கும் கடாபி அரசு தனி உரிமையை மறுத்தது. இது மேற்கின் எண்ணைப் பசியை தற்காலிகமாகவேனும் மட்டுப்படுத்தியது. மேற்கு வல்லரசுகள் லிபியாவைக் கொள்ளையிடுவதற்கான வாய்ப்புக்கள் அனைத்தையும் இழந்து போயின.
தேசிய மயமாகலுக்கான செய்தி வெளியான இரவு விடிவதற்குள் கடாபிக்கு மேற்குலகம் மரணதண்டனை விதித்துவிட்டது. கடாபி அமரிக்காவினதும் ஐரோப்பவினதும் மன்னிக்க முடியாத நிரந்தர எதிரியாக்கப்பட்டார்.
சௌதி அரரேபியா பஹ்ரெயின் போன்ற நாடுகளின் எண்ணைப் பிரபுகள் தமது மில்லியன்களை அமைரிக்க ஐரோப்பிய வங்களில் பாதுகாப்ப்பாகப் பதுக்கி வைத்துக் கொண்டு அமரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் தேவைப்படுகின்ற போதெல்லம் இஸ்லாமியப் அடிப்படைவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுகின்றனர். கடாபி இஸ்லாமிய அடிப்படை வாதத்தை லிபியாவிலோ ஆபிரிக்க நாடுகளிலோ விரும்பியதில்லை. மேற்கின் கொள்ளைக்கான நிகழ்ச்சி நிரலுக்கு இது மிகப்பெரிய தடையாக அமைந்தது.
கடாபி எழுதிய “பச்சை நூல்” இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் மேற்கின் கடன் பெறும் ஜனநாயகத்தையும் நிராகரித்தது.
அண்மையில் அமரிக்க நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் 80 வீதமான அரேபியர்கள் அமரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தலையீட்டை வெறுப்பதாக கணிப்பிடப்பட்டது.
எண்ணை கண்டுபிடிக்கப்பட்ட மறு கணத்திலிருந்து கடித்துக் குதறப்படும் அரேபிய மக்களின் இந்த நீண்டகால வெறுப்புணர்வும் கடாபியின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் இணைந்து அவரை ஆபிரிக்காவினதும் அரபுநாடுகளதும் கதாநாயகனாக்கியிருந்தது.
லிபியா
லிபியா என்ற சிறிய நாடு தனக்குள்ளேயே தனது தேவைக்கும் அதிகமான வளங்களைக் கொண்டிருந்தது. மேற்கின் கொள்ளைக்கு உட்படுத்தப்படாததால் அவை லிபியாவினதும் ஆபிரிக்காவினதும் எல்லைக்குள்ளேயே நிலைகொண்டிருந்தது.
லிபிய மக்கள் பல நீண்ட ஆண்டுகளாக வறுமைக்கோட்டை அறிந்திருக்கவில்லை. உயர் கல்வி கற்கும் ஒவ்வொருவருக்கும் இலவசக் கல்வியோடு அரச அடிப்படை ஊதியம் வழங்கப்பட்டது. ஊதியம் குறைந்தோருக்கு அரச மானியம் வழங்கப்பட்டது. லிபியாவில் அரசியல் அல்லது அரசியலோடு தொடர்புடையதாகக் காணப்பவை தவிர அனைத்தையும் சுதந்திரமாக மக்கள் மேற்கொள்ளக் கூடிய நிலையே காணப்பட்டது.
இதனால் லிபிய மக்கள் மத்தியிலும் கடாபி கதாநாயகனாகத் தான் நீண்ட காலம் வாழ்ந்தார்.
இவற்றின் காரணமாக சிறிய இராணுவத்தை வைத்துக்கொண்டே மேற்கின் உதவியின்றி மக்கள் எதிர்ப்பின்றி ஆட்சி நடத்தக் கூடிய வலிமையை கடாபி பெற்றிருந்தார். கடாபிக்கு எதிரானவர்கள் மேற்கின் ஒடுக்குமுறைக்குத் துணைபோகின்றவர்களாகவே காணப்பட்டனர். இன்று வரைக்கும் கடாபி அதிகாரத்திற்குக் கிடைக்கப்பெற்ற மக்கள் ஆதரவின் காரணமாகவே சிறிய இராணுவத்தைக் கொண்டிருந்த லிபியாவை வீழ்த்தவும் கடாபியைக் கொலை செய்யவும் மேற்கிற்கு மிக நீண்ட காலை எல்லை தேவைப்பட்டது.
கடாபி ஏகதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார் என்பதைத் விட ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அரபுலகிலும், ஆபிரிக்க நாடுகளிலும், உள் நாட்டிலும் அவரின் அதிகாரத்தை நிலைநாட்ட உதவியது என்பதும், இதுவே அவரது அரசியலுக்கு வசதியானதாக அமைந்தது என்பதுமே உண்மை.
கடாபியைக் கொலைசெய்வதற்கான திட்டம் சில வருடங்களின் முன்னமே ஆரம்பமாகிவிட்டதெனலாம். அரபுலகின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட எழுச்சிகள் தமது அதிகாரத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொண்ட நேட்டோ அதிகாரமும் அதன் அடியாள் அமைப்பான ஐக்கிய நாடுகள் நிறுவனமும் லிபியாவைக் கொள்ளையிடுவதற்காக மிக நேர்த்தியான திட்டங்களை வகுத்துக்கொண்டன.
மேற்குலக ஊடகங்களில் நாகரீகத்தைக் கற்றுக்கொள்ள வாய்பளித்தும் கடாபி அரசு பயன்படுத்திகொள்வதாயில்லை என்பன போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடாபி – அழிவின் ஆரம்பம்
இவை அனைத்திற்கும் மேலாக கடாபியின் அழிவு 200ம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்தே ஆரம்பமாகிவிட்டதெனலாம். நாட்டில் உள் கட்டுமானங்களை மேப்படுத்துவது என்ற தலையங்கத்தில் கடாபி உலகமயமாதல் மற்றும் நவ தாராளவாத நிக்ழ்ச்சி நிரலுக்குள் லிபியாவை உட்படுத்திக் கொள்கிறார். இதன் மறுபக்கமாக ஏனைய அனைத்து நாடுகளிலும் நடந்தது போன்றே லிபியாவை மேற்கு நாடுகளின் புதிய சுரண்டல் அமைப்பு முறைக்கும் உட்படுத்துகின்றது. சுரண்டல் சிறுகச் சிறுக ஆரம்பிக்கிறது. புற்று நோய் போன்று நாட்டை அரித்துச் செல்கின்றது. உலகமயமாதல் செயற்படுத்தப்படும் போதெலாம் இரண்டு பிரதான சமூகக் கூறுகள் உருவாவது வழமை.
முதலாவதாக வறுமையும் வேலையின்மையும் அதிகரிக்கும், இரண்டாவதாக மிகச்சிறிய விரல் விட்டெண்ணக் கூடிய நபர்களைக் கொண்ட மேல்தட்டு வர்க்கம் அபரிமிதமாக பணத்தையும் மூலதனத்தையும் பெருக்கிக் கொள்ளும்.
ஆக, லிபியாவில் வறுமை தலைகாட்டத் தொடங்கியது. மக்கள் விரக்திக்கும் வெறுப்பிற்கும் உள்ளானார்கள், அவர்களின் மிகச் சிறிய பகுதி இஸ்லாமிய அடிப்படைவாதத்தோடு தம்மை அடையாளப்படுத்திக்கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இஸ்லாமிய அடிப்படை வாதம் என்று வாய் கிழியக் கூக்குரல் போடும் அமரிக்காவும் ஐரோப்பவும் சவுதி அரேபிய அடிமைகளின் உதவியோடு லிபியாவில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தைக் கடாபிக்கு எதிராகத் தூண்டின.கடாபிக்கு எதிரான மக்கள் உணர்வு கடந்து போன முப்பது வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்தது.
தொழில் துறையில் இரண்டு பிரதான மாற்றங்கள் நிகழ்ந்தன. எண்ணைச் சுத்திகரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், உப தொழில்கள் போன்றன எல்லாம் தனியார் மயமாகின. பன்நாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு உள்ளாகின்ன. ஏகாதிபத்தியங்கள் அமைதியாக வாழ்ந்த லிபிய மக்களின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தன. 2004ம் ஆண்டின் பின்னர் ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறை, சுற்றுலாத் துறை போன்றன முழுவதுமாக ஏகாதிபத்திய நிறுவனங்களின் கைகளுக்கு மாறின. இவற்றின் உள்ளூர் பிரதினிதிகளாக இனக் குழுக்களின் தலைவர்கள், கடாபி இராணுவத்தின் உயர் அதிகாரிகள், கடாபி குடும்பத்தினர் ஆகியோர் உருவாகினர்.
உலகமயமாதல் ஊடுருவிய அனைத்து இடங்களிலும் மற்றொரு நச்சு விதையை ஏகபோகங்கள் விதைப்பது வழமை. அரசு சார்பற்ற நிறுவன்ங்கள்(NGO) அல்லது தன்னார்வ நிறுவனங்களே அவை.
தன்னார்வ நிறுவனங்களில் பிரதானமாக அமரிக்கன் எயிட்ஸ், கிரிஸ்டியன் எயிட்ஸ், உபந்து fபோர் வேர்க்ஸ் போன்ற தன்னார்வர் நிறுவனங்களே முதலில் லிபியாவிற்குள் 2004ம் ஆண்டளவில் உதவி என்ற பெயரில் உள் நுளைந்தன. சிறிது சிறிதாக தம்மை நிலைப்படுத்திகொண்ட இத் தன்னார்வ நிறுவனங்களைத் தொடர்ந்து வெவ்வேறு நோக்கங்களுக்காக அவை லிபியா முழுவதும் விதைக்கப்பட்டன. இவை இரண்டு பிரதான நடவடிக்கைகளை மேற்கொண்டன. உளவறிதல் மிகப் பிரதானமான ஒன்று. இரண்டாவதாக நுகர்வுக் கலாச்சாரத்தில் ஈடுபாடுகொண்ட படித்த மேல் மத்தியதரவர்க்கத்தை அமரிக்க – ஐரோப்பிய சார்பானதாக மாற்றியது. கருத்தை உருவாக்கும் வலிமைகொண்ட இவர்களுக்கு அதீத பணம் ஊதியமாக வழங்கப்பட்டது.
உலகமயமாதல் உருவாக்கிய மேல் தட்டு வர்க்கத்தின் பெரும்பகுதியை கடாபியின் குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் இராணுவ உயர் அதிகாரிகளும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். கடாபியின் முதலீடுகள் நாடுகடந்ததது. தவிர, இதன் இரண்டாவது தளத்தில் உருவான பணக்கார மத்தியதர வர்க்கமான கலாச்சார உலக மயமாதலிற்கு உட்பட மேற்கை ஆதரிக்கும் நுகர்வு வர்க்கம் ஒன்று உருவானது.
இந்த வர்க்கத்தினரையும் வெறுப்பிற்கு உள்ளான பகுதியினரையும் மேற்கின் உளவு அமைப்புக்கள் பயன்படுத்திகொள்ள ஆரம்பித்தன. கடாபியின் மரணப் பொறியை அவரின் கோட்டைக்குள்ளேயே உருவாக்க ஆரம்பித்தன எண்ணை மோகம்கொண்ட ஏகாதிபத்திய அரசுகள்.
இதே வேளை மேற்கின் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்ட கடாபி மேற்கின் அரசுகளோடு உறவை வளர்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தின் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்படும் முன்னைநாள் பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேர் கடாபியின் கன்னத்தில் முத்தமிட்ட செய்திப்படங்கள் உலகப் பத்திரிகைகளை ஆக்கிரமித்தன. இறுதியில் ஒபாமா வரைக்கும் கடாபியை கட்டித் தழுவியிருக்கின்றனர். இது மேற்கின் இன்னொரு பிரச்சாரமே. இது நாள்வரை மேற்கின் கொள்ளைக்கு எதிராகப் போராடும் வீரனாகக் கருதப்பட்ட கடாபியின் ஒமர் முக்தார் விம்பம் இப்போது சுக்கு நூறாக நொருங்கிப் போகிறது. இதன் இன்னொரு வடிவமாக ஆப்கானிஸ்தான் கைதிகளின் சித்திரவதைக் கூடங்களில் ஒன்றாக லிபியா பயன்படுத்தப்பட்டது. ஆக, உலகமயமாதல் கடாபியை தலைகீழாக மாற்றிப் போட்டது.
முன்பிருந்த கடாபி 2005ம் ஆண்டின் பின்னர் மேற்கில் தங்கியிருக்கும் பலமிழந்த கோளை மனிதனாக மதிப்ப்ழந்து போனார்.
அப்போதே கடாபியின் முடிபு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
2005 இன் பின்னான கடாபி அரசியல் ரீதியாகக் கொலைசெய்யப்பட்ட நடைப்பிணமாகவே வலம்வந்தார்.
உலகமயமாதல் அரசியல் கொலை செய்த 40 ஆண்டு சர்வாதிகாரியின் உடல் இப்போது அழிக்கப்பட்டுவிட்டது.
இவை அனைத்தையும் மீறி கடாபியை மேற்கு பலியெடுத்ததன் பின்னணி என்ன?
மிகுதி விரைவில்..
லிபியாவிலும் புத்திசாலிகள் எண்ணை கொள்ளையை சாதுரியமாக நடத்தி முடித்துவிட்டார்கள். இந்த கொள்ளைக்கு 100 வீதமும் துணை போனது ஐக்கிய நாடுகள் சபையே!. இது எப்பவும் உலகில் உள்ள ஒருவீதமான மக்களின் நலன்களுக்கு காலவரையறையில்லாமல் வக்காளத்து வாங்க கூடியது.
தன் கொள்ளையின் பங்குதாரத்தனத்தை மறைத்து உலகத்திற்கு புதுகதை சொல்வதாகயிருந்தால் அதற்கு இன்னொரு கதை தேவைப் படுகிறது.
அதுவே! கடாபி ஏன்செத்தார்? எதற்கு செத்தார்?? என்ன மாதிரி செத்தார்??? இதற்கும் மனுநீதி வேண்டுமென்பதே????. யாராவது இதற்கு பதில் சொல்ல முடியுமா?????. அல்லது வரலாற்று ஓட்டத்தின் கையில் நீதியின் தீர்ப்பை விட்டுவிடுவதா!??????.
chandran.raja, ஒரு பக்கதில் மகிந்த ராஜபக்சவையும் பேரினவாதத்தையும் ஆதரித்துக்கொண்டு, அந்தக் கொடுங்கோலனின் இனப்படுகொலையையும் குடும்ப சர்வாத்காரத்தையும் ஆதரித்துக்கொண்டு, மகிந்த துணைக்குழுக்களையும் அவர்களின் சமூகவிரோத செயல்களையும் ஆதரித்துக்கொண்டு மறுபக்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசுவது கீழ்த்தரமாக உள்ளது. நீங்கள் ஏகாதிபத்திய எதிர்ர்ப்புக் காட்டுவதால் ஏகாதிபத்தியம் புனிதம் அடைகிறது. அடிப்படையில் நீங்கள் ஏகாதிபத்தியத்தின் காத்திரமான அடிவருடி. அவர்களுக்கு சேவை செய்பவர். ஏகாதிபத்திய எதிர்ப்பையும் இடது சாரியத்தையும் தமது சொந்த வியாபாரத்திற்காகப் பாவிப்பவர்கள் தெரிந்துகொண்டே நாடகமாடும் நயவஞ்சகர்கள். இவர்கள் அப்பாவிகள் அல்ல. நீங்கள் அப்பாவி அல்ல. உங்களுடைய தேவைக்காக மகிந்தவின் நலனுக்காக இதையெல்லாம் பயன்படுத்தும் நயவஞ்சகர். நீங்கள் அப்பாவிகளை ஏகாதிபத்திய சார்பாக மாற்றுகிறீர்கள். மகிந்தவிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்கிறீர்கள்.
உலகத்திலேயே முதன்முதல் மதிக்கப் படவேண்டியதும் பேணப் படவேண்டியதும் எழுத்துரிமை பேச்சுரிமை கூட்டம்கூடும் உரிமையே!. இந்த அடிப்படையிருந்தால் மட்டுமே மேற்கொண்டு எதற்காகவும் போராட முடியும்.
இதுவே அடிப்படைவிதி மனிதன். இந்த விதியை மாற்றியவர்கள் புலிகளா? மகிந்தாவா?? இல்லை புலிகள் தமிழ்மக்களின் உரிமைக்காகத்தான் வெறிதனம் கொண்டு போராடினார்கள் என்று இன்னமும் கனவு கண்டுகொண்டிருந்தால் அந்த கனவுகளை கலைத்துவிடுங்கள். இல்லையேல் அது.. . தமிழருக்கு மட்டுமல்ல இலங்கை பாட்டாளிவர்கத்திற்கும் ஆபத்து விளைவிக்க கூடியவை.
ஏகாதிபத்தியம் எப்பவும் தனது சந்தை மூலவளங்களை பெறுதல் ஆதாயத்திற்கான தேடங்களிலேயே அக்கறை செலுத்தும். இந்த அடிப்படையிலேயே எந்த பிரச்சனையும் அணுகும். உங்கள் கருத்தும் தேசியகூட்டமைப்பு ஏகாதிபத்திய நிழல்தேடி ஓடித்திரிவதும் இந்த அரசியல் வறட்சியிலாலேயே!.
அமெரிக்க-ஏகாதிபத்தியமும் நாட்டோவும் தமிழ்மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என நீங்கள் கற்பனை செய்தால் ஈராக் தாக்குதல்களுக்கு உதவி புரிந்த குறுதீஸ்யினத்தின் ஒருபகுதி போல- லிபியாவை சீரளித்த ஏகாதிபத்திய கூலிப்படைபோல நிலையேற்படுவதும் அல்லாமல் சதாம் இல்லாத ஈராக் போல கடாபி இல்லாத லிபியா போல ஒரு இருள்சூழ்ந்த நிலையே காணப் படும். இந்த நிலைக்கு உங்கள் அரசியல் தத்துவறுமை சிங்களத்தீவின் அரசியலிலும் உரசிப் பார்க்க வேண்டாம்.
அமெரிக்க சனாதிபதியாக றீகன் இருந்தவேளை லிபியாவிற்கெதிராக போர் தொடுத்ததை அறிவோம் அந்த நேரம் கடாபியை சாதாரணமாக அவா்கள் கொன்றிருக்கலாம் ஆனால் அவா்கள் வேறு நலன்களை இட்டு ஒரு மிரட்டலுடன் நிறுத்திக்கொண்டார்கள். சா்வாதிகாரிகள் தம் நிலைகளை காப்பாற்றிக்கொள்ள மேற்குலகுடன் பாதாள திரைமறை அழுக்கு வியாபாரங்களில் ஈடுபடுவதும் பின்பு அந்த இரகசியங்கள் கசியும் நிலை வருகின்றபோது மேற்குலகம் தம் போலி முகத்தை காப்பாற்றிக்கொள்ள அதிரடியில் இறங்குவது சாதாரண விடயம் இதன் விளைவே கைது செய்து நீதியின் முன் நிறுத்தாமல் சதாம் குசைன்,ஒசாமா பின்லாடன்,இப்போது கடாபி போன்றோர்கள் கொல்லப்பட்டதன் காரணம்.
லிபியாவின் எண்ணைக்குதங்களை எப்பவோ உலகின் முன்னணி நாடுகளின் கம்பனிகள் குத்தகை எடுத்துவிட்டன இதில் இந்தியா,சீனா போன்றவையும் அடங்கும் இந்த குத்தகைகளை தட்டிப்பறிக்கும் நோக்கம் மேற்குலகிற்கு இருக்குமாயின் லிபியாவின் கடாபிக்குப்பிந்திய காலம் இருண்ட காலமாகிவிடும் முதலில் சா்வதேச ஒப்பந்தங்களை எந்த புதிய அரசுகளும் மீற முடியாது இரண்டாவது வழா்ந்து வரும் நாடுகளான இந்தியா,சீனா போன்றவைகளை தவிர்த்தல் இன்றய நிலையில் இயலாத காரியம். இதை விட்டு கடாபி எண்ணைக்கிணறுகளை காப்பாற்றி வைத்திருந்தார் என்பது அறியாமையாகும்.
குமார்
முன்னர் இதே இணையத்தில் ஏகாதிபத்தியங்களோடு சேர்ந்திருக்கும் சிங்கப்பூர் வளர்ந்த்திருப்ப்தை உதரணமாகக் காட்டி இலங்கையும் ஏகாதிபத்தியங்களோடு சேர வேண்டும் என்றுநீங்கள் பின்னூட்டம் எழுதியதாக நினைவு. உலகின் 99 வீதமான நாடுகள் அவர்களால் சின்னாபின்னமாவது கூட உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.
எண்ணைக் குதங்களை கடாபி தேசிய மயமாக்கியதும் அமரிக்கா கடாபியின் வீட்டில் விமானக் குண்டு எறிந்து கொல்ல முயற்சித்ததும் நீங்கள் வழிபடும் ஏகாதிபத்தியங்களே ஒத்துக்கொள்ளும் உண்மை. உங்களுக்கோ விசுவாசம் விடமாடேங்கிறதே!
இடசாரித்துவத்திலிருந்து பிச்சை எடுப்பதை விட முதலாளித்துவம் சுரண்டினாலும் பரவாயில்லை என்பது ஒருவிடயம்,இதை வைத்து கொடிய சா்வாதிகாரிகளையும் அவா்களது ஏகாதிபத்தியவாதிகளுடனான வியாபாரத்தை ஏற்றுக்கொள்வதென்பது இன்னொரு விடயம்.நான் நடுநிலைவாதி யாருக்கும் விசுவாசி கிடையாது திருப்பதி.
யாருக்கு நீங்கள் நடுநிலைமையாளராக இருக்கிறீர்கள் குமார்?
முதாலித்துவ-ஏகாதிபத்திய வேலைதிட்டங்களுக்கா உருப்படியில்லாது மறைந்த
அழிந்துபோன ஸ்டாலிச-மாவோ வாத சிந்தனைகளுக்காவா? இல்லை மானிட-மனிதநேயத்திற்காகவா? உங்கள் நடுநிலமையை எமக்கும் புலப்படுத்துங்கள். உங்களிடமிருந்தும் மேலதிகமாக கற்றுக் கொள்ளமுடியுமா? என்பதைப் பற்றி சிந்திப்போம்.
நேற்று சுரண்டப்பட்டவா்கள் இன்றய சுரண்டல்காரா்கள் இதற்கு இந்தியா,சீனா இரண்டுமே நல்ல உதாரணம் இன்று சுரண்டப்படுபவா்கள் நாளை நிச்சயம் சுரண்டத்தான் போகின்றார்கள் இதுதான் நியதி.நம்பி இருந்தவா்களின் கழுத்தறுக்கும் இடதுசாரி சுயநலவாதிகளை விட சந்தா்ப்பவாதிகளைவிட சுரண்டினாலும் வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தும் சுரண்டல்காரா்கள் எவ்வளவோ மேல். உங்கழுக்கு சந்தா்ப்பம் கிடைக்கும்வரை சந்திரன்ராசா நீங்கள் பாட்டாளி பாட்டாளி என்று ஊளையிடுவீா்கள் அதாவது யாரும் பெட்டியில் பணத்தை காட்டும்வரை.
நடுநிலைவாதி என்பது உம்மைப்போன்ற 5ம் அகில பைத்தியமும் இன்றி மேற்குலகின் பொய்யான மயக்கத்தில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்ட பைத்தியமும் அல்லாத நிலை.
மனித வீழ்ச்சிக்கும்,அதன் மந்தைத்தனமான வாழ்வுக்கும்,நாளாந்த துயருக்கும், மத மாக்சிஸ வெறிதான் கால்கோள்.
மகிந்தாவின் தோழில் கடாபி கைபோட்டதால் கடாபி சாகடிக்கப்பட்டது சரி என்று சொல்லும் கோமாளிக் கூட்டம் தான் தமிழ் இனம்.
//கடாபி ஏகதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார் என்பதைத் விட ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அரபுலகிலும், ஆபிரிக்க நாடுகளிலும், உள் நாட்டிலும் அவரின் அதிகாரத்தை நிலைநாட்ட உதவியது என்பதும், இதுவே அவரது அரசியலுக்கு வசதியானதாக அமைந்தது என்பதுமே உண்மை.//
பிரபாகரனும் இப்படதான் தேசிய வாதி ஆக இருந்தார் என்பதை விட தேசிய வாதத்தை தனது அதிகாரத்தை நிலை நாட்ட பயன்படுத்தினார் என்பதே உண்மை.
அந்தக் கோமாளிக் கூட்டத்தில் நீங்களும் ஒருவரா Celine ?.
தோளில் கைபோட்ட இருவரும் ஒரே வகையறாக்கள். ஒடுக்குமுறையாளர்கள்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிராக பேசுபவர்கள் எல்லோரும் புரட்ச்சிவாதிகளேன்று தப்பாக எடைபோட வேண்டாம்.
செல்வா! தோளில் கைபோட்டு சங்கறுத்தவன் எமது இனத்திலேயே இருக்கிறான். அதைவிட்டு ஏன்? மகிந்தாவையும் கடாபியையும் துணைக்கழைக்கிறீர்கள். நீங்கள் தேடிப்போகிற பூண்டு காலுக்குள் சிக்கிக்கிடக்கிறது.
என்னா குமார் உங்கள் நடுநிலமை எதுவென்று கேட்டால் ..? தமிழ் சினிமாவில் வஞ்சிக்கப் பட்ட கதாநாயகயன் பேசும் வசனம் போல் உதிர்த்து விடுகிறீர்கள்?
இதுதானா நீங்கள் இடதுசாரிதனத்தை அறிந்து கொண்ட விதம்?.
“ஆறுவது சினம்” அதையாவது முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். இதற்கும் சம்பந்தமில்லாத வார்த்தைகளை போட்டு குழப்பிவிடாதீர்கள். ஒவ்வொரு சந்தர்பத்திலும் உங்கள் இருப்பை தான் வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்!.
பெருமுதலாளிய வணிக ஊடகங்களில் பொய்களும்,புனைசுருட்டுக்களுமாக வரலாறு வலம்வந்துகொண்டிருக்கின்ற வேளையில் வாசகரை சரியான விவாத ஒழுங்கில் கொண்டுசெல்கின்ற இந்தகட்டுரைக்கு முதலில் நன்றி. கடாபி ஆரம்பத்தில் ஏகதிபத்திய எதிர்ப்பாளராக, வட ஆபிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். மேற்குலகு நெல்சன் மண்டலாவை பயங்கரவாதி என்று அழைத்த காலத்தில் ஏ.என்.சி யுடைய உறுதியான ஆதரவாளராகவிருந்தார். பிரித்தானிய காலனியஎச்சசொச்சங்களிற்கெதிரான அனைத்து விடுதலை அமைப்புக்களுக்கும் ஆதரவு வழங்கினார். கடாபியின் பச்சைப்புத்தகமும், மக்கள்மன்றமும் ஆரம்பத்தில் லிபிய மக்களுக்காக செயல்பட்டன என்பது உண்மைதான். ஆனால் எல்லா அரபுதேசியவாதிகளையும் போலவே சீரழிந்தார். இனக்குழு அரசியலும், தம்மைச்சூழ உருவாக்கிவைத்திருந்த அதிகாரவமைப்பபின் ஊழலும், விடுதலைஅமைப்புக்களை தமது தேவைகருதி பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடவைத்தமை இதன் ஆரம்பங்கள். சூடானின் அரச எதிர்பாளரை நாடுகடத்தி படுகொலைக்குள்ளாக்கினார். எல்லா சர்வாதிகாரிகளுக்குமுள்ள மக்களை நம்பாமை கடாபியையும் ஆட்டிப்படைத்தது அதனாலேயே எழுபதினாயிரம் இளையோரை கொன்றொழிக்கவேண்டிவந்தது.
கட்டுரையாளர் இஸ்லாமிய அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம் பலமுறை பேசியுள்ளார். இந்த சொல்லாடல் குறித்து தெளிவாக விளக்கும் அறிவு அவரிடம் உள்ளதா?
here wat ever america is doing is right peoples,media,various country governments are doing the same
chandran.raja = Duglus Devanantha…. I have seen him typing. Need prove? I have a lot more wait and see.