Saturday, May 10, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சட்டமன்றத் தீர்மானம் – ஜெயாவின் கபட நாடகம் – புலி ரசிகர்களின் விசில்

இனியொரு... by இனியொரு...
07/05/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, புதிய ஜனநாயகம், அரசியல்
0 0
16
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஈராண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி பாசிச அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரின் கொடூரங்களை ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல்4 தொலைக்காட்சி. கல்மனம் கொண்டோரையும் கதறச் செய்யும் இக்கொடூரக் காட்சிகளைக் கண்டு வேதனையும் துயரமும் கொள்ளாதோர் இருக்கவே முடியாது. இலங்கை அரசின் இரக்கமற்ற இந்தப் போரை இந்திய அரசுதான் உற்ற துணைவனாகவும் வழிகாட்டியாகவும் இருந்து இயக்கியது.

போரின்போது மட்டுமின்றி, போருக்குப் பின்னரும் வர்த்தக, பொருளாதார, இராணுவ ஒத்துழைப்பு என்ற பெயரில் இலங்கை அரசையும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலையும் ஆதரித்து நிற்கிறது. கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை மைய அமைச்சர் வாசன் தொடங்கி வைத்துள்ளார். அடுத்த கட்டமாக, இராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்குமிடையில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. தேசியப் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் முதலான அதிகாரிகள் அடிக்கடி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு வர்த்தகம், நட்புறவு குறித்து பேசிவிட்டுத்தான் வருகிறார்கள்.

பாசிச ஜெயா தமிழக முதல்வரானதும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என போர்க்குற்றவாளி ராஜபக்சே அரசுடன் கூடிக்குலாவும் இந்திய அரசை வலியுறுத்தி கடந்த ஜூன் 8-ஆம் தேதியன்று நடந்த தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த நாளில், கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலே நடக்கும் வழக்கிலே தமிழகத்தின் வருவாய் துறையையும் ஒரு மனுதாரராகச் சேர்க்க வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அகதிகளைத் துரத்தி வேட்டையாடி, ஈழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்திய ஜெயா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ் ஈழத்தை ஆதரித்து சவடால் அடித்ததும், தமிழினப் பிழைப்புவாதிகளால் ஈழத் தாயாகத் துதிக்கப்பட்டார். தேர்தலுக்குப் பின்னர் கொடநாடு போய் படுத்துக் கொண்டு, இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக காகித அறிக்கைகூட வெளியிடாத ஜெயா, இப்போது ஈழத் தமிழர்களின் படுகொலையைக் கண்டித்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடைவிதிக்கவும், ராஜபக்சே கும்பலைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்ததும் தமிழினப் பிழைப்புவாதிகளால் போற்றப்படுகிறார்.

ராஜீவ் படுகொலையைத் தொடர்ந்து பாசிச ஜெயா கும்பலுக்குத் துதிபாடிய வீரமணி கும்பலை எதிர்த்து, தி.க.விலிருந்து விலகி பெரியார் தி.க. எனும் தனிக்கட்சியை உருவாக்கியவர்கள், இப்போது பாசிச ஜெயாவை ஆதரித்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்து உலகம் உருண்டை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

ஒருக்கால், தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் ‘நியாயத்தை’ உணர்ந்து, மைய அரசு நாடாளுமன்றத்தில் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஐ.நா. மன்றத்துக்கு அனுப்புவதாகவும் வைத்துக் கொள்வோம். இந்தத் தீர்மானத்தை ஒருவேளை ஐ.நா. பொதுச்செயலர் பரிசீலித்தாலும், இதனைச் செயல்படுத்த அவர் ஐ.நா. பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச் சபையில் இத்தீர்மானத்தை முன்வைத்து, இதற்கு ஆதரவாக பெரும்பான்மை நாடுகளின் வாக்களிப்பைக் கோரவேண்டும். அதன் பிறகு ஐ.நா. மன்றத்தின் சார்பில் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில் போர்க்குற்றம் நடந்துள்ளதை நிரூபிக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை அரசு சம்மதிக்க வேண்டும். அதன் பிறகு, விசாரணையின் அடிப்படையில் ஐ.நா. பாதுகாப்புச் சபை இலங்கை மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். போர்க்குற்றமிழைத்த இலங்கை அரசு மீது ஒரு காகித கண்டன அறிக்கையைக்கூட இதுவரை வெளியிடாத ஐ.நா.வும் மேற்குலக நாடுகளும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முன்வருமா என்று இன்றைய உலக நிலைமையைச் சற்று யோசித்துப் பார்த்தாலே, இந்த வெற்றுத் தீர்மானத்தின் யோக்கியதை என்ன என்பது தெளிவாகிவிடும். செத்தவன் கையில் வெற்றிலையை வைப்பதற்கும், இந்த வெற்றுத் தீர்மானத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

சட்டரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ எவ்வித மதிப்புமில்லாத இத்தகைய தீர்மானங்களால் எந்தப் பலனுமில்லை.

மைய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தில், கச்சத்தீவு பிரச்சினையை 2008-இல் அன்று வாதியாக இருந்த ஜெயா, மைய அரசையும் மாநில அரசையும் சேர்த்திருந்தார். இன்று அவர்தான் வாதி, மாநில ஆட்சிப் பொறுப்பில் அவரே இருப்பதால், அவரே பிரதிவாதி. இந்தக் கேலிக்கூத்து நடுவே வருவாய்த்துறையையும் அவர் வாதியாகச் சேர்த்துக் கொண்டுள்ளார். மே.வங்க முதல்வராக இருந்த பி.சி.ராய் முயற்சியில் பெருபாரி தீவு எப்படி அன்றைய மே.பாகிஸ்தானிடமிருந்து(இன்றைய வங்கதேசம்) மீட்கப்பட்டதோ அதேபோல, கச்சத்தீவை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் வழங்கியது தவறு என்று நீதிமன்றத் தீர்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் நியாயங்களும் தமிழக அரசுக்கு நிறையவே இருக்கின்றன என்று கூறி, இந்த கோமாளித்தனம் வெற்றிபெற வாழ்த்துகிறது, தினமணி.

இது, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்ளையின் அடிப்படையில் உருவான இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தம். மைய அரசின் வெளியுறவுக் கொள்கையில் நீதிமன்றம் தலையிட முடியும் எனில், அமெரிக்காவின் அணுசக்தி அடிமை ஒப்பந்தத்தையே ஒரு வழக்கு தொடுத்து முறியடித்திருக்கலாமே! அதனால்தான், பாசிச ஜெயாவின் சித்தாந்த வழிகாட்டியும் ஆலோசகருமான துக்ளக் சோ கூட, இந்தத் தீர்மானம், இந்தப் பிரச்சினையைப் பற்றி தமிழகத்தில் எல்லா கட்சிகளும் கவலைப்படுகின்றன என்று காட்டுவதற்கு உதவும், அதற்கு மேல் கச்சத்தீவையே திரும்பப் பெற்றுவிட இந்தத் தீர்மானம் வழிசெய்துவிடாது என்கிறார். இருப்பினும், சீமான், பழ.நெடுமாறன், வைகோ, உருத்திர குமாரன், சத்தியராஜ், மணிவண்ணன், கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் என நீளும் தமிழன ஆதரவாளர்கள், வெற்றுத் தீர்மான அட்டைக் கத்தியை ஏந்திச் சுழற்றிக் கொண்டு புறப்பட்டுவிட்ட ஜெயாவை, புறநானூற்றுத் தாயைக் கண்ட திருப்தியில் புளகாங்கிதம் அடைந்து நிற்கின்றனர்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட, மனிதகுல வரலவாற்றில் நடந்த இன்னுமொரு மிகக் கொடிய இனப்படுகொலை பற்றி அடுத்தடுத்து பல உண்மைகள் வெளியாகிவரும் இத்தருணத்தில், ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி, உலகெங்கும்போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்து பொதுக் கருத்தை உருவாக்குவதும், அக்கும்பலைத் தண்டிக்கக் கோரி மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைத்துப் போராட்டங்களின் மூலம் உலக நாடுகளை நிர்ப்பந்திப்பதும்தான் இன்றைய அவசியமான கடமையாக உள்ளது. ஆனால், மக்களை அணிதிரட்டிப் போராடத் தயாரில்லாதவர்களும், ஒரு கட்சித் தலைவர் மனது வைத்தால் இன அழிப்புப் போர்க் குற்றவாளிகளைத் தண்டித்துவிட முடியும் என்று முட்டாள்தனமாக நம்புபவர்களும்தான் சிறீரெங்கநாயகியின் தயவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி எழுதிய கடிதங்கள் ஈழத்தமிழின அழிப்புப் போரை வேடிக்கை பார்ப்பதாக முடிந்தன. ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானங்ளோ கேலிக்கூத்தாகி நிற்கின்றன.

நன்றி : புதியஜனநாயகம்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

லிபியாவில் திடீரெ‘ஜனநாயக எழுச்சி’ வெடித்தத சதியின் பின்னணி?

Comments 16

  1. Pingback: Indli.com
  2. நிர்மலன் says:
    14 years ago

    தமிழ்தேசீய எதிர்ப்பை மறைக்கப்போடும் முகமூடிதான் “புதியஜனநாயகம்” எனும் பம்மாத்து. பழ.நெடுமாறன் வைகோ கொளத்தூர் மணி விடுதலை இராசேந்திரன் என தமிழின ஆதரவாளர்கள் தமிழ்தேசீயத்திற்கு குரல் கொடுத்ததற்காக ஜெயலலிதாவால் சிறையில் அடைக்கப்பட்டவர்களை “புதியஜனநாயகம்” எனும் பம்மாத்துகாரர் குற்றம் சாட்டுகிறார்கள். கருணாநிதியின் பதவி காலியாகிவிட்டதே. தமிழ்தேசீய எதிர்ப்பு சக்திகளிடமிருந்து கிடைத்த வருமானம் நின்றுவிட்டதே என்ற கடுப்பின் வெளிப்பாடுதான் “புதியஜனநாயகம்” எனும் பம்மாத்துகாரர்களின் நீலிக்கண்ணீர். மற்றப்படி ஜெயலலிதா யாரென்ற பட்டறிவு ஈழத்தமிழருக்கு போதியளவு உண்டு.

  3. thurai says:
    14 years ago

    //ஜெயலலிதா யாரென்ற பட்டறிவு ஈழத்தமிழருக்கு போதியளவு உண்டு//

    ஈழத்தமிழர் வேறு  ஈழத்தமிழரென்று   சொல்லியே  பிழைப்புநடத்துபவர்கள்  வேறு
    என்று உலமகம்    நன்கு   இனம்கண்டு கொண்டது.  அதோடு மட்டுமல்ல ஜெயா  கருணாநிதி மோதகமும்  கொழுக்கட்டையும் போல்தான்..  இவர்களால்  தமிழகமே  தலையெடுக்காது.
    இந்த  நிலையில்  அர்சியல்  படம் காட்டும்  புலம்பெயர்  புலிக்கும்பல் வேறு.-துரை

    • நிர்மலன் says:
      14 years ago

      ஆம், சொந்த இனத்தையே தூசிக்கும், சிங்கள இனவாதத்துடன் சேர்ந்து சொந்த இனத்தையே அழிக்க துடிக்கும். பிறழ்வான சமூகநடத்தையால் தாய் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஈனத்தமிழரும் ஈழத்தமிழரில் உண்டென்பதை உலகறியும்.

      • thurai says:
        14 years ago

        சத்தியமாக நிர்மலன், நான் இயக்கத்திற்கு காசு சேர்கவுமில்லை, துரோகியென்று சொல்லி யாரையும் கொன்றவ்ர்களை ஆதரிக்கவுமில்லை, யாரையும் கொலையும் செய்யவில்லை, வன்னியில் தமிழரிற்கு விடுதலை பெற்றுக்கொடுப்பேன் என்று சொல்லி ஆயுதம் தூக்கவுமில்லை, இறுதியில் தமிழரை முன்னால் விட்டுஅழித்து என்னைக்காப்பாற்ர முயலவுமில்லை,
        தமிழரை அழிவுகொடுத்தபின் வேறு வழியில்லாமல் வெள்ளைக்கொடி தூக்கவுமில்லை. இப்படியாக் நடந்தவ்ர்களை
        ஆதரித்து புலம்பெயர் நாடுகளில் புலிகொடியைத்தூக்கவுமில்லை.

        என்னால் எப்படி தமிழனொருவனின் உயிர் போனதாக கூறமுயல்கின்றீர். அதற்கும் சொல்லுங்கோ தமிழரின் உயிரைவிட உருமைதான் முக்கியமானதென்று. அப்போ ஏன் உந்த சன்ல் 4 படமெடுப்பெல்லாம்? இலங்கை வாழ்தமிழரின் பிரச்சினைகள் வேறு ஈழ்த்தமிழர் என்றுசொல்வோரின் பிரச்சினை வேறு, பயங்கரவாத்ப்புலிகளின் பிரச்சினை வேறு.
        எல்லாவர்ரையும் கூழாக்கி உலகத்தமிழர் என்றால் உலகெங்கும் வாழும் வடகிழக்கைச் சேர்ந்த அகதித்தமிழர் மட்டும் தான் என்பதை முதலில் கைவிடுங்கோ.-துரை

        • செவ்வியன் says:
          14 years ago

          கூலிக்குமாரடிப்போருக்கு பதிலளித்து நேரத்தை வீணாக்காதீர் நிர்மலன்

          • thurai says:
            14 years ago

            கூலிக்கு மாராடிப்போரை விட கொள்ளையடிப்போரிற்கு மாரடிப்பது எப்போதும்லாபமான செயலல்லவா.-துரை

  4. செவ்வியன் says:
    14 years ago

    பரவாயில்லை ஒத்துக்கொண்டுவிட்டீர் அப்புரம் கொள்ளையடிப்பவரிடம்தான் கூலிக்கு மாரடிக்கிறீர் புரிந்துகொள்ளமுயற்சி செய்யுங்கள் தொரை

    • thurai says:
      14 years ago

      கடந்து வந்த பாதை தவறென்று தெரிந்தும் இன்னமும் திருந்தாதவர்களிற்கு
      கடவுளாலும் உதவ முடியாது. புலமபெயர்நாடுகளில் ஏதோ தமிழர் பெயரால்
      பிழைப்பைத் தொடருங்கள்.-துரை

      • செவ்வியன் says:
        14 years ago

        தொரை…………நீர் இப்ப போறபாதையே சரியில்ல .உமக்கும் மகிந்தாவுக்கும் சிங்களருக்கும் மனுசங்களாலேயே உதவமுடியாது.இதுல கடவுள் வேறயா.கடவுள துணைக்கு அழைப்பதிலிருந்தே உம்ம அறிவோட இலட்சணம் தெரியுது.

        • thurai says:
          14 years ago

          58 ம் ஆண்டிலிருந்து வருடாவருடம் இலங்கையில் தமிழரை மேலும் மேலும் பலிகொடுக்கும் அரசியலை விட் வேறு ஒன்றுமே உங்களிற்குத்தெரியாதா?-துரை

  5. நிர்மலன் says:
    14 years ago

    சென்னை: சென்னை வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளி்ண்டனுடன், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா விவாதிப்பார் என்று அமெரிக்க அரசின் தெற்காசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.

    ராபர்ட் பிளேக், 2006 முதல் 2009 வரை இலங்கையில் அமெரிக்கத் தூதராக பணியாற்றினார் என்பது நினைவிருக்கலாம்.

    இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை நிலவரம் குறித்தும், அங்குள்ள தமிழர்கள் குறித்தும் ஆறரை கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழக மக்கள்தான் பெரும் கவலையில் உள்ளனர். அவர்களுக்கு இந்த விவகாரத்தில் முக்கியப் பங்கு உள்ளது. எனவே ஹில்லாரி கிளிண்டனின் சென்னை விஜயத்தின்போது, அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும்போது நிச்சயம் இலங்கைத் தமிழர் பிரச்சினை எழுப்பப்படும்.

    நிச்சயம் இரு தலைவர்களும் இலங்கை விவகாரம் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிப்பார்கள் என்றார் பிளேக்.

    • thurai says:
      14 years ago

      இந்த விடயம் சீனா, அமெரிக்க ஆசிய ஆதிக்க முன்னுருமைக்கானது. இலங்கைத் தமிழர் மேலும் சிக்கலுக்குள்ளாக்கி இந்தியாவையும் இலங்கையையும்
      சீனாவையும் கூட ஒன்றாக இணந்து தமிழர் யாவருக்கும் எதிராக செயற்பட தூண்டும். அனுமான் வாலில் தீயுடன் இந்தியா சென்றதுபோல் கிளின்ரன்
      இலங்கைத்தமிழர் பிரச்சினையைக் கொண்டு சென்று இந்த்யாவில் தீமூட்ட ஆயத்தமாகின்றார். -துரை

      • thurai says:
        14 years ago

        குறிப்பு: அனுமான் இலங்கையில் வாலில் வைத்த தீயை இலங்கையையே அழிக்க பயன்படுத்தியது போல். இலங்கை பிரச்சினையை தமிழகத்தில் கொண்டு சென்று தமிழகத்தமிழர்களின் அமைதியான் வாழ்வையும் சீரழிக்கபோகின்றார்.-துரை

        • Virumandi says:
          14 years ago

          உனக்கென்ன பைத்தியமாப்பா?

          • thurai says:
            14 years ago

            தொட்டால் தானே தெரிகின்றது தொட்டால் சுடுவதுநெருப்பென்று. ஆனால் சில தமிழர்களிற்கு சுட்டாலும் புரியாமலிருக்கின்றதே.-துரை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...