எண்பதுகளின் ஆரம்பத்தில் அக்காலத்தைய தமிழக முதல்வர் எம்.ஜீ.ராமச்சந்திரன் அழைப்பு விடுக்க 83 ஜுலைப் படுகொலைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்துப் போனது. சில காலங்களுக்கு உள்ளாகவே, இந்திய உளவுத்துறை ஈழப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கிற்று. ஈழப் போராளிகளைக் கையாளும் நோக்கோடு எம்.ஜீஆர் ஐ ஒரு புறத்திலும் மறு புறத்தில் கருணாநிதியையும் இந்திய அரசு பயன்படுத்திக்கொண்டது.
புலிகள் இயக்கத்தை எம்.ஜீ.ஆர் உம் ஏனைய இயக்கங்களைக் கருணாநிதியும் கையாண்டு ஆரம்பத்திலிருந்தே இயக்கங்களுக்கு இடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்தமை தற்செயலான நிகழ்வுகள் அல்ல.
படிநிலை வளர்ச்சிகளூடாக முதிர்ச்சியடைந்து வெற்றியை நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய தேசிய விடுதலைக்கான போராட்டம் பகை முரண்பாடுகளால் சிதறடிக்கப்பட்ட இயக்கங்களின் மோதலாக வளர்ச்சிகண்டது. போராட்டம் வெற்றியை நோக்கி நகர்ந்து செல்ல முடியாத அனைத்து புறநிலை சக்திகளையும் இந்தியா திட்டமிட்டு உருவாக்கிற்று. இயக்க மோதல்களை உருவாக்கி, ஜனநாயக, முற்போகு சக்திகளை விரக்திக்கு உள்ளாக்கி பிற்போக்குச் சிந்தனைகளுக்கு இந்திய உளவுத்துறை உரமிட்டது. தேசிய இனவிடுதலைக்கான போராட்டத்தை இனவாதப் போராட்டமாக மாற்றும் முதல் முயற்சியாக புலிகள் இயக்கத்தினூடாக அனுராதபுரத்தில் நூற்றுக் கணக்கான அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்று குவித்தது.
உலக நாடுகளின் போராடும் சக்திகளிடமிருந்து ஈழப் போராட்டம் தனிமைப்படுத்தப்பட்டது. 80 களின் இறுதியில் ஈழப் போராட்டம் அதன் ஜனநாயக முற்போக்கு முகத்தை முற்றாகவே இழந்த நிலையை அடைந்திருந்தது. அதன் பின்னர் வல்லரசுகளின் அரசியல் சதுரங்கத்திற்கான தெற்காசியக் களமாகவே ஈழப் போராட்டம் மாற்றமடைந்தது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் செல்வாக்கு மிக்க தமிழகத்தின் தமிழின வாதிகள் அறிக்கைப் போர் மட்டுமே நடத்திக்கொண்டிருந்தனர். பரந்துபட்ட மக்கள் ஆதரவுத் தளத்தைக் கொண்டிருந்த ஜெயலலிதா தமிழகத்தில் அழிவுகளைத் தடுத்து நிறுத்த எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. சில அறிக்கைகளோடும் அனுதாபங்களோடும் அனைத்தும் முடிந்து போயின.
இப்போது இனப்படுகொலை ராஜபக்ச அரசிற்கு வெளிப்படையான ஆதரவு வழங்கிய கருணாநிதி குழுமம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சி உருவான மறுகணமே அதிமுக முத்திரையோடு கூடிய ஒடுக்குமுறைகள் தமிழக மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன.
ஜெயலலிதாவின் ஒடுக்குமுறை குறித்து:
ஜெயா திருந்திவிட்டாராம்! – நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்
இந்த நிலையில் , இலங்கை மீது இந்திய மத்திய அரசாங்கம் பொருளாதார தடையை விதிக்க வேண்டும் எனக்கோரிய பிரேரணை ஒன்றை தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவித்தே இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கையை ஐக்கிய நாடுகள் போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இலங்கையின் மீது பொருளதாரத்தடையை விதிப்பதன் மூலமே அந்த அரசாங்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார். இந்தியாவும் ஏனைய நாடுகளும் இலங்கை மீது பொருளதார தடையை விதித்தால் மாத்திரமே அந்த நாடு, நாங்கள் என்ற சொல்கிறோம் என்பதை கேட்;கும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் தமது சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர். பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றபின்னரும் இந்த நிலை தொடர்கிறது. இதன் காரணமாகவே தமிழ் ஈழக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டினார்.
இதைக்கண்ட தமிழின வாதிகள் புழகாங்கிதம் அடைந்துள்ளனர்.
சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், இலங்கை நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீ்ர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாம் தமிழர் கட்சி வரவேற்றுள்ளது.
ஈழப் போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டம் எனத் தொடர்ச்சியாகக் கருத்துத் தெரிவித்துவந்த ஜெயலலிதா, இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். ஈழப் பிரச்சனையை மத்திய அரசை மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதே ஜெயலலிதாவின் ஒரே நோக்கம். தனக்குத் தேவையானதை கருணாநிதியின் கட்சியோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொண்டதும், ஜெயலலிதா கருணாநிதியாக உருமாறிவிடுவார்.
தமிழக்த்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களுக்கு அண்மைக்காலமாக முற்போக்கு முகம் ஒன்று உருவாகியிருந்தது. போராட்ட பலம் மிக்க சக்திகள் ஈழப் போராட்டத்தில் ஆளுமை செலுத்த ஆரம்பித்திருந்தனர். அதிகார வர்க்கத்திற்கு மட்டுமே பயன்பட்ட ஈழப் போராட்டம் மக்கள் வன்னிப் படுகொலைகளின் பின்னர் மத்தியில் பரவ ஆரம்பித்திருந்தது. அதிகார வர்க்கத்தின் மீதும் அரசுகளின் மீதும் வெறுப்படைந்த பலர் மக்கள் இயக்கங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தனர். ஜெயலலிதாவின் தலையீடு இப்போராட்டத்தை மீண்டும் மக்களிடமிருந்து பிரித்து 80களில் இருந்தது போன்று மீண்டும் அதிகார மையங்களின் பிடியில் சிக்கவைக்கும் அபாயத்தை உருவாக்கும். மீண்டும் ஒரு முறை ராஜபக்ச எதிர்ப்பு சக்திகளை இந்திய உளவுத்துறையின் கரங்களில் ஒப்ப்டைப்பதற்கான செயற்பாடுகளின் ஆரம்பப் புள்ளி இதுவே.
மக்கள் பற்றும், மனிதாபிமானமும் மிக்க முற்போக்கு சக்திகள் ஜெயலலிதாவின் ஈழ ஆதரவு குறித்து எச்சரிக்கை அடையவேண்டும்.
நிதானமாக, ஜெயலலிதாவின் உள் நோக்கை தெளிவாக படம் பிடித்திருக்கிறது கட்டுரை!
மக்கள் திலகத்தின் மீதான பதிவாளரின் குற்றச்சாட்டை மறுக்கின்றேன். மக்கள் திலகம் அன்று எந்த அரசியல் இலாபம் கருதி ஈழத்தமிழருக்கு உதவவில்லை. அந்த நிலையில் அவர் இருக்கவும் இல்லை. அநத சந்தர்பததில் அவர் மிகப் பெருத்த மக்கள் சக்தியுடன் இருந்தவர். அதை அரசியலாக்கியது கருணாநிதி என்னும் அரசியல் வியாதியே. எம்.ஜீ.ஆர் மீதிருந்த காழ்புணர்வால் அவரும் ஈழத்தமிர் மேல் பாசம் உளள்வர் போல நடித்தார் என்பதே உண்மை. அந்த உண்மை சென்ற சில மாதங்களில் நிரூபிக்கப்பட்டு விட்டது. தலைவர் பிரபா அவர்கள் கருநாய் நிதியின் உதவிகளை தவிர்த்ததன் காரணமும் அதுவே. தவரை திருத்திக் கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரை சில உன்மைகளை மறந்து விட்டது.
1. ஜெயலலிதா ஒரு பார்ப்பனர். பார்பனர்கள் புலிகளுக்கு எதிரானவர்கள். ஆனால் ஈழப் போராட்டத்திற்கு எதிரானவர்களா என்பது இதுவரை தெரியவில்லை.
2. ஈழ ஆதரவு சக்திகள் விழிப்பாக இருக்க வென்டும் என்பது உண்மை, ஆனால் ஜெயலலிதாவின் இந்த தீர்மானத்தை வரவேற்ருத் தான் ஆக வேண்டும். இந்த தீர்மானம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
கட்டுரயில் சொல்லப்பட்டது போல, தமிழ்நாடில் இப்பொ கூடிய விழிப்புனர்வு இருக்கிறது. இதை தமிழர் சர்ர்பு கட்ஷிகள் சரியாக பயன்படுத்த வென்டும்.
இன்னுமொரு முக்கியமான விடயம். காங்கிரஸ் கட்ஷி இப்பொநிறயவே செல்வாக்கை இழந்து விட்டது. ஜெயலலிதா, காங்கிரஸ் கட்ஷிக்கு எதிரானநிலைப்பாட்டயே மேற்கொள்ள சாத்தியக் கூறுகள் அதிகம்.
எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொண்டிருக்கின்றனர் சிங்கள ராஜதந்திரிகள். ஆனால் நாமோ நமக்குச் சார்பாகப் பேசுபவர்களினையும் சந்தேகக் கண்ணோடு பார்த்து எதிரிகளாக்கிக் கொண்டிருக்கின்றோம். போரென்றால் அப்பாவிகளும் இறக்கத்தானே செய்வர் எனக் கூறியவரிடமிருந்து> இலங்கையில் தமிழருக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவற்றை வழங்குவதற்கு இலங்கை அரசு விரும்பவில்லை எனவே பொருளாதாரத்தடை போட்டு அவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டம் எனக் கூறும் அளவுக்கு அவர்மாறியிருப்பது பாராட்டப்பட வேண்டியதே. அவரைப் பாராட்டி அவர் மூலமாக ஏதாவது பயன்பெற விழைவதே இன்றைய தேவை.
வினவும்,இனியொரு தளமும் சமூக கருத்துக்களை முன் வைப்பதை வரவேற்கிறேன்.ஆனால் தீர்வுக்கான வழிகள் கூறாது வெறுமனே எதிர் விமர்சனம் மட்டும் வைப்பது மாற்றங்களுக்கு வழி வகுக்காது.மாறாக நண்டு காலை இழுக்கும் கதை மாதிரியாகவே அமையும்.
ஜெயலலிதாவின் இலங்கை தீர்மானம் மட்டுமே எந்த தீர்வையும் கொண்டு வந்து விடாது.கருணாநிதியின் ஆட்சிக்காலத்திலும் தீர்மானங்கள் மட்டும் திசை திருப்பிய கதைகளும் மக்கள் அறிவார்கள்.ஆனால் ஜனநாயக ரீதியாக தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் அதனை வலுப்படுத்துவதிலுமே திர்மானத்தின் மையபுள்ளிக்கான பாதை திறக்கும்.வெறுமனே கடிதம் எழுதிய கருணாநிதியை விட தீர்மானம் நிறைவேற்றுவதும் அதற்கு ஆதரவு குரல் கொடுப்பதும் அவசியமான ஒன்று.
அரசியல் களத்தில் இன்னும் பல பரிமாணங்கள் இருக்கின்றன.அவற்றுக்கான சிறு புள்ளியே இலங்கை மீது பொருளாதார தடை.இது இலங்கை அரசுக்கான ஒரு எதிர்ப்புக் கருவியே.இதுவே தீர்வை கொண்டு வந்து விடாது.நன்றி.
எதற்கெடுத்தாலும் குலைக்காது கொஞ்சம் மெளனம் காக்கவும் தெரிந்திருக்கவேண்டும் அவரின் கடந்தகால நடவடிக்கைகளைவைத்து இப்போதும் நோக்கவேண்டியதில்லை,இதற்காக எங்களிடம் என்ன பணமா கேட்கிறார்?
இதைக்கேட்டு சிங்கள அரசே குழம்பிப்போயுள்ள வேளையில் நாம் அமைதியாக இருக்கவேண்டாமா?
மழைக்கு காளான் முளைப்பதுபோல் முளைத்த இயக்கங்கள் தமக்குள் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கே முடியாமல் திணறிய வேளையில் அத்தனை இயக்கங்களையும் அவா்கள் யுபி க்கு அளைத்து பயிற்சி கொடுத்தார்களே அது தமது நலன்களுக்காக என்றாலும் நாம் ஒன்றுமையை காட்டியிருந்தால் அவா்களால் எதையும் செய்திருக்க முடியாது,நமது இயலாமையை முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும் அதை விட்டு எம்.யி.ஆா் கருணாநிதியை கூப்பிடுவது தேவையற்ற ஒன்று.
காமாலைக்கண்கலுடன் பார்க்கவென்டாம்
ஒருகாலத்தில் இந்திய சினிமாப்பட்ங்கள் பார்க்க வேண்டாமென்று புலிகள்
தடைபோட்டனர். இப்போது புலிகளை மகிழ்விக்க சினிமாத்துறையினர்
இலங்கை மீது தடைபோடச் சொல்லி நாடகமாடுகின்றன்ர். உலகம் எப்படி மாறிவிட்டது. ஏமாற்ரப்படுவது இலங்கையில் வாழும் தமிழினம் ஏமாறவைப்பது புலம்பெயர் தமிழினம்.-துரை
அது சரி மத்தியஅரசிடமிருந்து வேண்டியதைப்பெற்ற பின் செயாபின்வாங்கிவிடுவார்?இது தெரியாமலா கொலைகாரன் மகிந்தா நடுங்குகிறான்?
சிங்களப் பேரினவாதம் நடத்திய தமிழ் இனப்படுகொலையை ஏழுகோடி தமிழ்மக்களின் பிரதிநிதியான தமிழகமுதல்வர் செல்வி செயலலிதா கண்டித்துநிறைவேற்றியுள்ள இந்த தீர்மானம் தமிழீழ விடுதலைக்கான முக்கிய மைல்கல்லாகும். இதனால் வெகுமக்கள் ஆதரவுஎப்படி திசைமாறும்?தமிழக முதல்வர் தொடர்ந்த ஈழ விடுதலையை முன்னெடுக்காது போனால் காங் மற்றும் கருணாநிதிக்கு ஏற்றபட்ட கதி தனக்கும் ஏற்படும் என்பதை அறிந்துள்ளார்.அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஹலோ தொ(து)ரைநானும் பார்த்துக்கிட்டே வருகிறேன் .உங்கள் பின்னூட்டங்கள் உண்மையை அப்பட்டமாக குழிதோண்டி புதைத்து தமிழர்களை காலத்துக்கும் சிங்களத்திடம் மண்டியிடும் மனப்பாங்கு வெளிப்படுகிறது.நான்அதிகமா பின்னூட்டம் எழுதியதில்ல ஆனா எல்லாத்தையும் படிப்பேன்.இங்க நிறையபேர் நல்ல அரசியல் அறிவுடனும் தர்க்கங்களுடனும் எழுதுகிறார்கள்.ஆனால் உங்கள் பின்னூட்டங்களில் அப்பட்டமாக சிங்கள இன வெறியும் தமிழின வெறுப்பும் தெரிகிறது.உங்கள் ஆழ்மனத்தில் தமிழர்கள் மீதான பொறாமை இருக்கிறது.இது பெரும்பான்மைச் சிங்கள சமூகத்துக்கும் இது உண்டு.அதன் வெளிப்பாடே தமிழினத்தின் மீதான பாலியல் வன்முறைகள்,கொலைகள்,கோயில் இடிப்புகள்,நூலக எரிப்புகள் ,சிதையில் நாய்களை வீசுதல் இன்ன ஏராளமான பிற.சின்ன சின்ன எறும்புகள் கூட சீறிச்சீறீ கடிக்கும் போது தமிழினத்தைப்போன்ற நீண்ட நெடிய பண்பாட்டு வரலாறு மிக்க தமிழினம் எப்படி பல்வேறு கொடுமைகளை தாங்கிக்கொண்டு போராடாமல் இருக்கும்.அடிமைப்படுத்த நினைத்து பஞ்சமா பாதகங்கள் எனகொலைபுரிந்தது சிங்களம்.அடிமைத்தளையை உடைத்து தன்விடுதலைக்காகப் போராடுவது தமிழினம் .அடிமைப்படுத்தவில்லையென்றால் ஏன் போராட்டம் வரப்போகிறது.கொன்றவர்களை விட்டுவிட்டு எப்பவும் புலம்பெயர்மீதுள்ள பொச்செரிப்பையே கொட்டிக்கொண்டிருப்பதால் எப்படி சரி?மூகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித்தமிழர்களை எண்ணிப்பார்த்தீரா?இராசபக்சே எவ்வளவு கொடியவன் என்பது விளங்கும்.