இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழ் சமூகத்திற்கும் ஏனைய சமூகங்களிற்கும் இடையேயான பாலமாக குமரன் பத்மநாதன் என்ற கே.பி தொழிற்படுவதாக சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் “பயங்கவாத” ஆய்வு அமைப்பின் தலைவர் பேராசியர் ரோகான் குணரத்ன தெரிவித்துள்ளார். சமாதனத்திற்காக அளப்பரிய பங்களிப்பை அவர் செய்து வருகிறார் எனவும் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் நான்யங் தொழில் நுட்பப் பல்கலைகழகத்தில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கிவரும் சர்வதேச அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கான ஆய்வுமையம் என்ற தன்னார்வ நிறுவனத்தின் தலைவரான ரோகான் குணவர்தன வன்னி இனப்படுகொலைகளின் போது மகிந்த அரசாங்கத்திற்குச் சார்பான சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்குவதில் பிரதான பாத்திரம் வகித்தவர்.
கே.பி மலேசியாவிலிருந்து இலங்கை அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் தனது பங்கு முதன்மையானது என சம்பவம் நடந்த காலகட்டத்தில் தெரிவித்தவர்.
நாடுகடந்த தமிழீழம் என்பது கே.பி உருவாக்கிய ஒன்றே என்பதும். பிரபாகரன் சரணடைவு தொடர்பில் முக்கிய பங்காற்றிய சர்வதேச ஆயுதக் கடத்தல்காரரான கே.பி இலங்கை அரச உளவாளி என்ற சந்தேகம் முன்னமே பலரால் எழுப்ப்பப்பட்டிருந்தது.
இலங்கை அரச படைகளால் கே.பி எப்போதுமே சித்திரவதை செய்யப்படவில்லை எனவும் எக்ஸ்பிரஸ்பஸ் என்ற செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய தொலைபேசிச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச படைகளால் கே.பி எப்போதுமே சித்திரவதை செய்யப்படவில்லை எனவும் எக்ஸ்பிரஸ்பஸ் என்ற செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய தொலைபேசிச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றவாளிகளோடும், இனப்படுகொலைகளின் சூத்திரதாரிகளோடும், பாசிஸ்டுக்களோடும், போரின் பின்னர் வெளிப்படையாகவே இணைந்துகொண்ட நூற்றுக்கணக்கானோரில் கே.பியும் ஒருவர்.?
இனியொரு இணையத்தில் உங்கள் தகவல்களும் கட்டுரைகளும் எனக்கு உள்ளேயும் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. நான் முன்பு புலிகள் இயக்கத்தின் போராளி. பல ஆண்டுகள் புலிகளில் வேலை செய்து வேறு நாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்டவன். பொட்டம்மான் தான் என்னை இங்கு அனுப்பியிருந்தார். உண்மையில் பொட்டம்மானோ பிரபாகரனோ முன்னெடுத்த போராட்டம் தவறான பாதை என்பது இப்போது எனக்குத் தெரிய வந்துள்ளது. காலம் கடந்த சுடலை ஞானம் என்று கூட நீங்கல் நினைக்கலாம். இணையத் தளங்களைப் பார்க்க வாய்ப்பாக உள்ள நாடு ஒன்றில் வாழ்வதால் பலதையும் அறிந்து கொள்ள முடிகிறதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
கே.பி பல குற்றங்களுக்காக உலகம் முழுவதும் தேடப்படுபவர். ஆனால் ஆயுதங்களைக் கடத்துவதே அவரின் நோக்கம். விடுதலைக்காகத் தான் எல்லாம் செய்தவர். பிரபாகரன் இறந்து போனதை முதல் முதலில் ஒத்துக்கொண்டவர்.
இங்கிலாந்தில் வாழும் அம்பலவாணர், கனடா இந்திரன் பத்மநாதன், நெடியவன் சிவா போன்ற பல பேரை சந்தித்து சுவிசில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் கே.பி கலந்து கொண்டார். இங்கு இருக்கும் புலிகளின் பணத்தைக் கையாடியவர்கள் லிபிரியாவில் புலிகளின் கப்பல்களை கிரீஸ் நாட்டவருக்கு விற்று மேலதிகமாகவும் பணத்தைச் சுருட்டினார்கள். கே.பி இதற்கு எல்லாம் கணக்குக் கேட்ட போது தலைவர் வந்தால் தான் பணத்தைத் தருவோம் என கூற ஆரம்பித்தனர். தலைவர் வரமாட்டார் அவர் இறந்து விட்டார். என்று கே.பி கூறியதும், தலைவர் உயிரோடு தான் இருக்கிறார், நாம் பணத்திற்குக் கணக்குக் காட்ட மாட்டோம் எனவும் கூறினர்.
ஏற்கனவே இலங்கையிலிருந்து பாதிக்கப்பட்ட போராளிகளை சுவிசிற்கும் பல நாடுகளுக்கும் கே.பி அனுப்பி பணத்தை செலவு செய்திருந்தார். பணத்தை வைத்திருப்பதற்கு மட்டுமே தலைவர் இருக்கிறார் என்று நெடியவன் மற்றும் பல கதைகளைப் பரப்பினர்.
கூட்டம்பெரும் சண்டையில் முடிவடைந்தது. கே.பி மலேசியாவிற்கு அகதியாக வந்திருந்த புலிப் போராளிகளைப் பார்க்கச் செல்லும் வேளையில் பணத்தைப் பற்றிப் பேச நெடியவன் குழுவையும் அழைத்திருந்தார். அவர்கள் போகவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறைக்கு கே.பி யை காட்டிக் கொடுத்தனர். இந்தியா விசேட விமானத்தில் இலங்கைக்கு அவரைக் கொண்டு சென்றது. மறு நாளே இலங்கைக்கு வந்த இரண்டு இந்திய வைத்தியர்கள் நர்சில்ஸ் முறை மூலம் கேபி ஐ விசாரித்து உண்மைகளைப் பெற்றனர், அதன் பிறகு கே.பி இற்கு ஒவ்வொரு நாளும் போதை மருந்தை கொடுத்து அதற்கு அடிமையாக்கினர். இப்போது கே.பி போதைக்கு அடிமை. சுய நினைவில் இல்லை. அரசாங்கம் சொல்வதைச் செய்கிறார்.
சிங்கப்பூரி வசிக்கும் ரோகான் குணத்திலக என்ற பயங்கரவாதி தான் கே.பியை சித்திர வதை விசாரணைக்கு இந்தியாவோடு சேர்ந்து ஒழுங்கு செய்தவன்.
எல்லாமே தவறாகப் போய்விட்டது. இப்போது நாங்கள் புதிய பாதைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கும் ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போர்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் புலிப் பினாமிகள் சுருட்டிய பணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் வீடுகளுக்கு முன்னால் போராட்டம் நடத்த வேண்டும். இப்படியாவது மக்கள் போரட்டம் தொடங்கட்டும். எம் மக்கள் விடுதலை பெறட்டும்.
இது நல்ல கற்பன senthan:
“கே.பி மலேசியாவிற்கு …………. நெடியவன் குழுவையும் அழைத்திருந்தார். அவர்கள் போகவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறைக்கு கே.பி யை காட்டிக் கொடுத்தனர். இந்தியா விசேட விமானத்தில் இலங்கைக்கு அவரைக் கொண்டு சென்றது. மறு நாளே இலங்கைக்கு வந்த இரண்டு இந்திய வைத்தியர்கள் நர்சில்ஸ் முறை மூலம் கேபி ஐ விசாரித்து உண்மைகளைப் பெற்றனர், அதன் பிறகு கே.பி இற்கு ஒவ்வொரு நாளும் போதை மருந்தை கொடுத்து அதற்கு அடிமையாக்கினர். இப்போது கே.பி போதைக்கு அடிமை. சுய நினைவில் இல்லை. அரசாங்கம் சொல்வதைச் செய்கிறார்.”
றொகான் குணரத்னவிடமும் கற்பனைக்குக் குறைவில்லை என்பதை அவரது அண்மைய கட்டுரைகள் சில உறுதி செய்தன.
ஐயகோ தமிழ் மக்களை எப்படி தமது உரிமைகளுக்காய் தயார் படுத்துவது அடக்கு முறையில் இருந்து மீள் எழுவது என்றில்லாமல் எல்லா தமிழ் இணையங்களும் கேபி, நெடியவன், பிரபாகரன், பொட்டு அம்மான் கதைகளை சொல்லிக்கொண்டு இருக்கின்றன. ** பழக்கப் பட்ட தமிழ் இணையங்களில், இன்னொரு இணையமும் விதிவிலக்கு அல்லவே! என்பதில் என்னதான் ஆச்சிரியம் உண்டு! ?
நீங்கள் சொல்லுவதில்நியாயம் உண்டு.
நீங்களே தொடக்கி வைக்கலாமே. (இப்படிப் பேரை வைத்துக் கொண்டு செய்வது கடினம் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன். என்னுடையது வலும் திறமென்றல்ல).
i do not know who the hell Gunaratne. Is he a professor. The traitors assit them to become super rich.
KP is another traitor
முன்னொரு காலத்தில் இப்படித்தான் எல்லோரும் இயக்கம் என்றூ கதை விட்டார்கள் இப்போது இருந்ததாக கதை விடுகிறார்களோ?கேபி போதையில் இருப்பது போலவா பேசுகிறார்?நாடு கடந்த அரசு எம்பிக்களாக லண்டனில் இருப்போரை பார்த்தாலே புரியும் வெறூம் வெற்றூப் பேப்பர்தான் என்றூ இலங்கை அரசு பயப்படுவதாய் புலுடா விட சில ஊடகங்கள்.ஒன்றூ மட்டும் உண்மை தமிழர் இனிமேலாவது கூட்டமைப்பை பலப்படுத்தும் காரியத்த செய்ய வேண்டும்.அய்யா சம்பந்தர் திசை காட்டும் வழியில் சென்றால்தான் இனி தமிழர்க்கு வாழ்க்கை/