அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.
இதுதொடர்பாக சிங்கள வார இதழான ராவய பத்திரிகைக்கு செவ்வியளித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தாவின் செயலாளர் நெல்சன் ஏதிரிசிங்கம், ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி ஆதரவளித்த ஜனாதிபதி வடக்கின் பெரும்பாலான மக்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் அர்த்தமில்லையென்பதால் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட அமைச்சர் தீர்மானித்ததாகக் கூறியுள்ளார்.
அத்துடன் டக்ளஸ் தேவானந்தா தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருந்ததாகவும் மக்களின் வேண்டுகோளுக்கமைய அந்தத் தீர்மானத்தைக் கைவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதன் பின்னரே அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தமை நினைவுட்டத்தக்கது.
நினைவிருக்கிறது அப்பர் அவர்களே சாதி கேட்டு எம்மை தனியே நிறூத்தி வைத்தீர்கள் இன்றீ உங்கள் நிலமையே தனியே நிற்பதாக் ஆகி விட்டதே? என்ன கொடுமை பார்த்தீர்களா?
யாரடா பெரிய வெள்ளாலன் கேட்டார்கலெ இன்ரைக்கு இந்த வெள்ளானனையும் பிடித்து வெளீயே விட்டு விட்டார்க்ளோ?என்ன கொடுமை அய்யா இது?
கருணாநிதிக்கு ஈழத்தில் ஒரு வாரிசு இல்லையென இனி யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. அண்ணன் டக்ளஸ் உள்ளார். அவரது புகழ் பாடும் “அருந்ததி” நட்சத்திரங்கள் இது குறித்துப் பெருமைப்படலாம்.
டக்ளஸை குறை சொல்வதை நிறுத்துங்கள். தன்னிகரற்ற தலைவர். தங்க மகன். செயல் வீரர். ரவிராஜ் ரமேஸ் போன்றவர்களை கொன்ற மேதை. கடந்த 19 வருடங்களாக சகல அரசுகளிலும் பதவி வகித்த ஒரே யொரு உலக அமைச்சர். தமிழ் மக்களின் எதிரியையே தன் வசம் வைத்திருக்கும் ஈழத்து கருணாதி. கருணாநிதி வழியில் கல்லாவை நிரப்பும் கல்லறை தூதன். என்னிடம் நிறைகள் மட்டுமே உண’டு எனக் கூறி விமர்சகா;களை தினறடித்த் கலாநிதி.
இதை அருந்ததியை நேராகவே புலிக்கு காட்டிக்கொடுப்பது நேர்மாக இருக்கும். அருந்ததிக்கு யாராவது அடித்தால் அதற்கு இனியொருவுக்கும் பங்குண்டு.
உங்கள் நாக்கு எதை வேண்டுமானாலும் பேசுங்கள்
உங்கள் போனா எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால் நாளைய வரலாறு உங்களை உங்கள் கல்லைறைக்குள் இருந்து கூட தோண்டி வந்து உங்களை விசாரணை நடத்தும்.
இது நீங்கள் விமர்சிக்கும் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் பொருந்தும். உங்களுக்கும் பொருந்தம். டக்ளஸ் வெற்றிலையில் கேட்ட போது அதை துரோகம் என்றீர்கள். இப்போ தனித்து கேட்க இருப்பதாக கூறும் போது அதையும் பிழை என்கிறீர்கள். அப்ப எது சரி!……. உங்கள் நேறடிப்புகளால் நேர்மை செத்து விடாது. சேறடித்த உங்கள் கரங்களில் இழுக்குண்டு அதை கழுவுங்கள்.
இங்கு இயங்கும் தமிழர் விரோதிகள் என்ன முகத்துக்கு முக்காடா போட்டுக்குகொண்டு “அரசியல்” செய்கிறார்கள்.
முன்னைய இந்து சமய, கலாச்சார அம்மைச்சரும், தற்போதைய சமூக சேவைகள் அம்மைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆனவருமான கவுரவ மாண்பிமிகு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளது, தான் சேர்ந்துள்ள தற்போதைய கூட்டணியை, தான் கடந்த காலங்களில் முழங்கி வந்த மஹிந்த சிந்தனயை மக்கள் ஏற்க்கவில்லை என்பதை மறைமுக நேரடியாக கூறுகிறதா? அல்லது கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மகிந்த தலைமையிலான அரசு அடுத்த தேர்தலில் பாராளுமன்றத்தில் பெருண்பான்மையை கைப்பற்ற முடியாது என நினைக்கிறாரா?
அல்லது குடும்பத்தை வெளிநாட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கும் மண்டையன் சுரேஷ் ஆன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரன் மஹிந்த சிந்தனையை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன, கூட்டமைப்பின் கொள்கை முடிவை ஏற்று, அதற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ்மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்து அது மாத்திரமல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ்மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்பதையும் வடகிழக்கு என்பது தமிழ்மக்களின் பிரிக்கப்பட முடியாத தாயகம் என்பதையும் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயலும் சுயநல சக்திகளுக்குத் தமிழ்மக்கள் சரியானபாடம் புகட்டியுள்ளனர் என்று கூறும் நிலையில், தானும் “மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி! வடகிழக்கு இணைந்த தனி அலகு! என்று கொஷத்திர்ற்கு மேல் கோஷம் இட்ட நிலையில், தன் சார்ந்த, வாக்கு கேட்ட தற்போதைய ஜனாதிபதி வடகிழக்கு இணைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிய நிலையில், தான், தன் சர்வதேசத்தினர் கூடிக்குலாவி கொண்டாடிய J.V.P யினரும் தனித்து நிற்கும் நிலையிலும் இன்று வடகிழக்கு இணைந்த தனி “அழகு”! ஆக போன நிலையில் தனித்து போட்டியிட நினைக்கிறாரா?
இதே நேரம், தெற்கிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் படையெடுத்துவரும் பெரும்பான்மையின வீதியோர வியாபாரிகளால் யாழ் நகரம் திண்டாடி வருகின்ற நிலையில் அவர்கள் எழுந்தமானமாக வீதியோரங்களில் கடைகளை அமைத்து வருகின்றனர். நல்லூர் உள்ளிட்ட பிரதான இந்து ஆலயங்களும் இதற்குத் தப்பவில்லை. இந்த அத்துமீறல்கள் தொடர்பில் வணிகக் கழகங்கள் ஆலய நிர்வாகங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பலவும் மாநகரசபை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ள நிலையிலும் கடந்த மாநகரசபை தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான மாநகரசபை முதல்வர் தனது தென்னிலங்கைத் தலைமைக்குப் பயந்து மாநகரசபை பணியாளர்கள் தமது கடமைகளை ஆற்றத் தடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அரசு ஆணைக்கு இணங்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும், உறுப்பினர்களையும் சேர்த்து 20,000 இற்கு மேற்பட்ட அப்பாவி மக்களையும் கொன்றோழிப்பதர்க்கு அனுசரையாலனாகவும், நிறைவேற்று பொறுப்பாளனாகவும் இருந்த சரத் பொன்செகராவை எதித்து நம் அம்மைச்சர் பிரசாரம் செய்யவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தமிழர் விடுதலைக் கூடனி தலைவர் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் தாமும் தனியே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் கூத்தமைப்பு மக்களை தவறான வழியில் இட்டு செல்வதாகவும், டக்குழசு அம்மைப்பினரின் கப்பம், கொலைகளினால் மக்கள் விரக்தியடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். (Anandasangaree said that the Tamil National Alliance (TNA) was misleading Tamils, adding that although the Eelam People’s Democratic Party (EPDP) of Minister Douglas Devananda was contesting alone, people would not vote for it as they were fed up with extortion and killings committed by armed paramilitary groups.
“If the government does not contest, we can win over five seats. I will go to the people with my 15-point manifesto,” he said. )
இவரின் கூற்றை நியாயப்படுத்துவதற்கு, கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்பும் தீவகத்தில் வாழ்ந்த பெருன்பான்மையான மக்களை சாதி, வர்க்க அடிப்படையில் கடற்படையுடன் இணைந்து 90 களில் துரத்தி தற்போது தனி ஆட்சி புரிந்து வரும் நிலையில் அங்கு தற்போது இருக்கும் மக்கள் தமது கோரிக்கைக்கு முழுவதுமாக வாக்களிக்காத நிலையில் காடுமிராண்டித்தனமான முறையில் துன்புறுத்தல்கள் நடந்துள்ளதாக அறியப்படுகிறது. மேலும் இதில் அவருடன் கூடத்திரியும் சர்வதேச அமைப்பினரும் சம்பந்தப்படதாக செய்தி வரும் நிலையில், சர்வதேச அமைப்பினரும் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பதின் உண்மை ஆராயப்படுகிறது. (The actions of Eelam People Democratic Party (EPDP) thugs on the northern island of Kayts last Thursday, following the January 26 presidential election. Clearly shocked by the low voter turnout and lack of support for President Mahinda Rajapakse, an EPDP gang physically attacked dozens of people—young and old—berating them for not voting, or for voting for opposition candidate General Sarath Fonseka.
The EPDP, a Tamil political party, has a paramilitary wing that operates closely with the military on Kayts and neighbouring islands. The party is a member of Rajapakse’s ruling coalition and its leader Douglas Devananda is a cabinet minister. Over the past four years, since the Rajapakse regime restarted the war against the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE), the EPDP has operated closely with the military in intimidating and terrorising the local population.
At around 5 p.m. on January 28, a gang of EPDP thugs toured the villages of Ampihainagar, Cheddipulam, Velanai Ward Four, Thuraiyur and Puliyankoodal on Kayts Island in a Hi-Ace van. Most of the villagers are poor fishermen. The thugs were armed with large wooden clubs.
The gang first accused villagers of not voting. When people showed their hands marked with indelible ink to prove they had voted, the thugs denounced them, saying: “You voted in the election for Fonseka. We have helped you in the past. You have not shown gratitude toward us and the government.”
In one village after another, the EPDP gang, without the slightest provocation, started beating up male villagers on the streets. Several dozen people were attacked. Some victims wanted to get medical attention at the hospital but did not go, fearing further attacks. For the same reason, those who did go to the hospital did not lodge complaints with the police even though they knew the names and political affiliation of their attackers.
On Friday morning, the same gang returned to Ampihainagar. Obviously aware of local resentment, the gang leader made the ludicrous claim that his thugs had carried out the rampage to avert plans by navy intelligence to shoot people. In reality, the EPDP functions as an adjunct of navy intelligence on Kayts.
On Friday evening, the EPDP returned again and demanded that villagers take part in a protest on Saturday in the main northern town of Jaffna. When some people asked why, they were told not to ask questions and references were made to Thursday’s thuggery and violence.
The EPDP’s hartal or general shutdown on Saturday was a desperate attempt to show support for party leader Devananda, who had theatrically declared he was about to step down because of the government’s poor showing in Jaffna. The EPDP pressured shops to close and bus services to halt. The party quickly ended the protest when security forces demanded the resumption of normal work.
Kayts was the only electorate in the northern Jaffna district in which Rajapakse achieved a narrow majority over Fonseka. That was certainly not because of popular support for Rajapakse or the EPDP. A number of people told that the EPDP had been engaged in ballot stuffing. Most of the island is under the tight control of the navy.
In the end, EPDP leader Devananda did not step down, despite his party’s humiliating failure in the district. He told the Jaffna-based Thinakkural: “As people were misled they did not vote for the president [Rajapakse]. I am not going to resign as I was asked by the president and people’s representatives not to do so.”
The EPDP has no significant base among Tamils on Kayts or anywhere else. The party has degenerated into an organisation of political gangsters that relies on government handouts to bribe people into supporting it and, where that fails, intimidation and thuggery.
On March 22, 2007, SEP (Socialist Equality Party (Sri Lanka) member Nadarajah Wimaleswaran and his friend Sivanathan Mathivathanan disappeared in Kayts while they were travelling to Ampihainagar. They have not been seen since. All the evidence gathered by the SEP strongly points to the involvement of the navy and their associated paramilitaries such as the EPDP, which have been responsible for hundreds of similar “disappearances” (see, “Sri Lanka: Two years since the disappearance of SEP member Nadarajah Wimaleswaran”) ) இப்படிப் பல…..தொடர் உண்மைகள். இந்த இலட்சணத்தில் மக்களுக்கு சுய தொழில் வேலைவாய்ப்பிற்காக எத்தனை தையல் இயந்திரங்கள், நீர் இறைக்கும் கொடுத்தாலும் இவ் அடாவடித்தனங்களினால் செய்யும் நற்சேவைஎல்லாம் கானல் நீராகிறது. இதை டக்கிளசு உணர வேண்டும், இதற்க்கு அவரின் அமைப்பில் பெரிய மாற்றம் வேண்டும்.
இல்லாவிடில் இப்படியே ஒரு பக்கம் மக்களுக்குச்சேவை செய்துகொண்டு,மறுபக்கத்தில் மனித உரிமை மீறல் அடாவடித்தனங்களையும் புரிந்துக்கொண்டு வரும் தேர்தலில் கூத்தமைப்பிற்கு விட்டுக் கொடுக்கப்போகிறாரா?
மேலும், தேர்தல் முன் அம்மைச்ச்சகர் கூறியது, “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்து அவருக்கு இன்னொரு சந்தர்ப்பத்தை நாம் வழங்க வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கான முழுப்பொறுப்பையும் ஈ.பி.டி.பி. ஏற்றுக்கொள்ளும். அதனை நான் உறுதிபடக் கூறுகின்றேன்”
மேலும் இவரைப்பற்றிய செய்தியில் அறியப்படுவது, ஆரம்பத்தில் ஈழப் போராளியாக இருந்து பின்னர் ஜனநாயக அரசியலுக்கு மாறிய ஈ.பி.டி.பி.யின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா- இலங்கையில் இப்போது சமூக நலத்துறை அமைச்சர் 1986-ல் சென்னையில் இவர் தங்கியிருந்தபோது, பொது மக்களிடம் ஏற்பட்ட தகராறில் இவர் துப்பாக்கியால் சுட்டபோது ஒருவர் இறந்தார். நான்கு அப்பாவி பொது மக்கள் காயமடைந்தனர். சென்னை சூழைமேட்டில் இந்த சம்பவம் நட்ந்தது. அப்போது அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீதும் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும் இந்திய உளவு நிறுவனத்தின் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்.
இதே டக்ளஸ்தான் சென்னையில் 10 வயது 10 வயது பையனைக் கடத்திப் போய் ரூ.7லட்சம் பணம் கேட்டார் என்று ஒரு வழக்கு கீழ்பாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது பின்னர் இவர் 1989-ல் சென்னையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஓராண்டு கழித்து விடுதலை செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்ய வைத்து , அதன் பிறகு இந்திய இராணுவ விமானத்தில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது- இந்திய உளவு நிறுவனமாகிய ‘ரா’ தான் என்று ‘டெகல்கா’ வார ஏடு(ஜூலை 1,2006)எழுதியுள்ளது(Sources say,it ‘RAW’ which Air lifted Deavanda to Jaffna on an Indian army helicopter to pit him against LTTE)
இன்று புலிகளும் இல்லாத நிலையில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் ஐக்கியம் இல்லாமையால் அனைவரும் ஒன்றிணைந்து பேரம் பேச முடியாத நிலை உள்ளது என்பதை இவர்கள் உணர்வார்களா?
அதே நேரம் புலித் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஐக்கியப்பட்டார்கள், என்ன நடந்தது?
திரு. ஆனந்தசங்கரி (TULF), திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் (PLOTE), தோழர். ஸ்ரீதரன் (EPRLF) ஐக்கியப்பட்டார்கள், எதைச் சாதிக்க முடிந்தது?
ஆயுதப் போராட்டம் எமது மக்கள் அனைத்தையும் இழந்து கையேந்தும் நிலைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளது, சனம் தான் இங்கும் அங்கும்……ஹ்ம்ம்ம் என்னைப்போல் புலன்பெயர்காரர் இணையத்தில் செய்தி போடலாம், கருத்து எழுதலாம்…..சிலர் முன்பு புலிக்கு வால் பிடித்தவர்கள், அமைப்புகளில் இருந்து இனி இதுவெல்லாம் இந்த தொடர்பெல்லாம் தேவையில்லைஎன்று ஒதுங்கியிருந்தவர்கள், தற்போது தாம் நம்பிய புலிகள் அழிந்த நிலையில் மாற்று அமைப்புகள் அரசாங்கத்துடன் உறவாடும் நிலையில்……….சிலர் எங்கு வால் பிடிக்கலாம் என்று….. இப்படியே எம் இனம் போகிறது……
ஆனால் தமிழ் மக்கள் விரும்புவது தமிழ்த் தலைமைகளின் ஒற்றுமையே!
இன்று இருக்கும் தமிழ்த் தலைமைகள் எம்மக்களின் அபிலாஷைகள், தேவைகளை உணர்ந்து, தாம் விட்ட தவறுகளை மக்கள் முன் வைத்து, ஓர் தேசிய நலன் சார்ந்த (தம் கட்சிகளின் நலன் மட்டும் சாராமல்) அரசியலை எடுப்பார்களா?
எல்லாவற்றிற்கும் மனித நேயம் வேண்டும்!……..ஹ்ம்ம்ம்.
நன்றி!
தோழமையுடன்,
அலெக்ஸ் இரவி.
டக்கிளஸின் முடிவு அந்தரங்கசுத்தியுடன் ஆனதா? என்பது சந்தேகக்கண் கொண்டு பார்க்கவேண்டியுள்ளது. இருந்தும் தான் வடக்கின் வசந்தத்தின் மூலம தன்னாலானதை செயதும் தான் மக்களால் நிராகரிக்கப்பட்டதிற்கான காரணம்> தான் நிற்கும் இடம்> (சிங்களப் பேரினவாதத்துடன) பிழையென்று உணாந்துள்ளார் என நினைக்கின்றேன். இதுதான ஒட்டுமொத்த ஜனநாயக நீரோட்டக்காரர்களின் நிலையும். புலியிருந்த காலத்தில் வடக்கின் வசந்தம் கிழக்கின் விடிவெள்ளி கொள்கை கோட்பாடு சிறசில வேளை எடுபட்டதாகவே காட்டப்பட்டது; காரணம் புலி மக்களை ஓடுக்கிய நிலையாலேயே. புலியை இல்லாதொழிக்கப் புறப்பட்ட மகிநதா> மக்களையும் மாபெரும் மனிதப்படுகொலைகளுக்கு உள்ளாக்கினார். முட்கம்பி வேலிக்குள் > குடும்ப உறவுகளையே பிரித்து பரிதவிக்க விட்டார். அந்த மக்களின் > கூரியவாளுக்கு ஒப்பான கண்ணீர்தான்> உங்கள் வசந்த விடிவெள்ளிகள் எல்லாவற்றையும் கணக்கில் எடுக்காது> உங்களை தெர்தலுக்கு ஊடாக விரட்டியடத்தது;. இதை நீங்கள் பட்டறிந்துள்ளீர்கள. இதற்கு தமிழ்மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டார்கள் என்பது அரசியல அறிவீனமே! இப்போக்கில் எதிர்கால மகிந்தாவின் அரசியல்> ஜார் மன்ன அரசியலே! ஜனநாயக நீரோட்டத்தில் யாரும் கடந்தகாலம் போல் நீச்சலடிக்க முடியாது. உங்கள் முடிவை எதிர்காலத்தில் தமிழ்மக்கள் நலன் சார்ந்ததாக எடுத்தால் மக்களால் நிராகரிக்கப்;படமாட்டீர்கள்!
அரசுடன் கூடியிருப்பவர்கள் சுயமாக இயங்க முடியாது. வெற்றுப் பேச்சுதான் இவர்களின் கதியாக இருக்கும். தமிழ் மக்களின் உரிமை சரியான தலைமை என்பதெல்லாம் வெறும் வெட்டிப் பேச்சுத் தான்;
டக்கியால் கட்டாக்காலி நாய்களாக திரிபவர்களை கட்டுப்படுத்த முடியாது. இவர்கள் அரச படையின் கீழ் இயங்கும் ஒரு கட்டாக்காலி நாய்களை இவர் ஒனறும் செய்யமுடியாத வேளையில் மகிந்த மாந்தையாவை எதிர்த்து இவரால் மாத்திரமம் அல்ல. புதியெதிர்ப்பு அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களால் கூட எதுவும் செய்து விடமுடியாது. அனைத்து தமிழ் கட்சிகளும் தேர்தலை நம்புவர்கள்;
மக்களை நம்பாதவர்கள்
சட்டத்தின் மூலம் மாற்ங்களை கொண்டுவரமுடியும் என நம்புவர்கள்.
எப்போ அரசு தம்மை பேச்சுக்கு அழைக்கும் இன்னும் எவ்வளவு நாட்கள் நாடாளுமன்ற ஊதியத்தைக் கொண்டு சொகுசுவாழ்க்கை வாழமுடியும் என்று நம்புவர்கள்.
பசில் ராஜபட்சி வாயை மூடு என்று எல்லோர் மத்தியும் கூறியவேளை சொரணை இன்றி வாயை மூடியவர் என்ற பெருமைக்கு உரியவர். டக்கி>சிறிதர்> சித்தா> சங்கரி> ஏன் சம்பந்தி- சுரேஸ் போன்றவர்ளா; எதுவும் செய்து விட முடியாது. அப்படிச் செய்வார்கள் என்றால் சரத்பொன்சேக்காவின் கதியே இவர்களுக்கும். மக்களை நம்பாது அரசியல் செய்யும் எல்லோர் கதியும் அதுதான்.