வறிய மூன்றாமுலக நாடுகளில் சுரண்டப்படும் வளங்களும் பணமும் ஐரோப்பிய நாடுகளின் உயர்குடி வியாபாரிகள் சொகுசு வாழ்க்கை நடத்தப் பயன்படுகிறது. உலக முதலாளித்துவத்தின் தலைமையகமாக மேற்கு நாடுகளைப் பாதுகாப்பதற்கு அதனைப் போராட்டங்களும் புரட்சிகளுமற்ற சமாதானப் பிராந்தியமாகப் பாதுகாக்க வேண்டிய தேவை அதிகாரவர்க்கத்திற்கு உள்ளது. அதனால் வேலையற்றவர்களுக்கும், குறைந்த ஊதியத்தைக் கொணவர்களுக்கும் அரசுகள் மானியங்களை வழங்கி வந்தன.
இன்று உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள முதலாளித்துவ நெருக்கடியின் பின்னர் தமது நாடுகளிலுள்ள வறிய மக்களையே ஒட்டச் சுரண்ட முதலாளித்துவம் தீர்மானித்துள்ளது. அதன் காரணமாக சிக்கன நடவடிகை என்ற தலையங்கத்தில் மானியக் குறைப்பு நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபட்டுள்ளன.
தனது வருமானத்தில் முக்கால்வாசிப் பகுதிய வீட்டு வாடகைக்கும் கடனுக்கும் வழங்கிவரும் சாமானிய ஐரோப்பிய மனிதனை இந்த நடவடிக்கைகள் வறுமையின் எல்லை வரை அழைத்து வந்துள்ளது.
அரசுகளில் சிக்க நடவடிக்கைகளால் 93 ஆயிரம் பிரித்தானியக் குழந்தைகள் கடந்த வருடம் அரைப் பட்டினியில் வாடியுள்ளனர் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
coalition of churches என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கடந்த வருடம் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு மில்லியன் தொகையானவர்களுக்கு மானியங்கள் நீக்கப்பட்டதாகவும் குழந்தைகளின் பட்டினிக்கு இதும் ஒரு காரணம் என்றும் அறிவித்துள்ளது.
இதன் மறு பக்கத்தில் பிரித்தானிய அரசு நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.