அமெரிக்காவில் இரட்டைக்கோபுரத் தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இராணுவ மயமாக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தலையங்கத்தில் உலகின் சந்து பொந்துக்கள் எல்லாம் அமெரிக்க அரசு தனது கொலைக் கருவிகளுடன் புகுந்துகொண்டது. ஆப்கானிஸ்தானை அடிமைகளின் தேசமாக்கியது; ஈராக்கில் ஒரு மில்லியன் குழந்தைகளைப் பட்டினி போட்டுக் கொன்று போட்டது. 2001 ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தப்பட்டு இந்த வருடத்தோடு 13 வருடங்கள் கடந்துவிட்டன. ஒரு தசாப்தத்தில் பல உண்மைகள் முற்றிலுமாகப் புதைக்கப்பட்டன. ஈழப் போராட்டத்தின் துயரம் பிழைப்புவாதிகளின் கழிவறைகளில் புதைக்கப்பட்டதைப் போன்றே அமெரிக்க அரசின் பயங்கரவாதமும் காலத்தோடு கரைந்து போனது.
2013 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் மசிமோ மசூக்கோ என்ற இயக்குனர் 9/11 தாக்குதல் தொடர்பான ஆதாரஙகளைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார். மைக்கல் மூர் என்பவர் தாக்குதலின் சற்றுப்பினதாக ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்து இயக்கியிருந்தார். மைக்கல் மூரின் திரைப்படத்தின் உண்மைகளை மேலும் ஒருபடி நகர்த்திச்சென்று வெளியிடப்பட்டுள்ள September 11 – The New Pearl Harbor என்ற திரைப்படம் உலகின் ஒவ்வொரு குடிமகனும் பார்க்க வேண்டிய வரலாற்று ஆவணம்.
ஒரு காணொளியில் மட்டும் வெளிக்கொண்டுவர இயலாத நீண்ட ஆதாரஙகளுடன் வெளியாகியிருக்கும் இந்த ஆவணம் மூன்று பகுதிகளாலானது, ஐந்து மணி நேரம் வரை நீண்ட இந்த ஒளிப்படத்தை ஒரே தடவையில் பார்த்து முடிக்க இயலாது என்றாலும் உலக மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 12 வருடங்களாக 9/11 நடைபெற்ற பல விவாதங்களின் அதன் பின்புலத்திலுள்ள உண்மைகளின் விலாவாரியாக திரைப்படம் முழுவதும் கூறப்பட்டுள்ளது.
கடந்து சென்றவற்றை எதிர்காலத்திற்கான பாடங்கள். இன்றுவரை உலகை இராணுவமயமாக்கும் நோக்கத்துடன் 9/11 நடத்தப்பட்ட தாக்குதலை அமெரிக்க அதிகாரவர்க்கமே திட்டமிட்டது என்ற உண்மை விவாதிக்க முடியாத ஆதாரங்களுடன் நிறுவியுள்ள இத் திரைப்படத்தில் இயக்குனரின் உழைப்பு அளப்பரியது.
அமெரிக்காமட்டும் இல்லையெனில் உலகை முஸ்லீம் பயங்கரவாதம் விழுங்கியிருக்கும்…
But, who are the creators…?
Probably Jesus, Bramma or Allah or all combined together ?
அறிவு கெட்ட முண்டங்கள். பதிவுக்கு பதில் சொல்ல நாதியற்று பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கும் பன்றிகள்
அளிப்பதும் நானே ஆக்குவதும் நானே எனையன்றி ஒரு துரும்பும் இவ்வுலகில் அசையமுடியாது நான் சொல்வதை நீங்கள் யாவரும் நம்பவேண்டும் நான் அழச்சொன்னால் நீங்கள் அழவேண்டும் சிாிக்கச்சொன்னாலும் அதுவே என் நலனே முக்கியம் அந்த நலனை தக்கவைக்க நான் யாரையும் யாருடனும் மோதவிட்டு அழிப்பேன்.
நான் உருவாக்கியவா்கள் யாா்? முயாதீன்கள்,தாலிபான்கள்,இஸிஸ்கள்,சடாம் குசைன்கள்,கடாபிகள்,பின்லாடன்கள் கோகோகாரம்கள்.
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!… போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கண்ணனுக்கே!… கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான், கண்ணனே கொலை செய்கின்றான்!… காண்டீபம் எழுக, நின் கைவண்ணம் எழுக, இக் களமெலாம் சிவக்க, வாழ்க!
Ok, what about Noble Peace Prize winner Malala Yousafzai…?
What about Malala ? BTW it is Nobel not Noble.