ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் 84 வயது பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி. இவர் ஜார்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக பல பத்தாண்டுகளாக போராடி வந்தவர். பழங்குடியின மக்களுக்கு எதிரான மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கைகளை விமர்சித்தவர். இவர் இன்று உயிருடன் இல்லை. மோடி அரசின் அடுக்குமுறையால் இவர் கொல்லப்பட்டுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் என்ற இடத்தில், நடந்த கலவரத்துக்கு 84 வயது ஸ்டான் ஸ்வாமி காரணம் என கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அவரை அக்டோபர் 2020-ல் கைது செய்தது. அவர் இதுவரை பீமா கோரேகான் பகுதிக்கு சென்றது கூட கிடையாது. UAPA எனப்படும் தேசவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் என்ற கடுமையான பிரிவில் அந்த முதிய பாதிரியாருக்கு எதிராக வழக்கு பதிந்தனர். ராஞ்சியிலிருந்து 1300 கி.மீ அலைக்கழித்து மும்பை சிறையில் அடைத்தனர்.
இந்தியாவிலேயே இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் முதல் 84 வயது நபர் இவரே. அவருக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கம்பி கட்டும் கதைகளை விட்டனர். ஆனால் ஆதாரத்தை சமர்பிக்கவில்லை என்.ஐ.ஏ அம்முதியவருக்கு ஏற்கனவே பார்கின்சன் எனும் நடுக்குவாத நோய் உள்ளது. BHL எனப்படும் இரு காதுகள் கேளாமையும் உண்டு. அக்டோபர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் ஜாமின் மறுத்தனர்.
நடுக்குவாத நோய் காரணமாக அவரால் தண்ணீர் டம்பளரை கூட கையில் ஏந்தி குடிக்க முடியாது. அவர் வைத்திருந்த உறிஞ்சு டம்பளர் மற்றும் ஸ்ட்ராக்களை பிடுங்கி வைத்துக்கொண்டது என்.ஐ.ஏ, சிறை நிர்வாகமும் அனுமதிக்கவில்லை. கொரோனா காரணமாக கொலை செய்தவன், தாலி அறுத்தவனை எல்லாம் பரோலில், பிணையில் அனுப்பிய கோர்ட், இந்த 84 வயது கிழவனால் இந்தியாவுக்கே ஆபத்து என கருதியது. சமீபத்தில் சிறையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்கு அந்நோய் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. மே மாதம் மருத்துவமனையில் சேர்க்க சம்மதித்தனர் நெஞ்சில் ஈரம் உள்ள நீதிபதிகள். ஆனாலும் நிலைமை மோசமாகி ஜூலை 5, 2021-ல் அவர் இறந்தார். அவர் இறந்தார் என்பதை விட, தனது அரசுக்கு எதிராக பேசியதால், எழுதியதால் அவரை கொன்றுப்போட்டது மோடி, அமித்ஷாவால் இயக்கப்படும் கொடூர அரசு. இக்கொலைக்கு நீதிமன்றமும் சாட்சியாகிப் போனது. ஓய்வுக்கு பிறகு ராஜ்யசபா எம்.பி., கனவு காணும் நீதிபதிகள் இருக்கின்ற வரை நீதி செத்துக்கொண்டு தான் இருக்கும்.
His native place is near Trichy. in TN.LOCALS KNOW ABOUT HIM VERY LITTLE..