80 களில் ரெலோ இயக்கத்தில் இணைந்துகொண்டு ரெலோ இயக்கம் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கைது செய்யப்படும் வரை அவ்வியக்கத்தோடு இணைந்திருந்த ரெலோ இயக்கத்தின் முன்னை நாள் போராளி கிளிங்டன் எழுதும் தொடர் எதிர்வரும் வாரத்திலிருந்து இனியொருவில் பதிவாகிறது. இந்திய அரச படைகள் வழங்கிய பயிற்சி குறித்த அனுபவங்களிலிருந்து கைதாகி புலிகளின் சிறைகளிலிருந்த காலம் வரை விரிந்து செல்லும் தொடர்,
‘எமது இயக்கக் கொள்கை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடப்போம் என கையெழுத்திடுமாறு படிவம் ஒன்று தரப்படுகிறது. அதில் அனைவரும் தமது கையெழுத்துக்களைப் பதிவிடுகின்றனர். மட்டக்களப்பிலிருந்து இயக்கத்தில் இராணுவப்பயிற்சி பெற்றுக்கொள்ள என இந்தியாவிற்கு வந்திருந்த அவர் மட்டும் கேள்வியெழுப்பினார். இயக்கத்தின் கொள்கைகளும் கட்டுப்பாடுகளும் என்ன என்று ரெலோவின் இராணுவத்தளபதி ரமேஷை நோக்கிக் கேட்கிறார். ரமேஷின் முகம் விறைப்படைகிறது. சில நிமிட மௌனத்தின் பின்னர், மூன்று விடயங்களைக் கொள்கைகளாகவும் கட்டுப்பாடுகளாகவும் கூறுகிறார்.
1. சிகரட் புகைக்கக் கூடாது 2. திருமணம் செய்துகொள்ளக் கூடாது 3. தலைமை சொல்வதைக் கேட்கவேண்டும்.’
என்ற அதிர்ச்சிதரும் ஆரம்பப்புளிகளைக் கடந்து செல்கிறது.
என்.எல்.எப்.ரி என்ற இயக்கத்தில் ஆரம்பித்து ரெலோவோடு முடிவடைந்த அனுபவங்கள் ஈழ அரசியலின் இராணுவ ஆரம்பத்தை விசாரணைக்கு உட்படுத்துகின்றது.
வா கிளிண்டன் வா !! வந்து இந்த ஜோதியில் கலந்து கொள் ??