பீஹார்,ஒரிஸ்ஸா, சட்டீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் க்ரீன் கண்ட் போருக்கு எதிரான பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர் மாவோயிஸ்டுகள். இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பழங்குடி மாவோயிஸ்டுகள் உட்பட எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்சுகளுக்கு எதிரான போரை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. ஆனால் பழங்குடி மக்களின் காடுகளின் கனிமங்களுக்களை பன்னாட்டு நிறுவனங்களுக்காக தாரை வார்க்கத் துடிக்கும் இந்திய அரசும் ப.சிதம்பரமும் தங்களின் பூர்வீக வளங்களைக் காக்கப் போராடும் பழங்குடிகளையும் மாவோயிஸ்டுகளையும் கொன்றொழிக்கிறது. ஜனநாயக்த்தை நேசிக்கும் நாம் இந்திய அரசின் போர் வெறியையை வர்த்தக நலனை கண்டிக்கவேண்டும்.