“”தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில் அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்” என்கிற தலைப்பில் 71 பேர்கள் வெளிட்டுள்ள அறிக்கை, இன்று பல அரசியல் பிரதி வாதங்களை தோற்றுவித்துள்ளது.
21 வருடங்களுக்கு முன் யாழ்பாணத்தில் இருந்து புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீள் குடியேற்ற படவேண்டும் என்பதும், இதுவரை இவர்கள் குடியேற்ற படாமைக்கும் எதிர்காலத்தில் குடியேற்ற படுவதற்கும் தமிழ் மக்களே பொறுப்பு என்பதை இவ்வறிக்கை மையப்பொருளாக வைத்துள்ளது.
இலங்கை சிங்கள பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கும் இனவழிப்பிற்கும் உள்ளாகும் இனங்கள் தமது உள் முரண்பாடுகளை தீர்த்து கொள்வது ஐக்கியத்திற்கான ஒரு முன் நிபந்தனையாகும். வடகிழக்கு தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் தமக்கிடையில் தேசிய சிறுபான்மை என்னும் விடயத்தில் தத்தமது
பிரதேசங்களிலேயே தீர்வு காணவேண்டியது அவசியமாகும். அறிக்கையின் கால பொருத்தம் குறித்த விமர்சனத்துடன் அறிக்கை கொண்டுவரப்பட்டதன் நோக்கத்திற்கு அப்பால், யாழ் முஸ்லீம் மக்களின் பிரச்சனையை ஒரு சமூகமாக முதலில் வடகிழக்கு தமிழர் ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூக அக்கறை கொண்ட அனைத்து சக்திகளும் இவ் விடயத்தை தமது விவாத பொருளாக எடுத்து கொள்வது ஆக்க பூர்வ மானதாக அமையும்.
பொதுவாக இலங்கை தழுவிய அளவிலும், குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர் மத்தியிலும் புதிய கருத்து, அரசியல் உருவாக்கம்,அணிசேர்க்கை, வேலைத்திட்டம், புதிய தலைமை என்பனவற்றிற்கான காலகட்டமாக இன்றைய சூழல் இருப்பதால், உருவாகும் அணிகள், கருத்துகள் தொடர்பான நிதானமான, சரியான விமர்சனங்கள் அவசியம் என்று கருதுகிறோம். நபர்களில் இருந்து அரசியலை பார்ப்பது, பிரமுகர் சண்டைக்குள் அரசியலை நிறுத்துவது, முத்திரை குத்தி ஒதுக்குவது, அணி சாயம் பூசுவது என்பன தமிழர் அரசியலில் இன்று புரையோடிவரும் போக்குகளாகும். நலிவுற்றிருக்கும் தமிழ் சமூக சூழலில், இனவெறி அரசின் கிடுக்குப்பிடிக்குள் சிக்குண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இவ்வகை அணுகுமுறைகள், சமூகத்தின் அடிப்படை ஜனநாயகத் திற்காக போராட முன்வரும் சக்திகளையும் கூட இல்லாதொழிக்கும் தன்மை கொண்டது. இவை கடந்த காலத்தில் தமிழ் பேசும் மக்கள் மீது திணிக்கப்பட்டிருந்த துருவசிந்தனைமுறையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படவேண்டியிருக்கிறது.
அறிக்கையில் உள்ள யாழ் முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக தமிழ் சமூகத்தின் மீதான விமர்சனத்தை ஏற்றுக்கொள்வதுடன், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளில் அக்கறையுள்ள, சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள அனைத்து சக்திகளும் இதை பொறுப்பெடுத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வறிக்கையை வெளியிட்டவர்களிடம் சில கேள்விகள்:
சிங்கள பேரினவாத அரசினால் ஒடுக்கப்படும் ஓர் இனமாகிய முஸ்லீம்களது தேசிய உரிமை தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன?
குறிப்பாக யாழ்பாண முஸ்லீம் மக்களது மீள்குடியெற்றம் தொடர்பாக உங்களது தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள், நடவடிக்கைகள் என்னென்ன?
தமிழ் பேசும் ஒட்டுமொத்த சமூகமுமே இன்று தமது உரிமைகளை இழந்து ஒரு இராணுவ ஆட்சிக்குள் வாழும் சூழ்நிலையில், யாழ் முஸ்லீம் மக்களின் குடியேற்றம் தொடர்பான உங்களது அக்கறையின் குறிப்பான காரணம் என்ன?
சிங்கள பௌத்த பேரினவாத இலங்கையரசு வடகிழக்கில் தமிழ், முஸ்லீம் மக்களை இனரீதியாக கொடூரமாக ஒடுக்கி அவர்களது இன அடையளங்களை அழிக்கும் நடவிடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. வடகிழக்கு தமிழ் மக்கள் இனசுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் உலக அதிகாரங்களை சாட்சியாக வைத்து ஒரு இனப்படுகொலையையே நடத்திமுடித்திருக்கிறார்கள்; சமூக அக்கறையும் பெருந்தன்மையும் உள்ள இந்த 71 பேரும் இது தொடர்பாக என்ன செய்திருக்கிறீர்கள்? இலங்கை அரசை எதிர்த்த உங்களது நடவடிக்கைகளைஅல்லது கண்டனங்களை எங்களுக்கு பட்டியல் போட்டு காட்டமுடியுமா?
ஒடுக்கப்படும் இனங்களின் மீதான அக்கறையென்பது அவர்களை ஒடுக்கும் அரசிற்கு எதிரான குரலுடன் மட்டுமே வெளிப்படமுடியும். அதேநேரம் ஒடுக்கப்படும் தனது சொந்த இனத்தின் உரிமை பற்றி பேசாத ஒருவர் பேசும் சக இனத்தின் மீதான உரிமைக்குரல் என்பது நம்பிக்கைக்குரியதல்ல.
தமிழ் சமூகத்திற்கும் அதன் சிவில் அரசியல் பிரதிநிதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கும் 71 பேரும் யாழ் முஸ்லீம் மக்கள் மீது காட்டிய அதே அக்கறையுடன் வடகிழக்கு தமிழ் மக்கள், இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள்,மலயக மக்கள் மீதான அக்கறையை வெளிக்காட்டுவதுடன் அவர்களது உரிமைப்போரில் இலங்கை அரசை எதிர்த்த போராட்டதிற்கும் முன்வரவேண்டும் என்றும் எதிர்பார்கிறோம்.
அதிகார பசியோடு, மக்கள் நலனை முன்னிறுத்தாது தேசியம் பேசும் வியாபாரிகள், புலி எதிர் வியாபாரிகள்,அரசு எதிர் வியபாரிகள்,புலிஆதரவு வியாபாரிகள்,ஏன் மக்கள் நலனை பேசிக்கொண்டு தம் மேதாவித்தனதினூடே அதே மக்கள் மீது கருத்தியல் அதிகாரம் செலுத்த முனையும் வியாபாரிகளும் மக்கள் முன் அம்பலப்பட்டே ஆவார்கள்.
//இதுவரை இவர்கள் குடியேற்ற படாமைக்கும் எதிர்காலத்தில் குடியேற்ற படுவதற்கும் தமிழ் மக்களே பொறுப்பு என்பதை இவ்வறிக்கை மையப்பொருளாக வைத்துள்ளது. //
எந்த வரி இதைச் சொல்கிறது?
அறிக்கையின் சாராம்சமே இதுதான். அறிக்கை தொடர்பாக தீபம் தொலைக்காட்சியில் விவாதித்தவர்களும் இதைத் தான் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள் – கீரன் உட்பட,. கீரன், ரங்கன் போன்ற அறிக்கையின் கர்த்தாகள் இலங்கை அரசுடன் நேரடியாக வேலை செய்கிறார்கள். இவர்கள் ஆட்சி செய்யும் இடங்களில் மனித் உரிமை கதைப்பவர்களைக் கூட கொலைசெய்து அழித்து விடுகிறார்க>ள். இவர்களுக்கு என்ன இஸ்லாமிய பற்று? சமூக விரோதிகளையும் சேத்து ஒரு அறிக்கை, கையெழுத்து… என்னநாடகம் ஐயா இது. .. வவுனியாவில் கப்பம் வாங்கியா அறிக்கை விட்டீர்கள்?
இவன் சமூக விரோதி ஆகவே இவன் சொல்வதெல்லாம் பொய் / தவறானது என்று கூறுவது புலிகள் – அதற்கு முன்னர் ஏறத்தாழ சகல இயக்கங்களும் – அதற்கும் முன்னர் கூட்டணி கூறிவந்த “துரோகி” “தியாகி” சொற்தொடர்களையே நினைவுபடுத்துகின்றது.
நான் திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் கேட்கிறேன். மையப்பொருள் சாராம்சம் இதுதான் என நீங்கள் கருதுவதற்கான ஒரு வரியைக் காட்டுங்கள். மற்றப்படி யார் அறிக்கை விட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து தொடங்க வேண்டாம். கருத்தியல் ரீதியாக அறிக்கையை அணுகுங்கள். அதில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். மாறாக அறிக்கை கூறும் செய்தி சரியானதாக இருந்தால் நீங்களே அக் கோரிக்கையைக் கையில் எடுத்துப் பேொராடுங்கள். தவறான நோக்கங்களிற்காகக் கோஷம் போடுபவர்கள் சில நாட்களில் அம்பலப்பட்டுப் போவார்கள்.
தனிப்பட்டவகையில் நான் இந்த அறிக்கையை ஆதரிக்கிறேன் – அது முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்துகிறது என்பதற்காக. மற்றப்படி யார் யார் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள் போடுகிறார்கள் இனிமேல் போடப் போகிறார்கள் என்பதில் எனக்கு அக்கறை குறைவு
//இலங்கை சிங்கள பேரினவாத அரசின் ஒடுக்குமுறைக்கும் இனவழிப்பிற்கும் உள்ளாகும் இனங்கள் தமது உள் முரண்பாடுகளை தீர்த்து கொள்வது ஐக்கியத்திற்கான ஒரு முன் நிபந்தனையாகும். //
//யாழ் முஸ்லீம் மக்களின் பிரச்சனையை ஒரு சமூகமாக முதலில் வடகிழக்கு தமிழர் ஏற்றுக்கொள்ள வேண்டும். சமூக அக்கறை கொண்ட அனைத்து சக்திகளும் இவ் விடயத்தை தமது விவாத பொருளாக எடுத்து கொள்வது ஆக்க பூர்வ மானதாக அமையும்.//
உங்களது அறிக்கையில் உள்ள மேற்கண்ட கருத்துக்களை நான் வரவேற்கிறேன். நான் 71 பேரின் அறிக்கையை ஆதரிப்பது இதனாலேயே.
//இவ்வறிக்கையை வெளியிட்டவர்களிடம் சில கேள்விகள்//
ஆடுகளின் நலனுக்கு ஓநாய்களிடம் உத்தரவாதம் கேட்கின்றீர்கள், பின்னர் கேள்வியாக தாங்களே இதற்கு பதிலையும் தருகின்றீர்கள்.
இலங்கை அரசை எதிர்த்த உங்களது நடவடிக்கைகளைஅல்லது கண்டனங்களை எங்களுக்கு பட்டியல் போட்டு காட்டமுடியுமா? என்பதே அவை.
Print this page Calendar
January 2012 M T W T F S S
« Dec
1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31
ஆங்கில இணைப்புகள்
Dailymirror
Hindu
Infolanka
Island
Lankaenews
Lankanewsweb
Muslimguardian
Nation
Srilankaguardian
Sundaytimes
இணைப்புகள்
ஜோதிடம்
த.ம.க.க(சுவிஸ்)
தமிழ் மிரர்
தாயகம்
தேனீ
நாசம் நெற்
யாழ்மண்
வலம்புரி
வெற்றி
ஸ்ரீலங்கன் மிரர்
இந்திய பத்திரிகைகள்
கவிமலர்
தினத்தந்தி
தினமணி
தினமலர்
துக்ளக்
மாலைமலர்
தொலைக்காட்சிகள்
ஜெயா ரிவி
ரூபவாஹினி
பொது தகவல்கள்
எழில்நிலா
கூகுள் மொழிபெயர்ப்பு
சிறுவர் பக்கம்
சென்னை நூலகம்
தமிழ் அகராதி
தேவாரம்
பன்னிரு திருமுறைகள்
போட்டோ சொப்
மருத்துவம்
முத்துக்கமலம்
மனித உரிமை அமைப்புகள்
Amnesty Int
HRW
Uthr(J)
வானொலிகள்
எஸ்.எல்.பி.சி
கலசம்
சி.ரி.பி.சி
சூரியன் எவ்.எம்
ஜி.ரி.பி.சி.FM
தமிழ் அலை
பி.பி.சி.தமிழோசை
ரி.ஆர்.ரி.தமிழ் ஒலி
ரி.பி.சி
Current Time
07:00:04 pm
Top News
வருத்தத்தின் பின்னரும் திருத்தத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை![ஈழத் தமிழர் இதயங்களுக்கு! (பாகம் 8) – அர்ச்சுணன்]
ஈழத் தமிழர் இதயங்களுக்கு! (பாகம் 7) – அர்ச்சுணன்
ஈழத் தமிழர் இதயங்களுக்கு! (பாகம் 5) – அர்ச்சுணன்
ஈழத் தமிழர் இதயங்களுக்கு! (பாகம்- 4) – அர்ச்சுணன்!
ஈழத் தமிழர் இதயங்களுக்கு! (பாகம் 3)
தன்னினம் பலவீனப்படுவதினை தலைவர் சம்மந்தர் விரும்புகின்றார்!
Archive for Top News »
படையினரிடம் சரணடைந்த புலிகளின் முக்கியஸ்தர் ரமேஸ்!
தமிழ் மொழி மீது ஏன் உனக்கு இந்த கொலைவெறி!
நெடுந்தீவில் டக்ளஸ் அட்டகாசம்! பாராளுமன்றத்தில் திருமதி விஜயகலா மகேஸ்வரன் முழக்கம்!
இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்த ஆவணம்- வெளியீடு சணல்-4!
[இணைப்பு-1]இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் குறித்த ஆவணங்கள் அடங்கிய ஒளிப்பதிவை சணல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. சணல்-4 தொலைக்காட்சியில் வெளியான “இலங்கையின் படுகொலை களம்”இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும்
தமிழா நீ பேசுவது தமிழா?
சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன்காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கக் கோரி கொழும்பில் 24 ஆம் திகதி மெழுகுவர்த்திப் போராட்டம்!
January 21st, 2012
Save & Share
காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக மெழுகுவர்த்தி போராட்டம் நடத்தப்படவுள்ளது. காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேற்படி குழு விடுத்துள்ள அறிக்கையில், “காணாமல் போனவர்கள் தொடர்பாக எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கும் போராட்டம் ஒன்று காணாமற் போனோரை தேடியறியும் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரகீத் எக்னெலிகொட ஊடகவியலாளர் கடத்தப்பட்டு இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டும் ஏனைய காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் போன்றோரின் விடுதலை குறித்தும் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக காணாமற் போனவர்களின் புகைப்படங்களுடன் மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டம் ஆரம்பமாகி செக்கடித் தெரு அன்னை வேளாங்கண்ணி ஆலயம் வரை அமைதி ஊர்வலம் செல்லும்.
எனவே காணாமல் போனவர்களின் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தமது உறவுகளின் விடுதலை வேண்டி இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் காணாமற் போனவர்களின் புகைப்படங்களுடன் கலந்து கொண்டு, தமது உறவுகளை மீட்டெடுப்பதற்கான அழுத்தத்தைக் கொடுக்க எம்முடன் கைகோர்க்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது