1865 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அடிமை முறை சட்டரீதியாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. அதன் மறுபக்கத்தில் அடிமை முறை புதிய வழிகளில் சட்டரீதியாகச் செயற்படுத்தப்படும் அதிர்ச்சித் தகவல்கள் இன்று மக்கள் மத்தியில் முழுமையாக வெளிவர ஆரம்பித்துள்ளன. உலகில் அடிமைகளைச் சட்டரீதியாக இன்றும் பயன்படுத்தும் ஒரே நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் 13 வது திருத்தச்சட்டம் அடிமைகளை உருவாக்கி உற்பத்தியில் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது.
கடந்த 150 வருடங்களாக பல் தேசிய வர்த்தக நிறுவனங்களின் துணையுடன் நவீன அடிமைகள் இலவச உழைப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இன்றைய அமெரிக்க ஜனநாயகத்தின் உள்ளே பொதுவாக வெள்ளை நிறமற்ற உழைப்பாளிகள், ஊதியமற்ற, கட்டாய வேலையில், பலவந்தமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். நூறில் ஒரு அமெரிக்கர் இவ்வாறு அடிமையாக உழைப்பில் அமர்த்தப்படுகின்றார் என்ற மனித குல விரோதச் செயல் தொடர்பாக எம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உலக சனத்தொகையில் ஐந்து வீதமானவர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். உலகில் சிறையில் வாழ்பவர்களின் சனத்தொகையில் 25 வீதமானவர்கள் அமெரிக்கச் சிறைகளில் வாழ்கிறார்கள். உலகத்தில் எந்த நாடும் தனது சொந்த மக்களையே இவ்வளவு பெருந்தொகையாக சிறைகளில் அடைத்து வைத்திருந்ததாக வரராறில்லை. இந்த நிலையில் இலங்கையின் அரசியல் கைதிகளை அமெரிக்காவைப் பிடித்து விடுதலை செய்வோம் எனக் கூறும் தமிழ்த் தேசியக் கோமாளிகளை என்னென்பது?
சீன சனத்தொகை அமெரிக்காவிலும் ஐந்து மடங்கு அதிகம். ஆனால், சீனாவில் சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் அத் தொகை அரை மில்லியன் அதிகம்.
அதிலும் அமெரிக்காவில் அடைத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 86 வீதமானவர்கள் வன்முறையற்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்.
அமெரிக்காவில் கறுப்பு நிறத்தவரின் எண்ணிக்கை 13 வீதம். ஆனால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளவர்களில் 37 வீதமானர்கள் கறுப்பினத்தவர்கள்.
இச் சிறைக் கைதிகள் அனைவரும் ஊதியமற்ற உழைப்பில் ஈடுபடவேண்டும் என அமெரிக்காவின் பதின் மூன்றாவது திருத்தச்சட்டம் கோருகிறது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் கொள்ளை இலாபமீட்டும் பல்தேசிய வியாபார நிறுவனங்களால் ஊதியமற்ற வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
Bank of America,Bayer,Cargill,Caterpillar,Chevron,Chrysler,Coca Cola, Costco,John Deere, Eli Lilly and Company, Exxon Mobil, GlaxoSmithKline, Johnson and Johnson, K-Mart, Koch Industries, McDonald’s, Merck, Microsoft. Motorola , Nintendo. Pfizer, Procter & Gamble. Pepsi, ConAgra Foods. Shell , Starbucks, UPS, Verizon, WalMart, Wendy’s, Whool food ஆகிய நிறுவனங்களுக்காக சிறை அடிமைகள் ஊதியமற்ற கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
Texas Department of Criminal Justice இன் விதிகளின் அடிப்படையில் சிறைக்கைதி ஒருவர் காலை 3.30 இற்கு தனது நாளை ஆரம்பிக்கிறார். 4:30 இற்கு காலை உணவு வழங்கப்படுகிறது. பின்னர் உழைப்பில் ஈடுபடுகிறார். அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. சிறப்பாக வேலை செய்பவர்கள் நன் மதிப்பையும் வேறு வசதிகளையும் பெற்றுக்கொள்கிறார்.
உலகில் அதிகமாக மனித உரிமைகளை மீறும் பயங்கரவாத நாடான அமெரிக்காவில் வாழ்வதையே கனவு என்று எண்ணும் ஆசிய உயர் குடிகளின் மனிதாபிமானம் அமெரிக்க அதிகாரவர்க்கத்திற்கு இணையானது. இதற்கும் மேலாக இன்னும் அமெரிக்காவையும் அதன் ஊதுகுழலான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தையும் கூட்டிவந்து ஈழம் பிடித்துத் தருவாதாகக் கூறிய அரசியல் புலம்பெயர் கனவான்களுக்கும், இலங்கையில் தமிழர்களின் தலைவிதியை அமெரிக்காவிடம் ஒப்படைப்போம் எனக் கூறும் அரசியல் கட்சிகளுக்கும் இத் தகவல்கள் சமர்ப்பணம்.
www.tdcj.state.tx.us/faq/faq_cid.html#work
https://en.wikipedia.org/wiki/Incarceration_in_the_United_States